சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி நடத்திவந்த இறுதி போரில், பின்னடைவு ஏற்பட்டு பெங்களூரு நோக்கி ஓட, அவருக்கு தோளோடு தோள் நின்ற தமிழர் முன்னேற்றப் படை நிறுவனத் தலைவர் வீரலட்சுமிக்கோ உடல், மனம் எங்கும் ரணம். அதனால் ஏற்பட்ட சினத்தால், ‘சீமான் வடமாவட்டங்களில் இனி தலைகாட்டமுடியாது’ என வெடிகுண்டாய் முழங்கி வரும் வீரலட்சுமியிடம் பேசினோம்.விஜயலட்சுமிக்கு ஆதரவாக இருந்தது நீங்கள்தான். ஆனால், உங்களையே தாக்கி அவர் வீடியோ போட்டிருக்கிறாரே?‘வீரலட்சுமியுடன் ஒன்றுசேர்ந்து சீமானை ஒண்ணும் இல்லாமல் ஆக்கப்போகிறேன்’ என ஓப்பனாக சொன்னவர்தான் விஜயலட்சுமி. ஆனால், திடீரென என்னை கண்டித்து வீடியோ பதிவுகளை போட்டார். அதற்கு என்ன காரணம் என விசாரித்தேன். அப்போதுதான் சீமான் தரப்பு ஆட்கள் விஜயலட்சுமியை தொடர்பு கொண்டு, ‘இதோடு முடித்துக்கொள்வோம். அண்ணன் உங்களுக்கு செட்டில் செய்ய விருப்பப்படுகிறார்’ எனச் சொல்லி ‘காம்ப்ரமைஸ்’ செய்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது.வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா?விஜயலட்சுமிக்கு தேவை ஒரு வாழ்க்கை. இன்னமும் அவர் சீமானை நேசிக்கிறார். ‘சீமான் என்னை தொடர்புகொண்டாலோ, நேரில் பார்த்துப் பேசினாலோ நான் ‘சரண்டர்’ஆகிவிடுவேன்’என என்னிடம் சொன்னார். இப்படிப்பட்ட நிலையில்தான் சீமான் போன் பண்ணி ‘செல்லம்’னு பேசி இருக்கார். உடனே ‘மாமா’என அழுதுவிட்டார். இதனால்தான் அவர் பேசியவுடன் சரண்டர் ஆகிவிட்டார். நான் செய்த உதவியை அவர் மறந்துவிட்டார். ஆனாலும் அவருக்காகத்தான் நான் பேசுவேன். சீமான் கொடுத்த பணம்தான் அவருக்கு பெரிதாகத் தெரிகிறது. சீமான் மிகப்பெரிய அளவில் அவரை செட்டில் செய்துவிட்டார். இனி சீமானுக்கு எதிராக எந்த காலகட்டத்திலும் விஜயலட்சுமி வரவும் மாட்டார். பேசவும் மாட்டார்.விஜயலட்சுமி விவகாரத்தில் தலையிட்ட உங்களுக்கு ‘நெகட்டிவ் இமேஜ்’ ஏற்பட்டுள்ளதாமே?தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் தொடர்ந்து நடக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு களத்தில் இறங்கி இருக்கிறேன். விஜயலட்சுமி மட்டும் அல்ல, எந்த பெண்ணாக இருந்தாலும் உதவிகள் செய்வேன். இதனால் ‘நெகட்டிவ் இமேஜ்’ ஏற்பட்டாலும் கவலையில்லை.நீங்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்துகளை செய்கிறீர்களாமே?எந்த தொழிற்சாலையில் நான் கட்டப்பஞ்சாயத்து செய்து ‘கட்டிங்’ வாங்கினேன் என்று ஆதாரத்துடன் வெளியிட சொல்லுங்கள். பிறகு யார் என்ன சொன்னாலும் நான் தலைவணங்கி கேட்டுக்கொள்கிறேன்.உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்ததாக சொல்கிறாரே சீமான்?இவர் ஒரு துணை நடிகையுடன் நெருக்கமாக பழகிய வீடியோ ஒன்று என்னிடம் இருக்கிறது. அதனால் என்னை துணை நடிகை என்றார். தரம் தாழ்ந்து பேசினார். சீமானுக்கு எதிராக பேசினால் நாம் தமிழரில் இருப்பவர்கள் அசிங்கமான வேலை செய்கிறார்கள். அதாவது 300 சிம்கார்டுகளை வைத்துக்கொண்டு சீமானுக்கு எதிரானவர்களை தொடர்புகொண்டு ஆபாசமாகப் