தனது 17 வயது மகளை அழைத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்திருந்தார், அந்தத் தந்தை. ‘என் மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிட்டாங்கம்மா’ எனக் கதறியபடியே பெண் இன்ஸ்பெக்டரிடம் புகார் கொடுத்தார். அடுத்த நிமிடம், சடக்கென எழுந்த அந்த பெண் இன்ஸ்பெக்டர், லத்தியை கையில் எடுத்துக்கொண்டு விறைப்பாகக் கிளம்பினார். `நீதி கிடைக்கப் போகிறது' என்று தந்தையும் மகளும் நிம்மதிப் பெரூமுச்சுவிட்டனர். ஆனால், அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள், காவலும் மருத்துவமும் கைகோத்துச் செய்த அவலங்கள். என்ன நடந்தது? “தன் மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிட்டதா தந்தை ஒருவர் கொடுத்த புகாரை இன்ஸ்பெக்டர் மகிந்தா அன்னகிறிஸ்டி விசாரிச்சாங்க. அதையடுத்து சென்னை திரிசூலத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவனை கைது செஞ்சாங்க. அதன்பிறகு, பெண்ணோட பெற்றோர்கிட்ட விசாரிச்சாங்க. அதுல, மறைமலர் நகர்ல இருக்கற வானவில் மெடிக்கல் சென்டர்ல பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஸ்கேன் பண்ணியதாகவும் சிங்கபெருமாள் கோவில்ல இருக்கற தனியார் மருத்துவமனையில கருக்கலைப்பு நடத்தியதும் தெரியவந்துச்சு. உடனே இன்ஸ்பெக்டர் மகிந்தா, வானவில் மெடிக்கல் சென்டருக்குப்போய் டாக்டர் உமாமகேஸ்வரியை மிரட்டி 2 லட்சமும் தனியார் மருத்துவமனைக்குப்போய் டாக்டர் பராசக்தியையும் மிரட்டி 10 லட்சமும் வாங்கியிருக்காங்க. பணம் கைக்கு வந்துடுச்சுன்னு மகிந்தா மகிழ்ச்சியா இருந்த சமயத்துலதான் அந்த டுவிஸ்ட் நடந்தது'' எனக் கூறிய காவல்துறை அதிகாரி ஒருவர், அடுத்த நடந்த சம்பவங்களை விவரித்தார்.. “இன்ஸ்பெக்டர் மகிந்தா லஞ்சம் வாங்கின விஷயம் வெளிச்சத்துக்கு வந்ததால, அவங்களை தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் சஸ்பெண்ட் செய்தார். அதையடுத்து மகிந்தாவையும் அவருக்கு உடந்தையா இருந்த வக்கீல் ஒருவரையும் கைது செய்தாங்க. இதுல மகிந்தா சிக்கினது எப்படிங்கறதுதான் சஸ்பென்ஸாக இருந்துச்சு. அதுவும் தெரியவந்திடுச்சு” என்றவர், “மகிந்தாவுக்கு 10 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்த டாக்டர் பராசக்தி, ஒரு போலீஸ் சர்ஜன், அதாவது தடயவியல் மருத்துவர். அதுவும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில தடயவியல் துறைக்குத் தலைவர். அவரின் கணவர் மோகன் குமார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில மயக்கவியல் மருத்துவர். தடயவியல் துறையில உள்ளவர் என்பதால பராசக்திக்குத் தெரியாத காவல் உயரதிகாரிகளே இல்லை. மகிந்தா தன்னை மிரட்டி 10 லட்சம் ரூபாய் வாங்கியதை, தனக்குப் பரிச்சயமான காவல்துறை அதிகாரிகள்கிட்டே சொல்லியிருக்காங்க. அதைத் தொடர்ந்துதான், அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன” என்றார் விளக்கமாக. “தன்னை மிரட்டி லஞ்சம் வாங்கின இன்ஸ்பெக்டரை சிக்கவைச்ச டாக்டர் பராசக்திக்கு, அதுவே எதிராகவும் மாறிடுச்சு. இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கினது உறுதியாகி அவர் கைது செய்யப்பட்டிருக்காங்க. அப்படின்னா, பராசக்தி சட்டத்துக்குப் புறம்பா கருக்கலைப்பு செய்ததும் உறுதியான தகவல்தானே? அவர் மேலும் நடவடிக்கை எடுக்கணும்னு புகார் கிளம்பிடுச்சு. இதுகுறித்து விசாரிக்க, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக இணை இயக்குநர் தீர்த்தலிங்கம் மற்றும் குடும்பநலத்துறை துணை இயக்குநர் மலர்விழி தலைமையிலான டீமுக்கு உத்தரவிட்டார், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ். ஆனாலும், சிக்காம தப்பிச்சுகிட்டே இருக்காங்க, பராசக்தி” என்கிறார், அரசு மருத்துவர் ஒருவர். ``மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?'' என மறைமலை நகர் ஏ.சி.யும் விசாரணை அதிகாரியுமான ஜெயராஜிடம் கேட்டபோது, “டாக்டர்கள் பராசக்தி, உமா மகேஸ்வரி ஆகியோர் சட்டவிரோத அபார்ஷன் செய்ததாக விசாரணையில் தெரியவில்லை. அப்படி ஒரு பொய்யைச் சொல்லி இன்ஸ்பெக்டர் மகிந்தா மிரட்டிப் பணம் பறித்துள்ளார்” என்றார், இயல்பாக. ``ஏ.சி சொல்வது உண்மையா?'' என ஜே.டி தீர்த்தலிங்கத்தை தொடர்புகொண்டு பேசினோம். “வானவில் மெடிக்கல் சென்டர் மற்றும் சக்தி மருத்துவமனையின் ஆவணங்களை சோதித்தபோது, அப்படியொரு பேஷண்ட் அங்கே சென்றதற்கான எந்த ஆவணமும் இல்லை. `சி.சி.டி.வி.கேமராவும் ஒரு மாதமாக வேலை செய்யவில்லை' என்கிறார்கள். ஆனால், சிறுமியின் பெற்றோர் அந்த மருத்துவமனையில்தான் கருக்கலைப்பு செய்ததாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள். அதனால், ‘காவல்துறை இன்னும் முழுமையாக விசாரிக்கவேண்டும்’ என்று கலெக்டரிடம் அறிக்கை கொடுத்திருக்கிறேன்”என்கிறார். மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸிடம் கேட்டபோது, “சுகாதாரத்துறை ஜே.டி அளித்த விசாரணை அறிக்கையை தாம்பரம் போலீஸ் கமிஷனருக்கு அனுப்பியுள்ளேன். அந்த அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் பேசியபோது, “டாக்டர்கள் தொடர்பான நடவடிக்கையை சுகாதாரத்துறைதான் எடுக்கும். இல்லீகல் அபார்ஷன் நடந்தது தெரியவந்தால் ஜே.டி.தான் மருத்துவமனையின் லைசென்ஸை கேன்சல் செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று சுகாதாரத்துறையின் பக்கம் கை காட்டினார். ஜே.டி தீர்த்தலிங்கத்தை நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடவேண்டிய டி.எம்.எஸ் சண்முகக்கனியை தொடர்புகொண்டபோது, நம்மிடம் பேச மறுத்துவிட்டார்..வானவில் மெடிக்கல் சென்டர் நடத்திவரும் டாக்டர் உமாமகேஸ்வரியிடம் பேசியபோது, “அந்தச் சிறுமிக்கு வயிற்றுவலி என்று வந்ததால்தான் நாங்கள் ஸ்கேன் செய்தோம். ஆனால், பெண்ணின் வயதை ஆதார் முதலான ஆவணங்கள் மூலம் உறுதி செய்யவில்லை” என்றார், கேஷுவலாக. சக்தி மருத்துவமனையின் உரிமையாளர்களான டாக்டர் மோகன்குமார், டாக்டர் பராசக்தி ஆகியோரை பலமுறை தொடர்புகொண்டபோதும் பேச மறுத்துவிட்டனர். இதுகுறித்து, குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் தோழமை தேவநேயனிடம் பேசியபோது, “சிறுமிக்கு கர்ப்பம் தொடர்பான ஸ்கேன் செய்யும்போதே ஆதார் மூலம் வயதை கண்டறியாதது சட்டப்படி குற்றம். 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அபார்ஷன் செய்வது தவறில்லை. ஆனால், அவர்களது உயிருக்கு ஆபத்து இல்லாமல் சட்டப்படி, விதிகளின்படி செய்யவேண்டும். டாக்டர் பராசக்தி தடயவியல் மருத்துவர், மகப்பேறு அறுவை சிகிச்சை நிபுணர் செய்யவேண்டியதை இவர் எப்படிச் செய்திருப்பார்? அப்படி அவர் செய்திருந்தால், அந்தக் குழந்தையின் உயிருக்கு என்ன உத்தரவாதம்? கர்ப்பம் கலைக்க வரும் சிறுமிகள் குறித்த விவரத்தை குழந்தைகள் நலக் குழுவுக்கோ, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கோ தெரியப்படுத்தவேண்டும். அப்போதுதான், யாரால் துன்புறுத்தப்பட்டார் என்பதைக் கண்டுபிடிக்க முடியும். அவ்வாறு தகவல் கொடுக்கவில்லை என்றால் அது இல்லீகல் அபார்ஷன்தான். அதற்குத் துணைபோகும் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார், உறுதியாக. தங்களைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் மருத்துவர்கள், பாதிக்கப்பட்ட சிறுமிக்காக பரிதாபப்பட்டிருப்பார்களா என்பது கேள்விக்குறியே! - மனோ சௌந்தர்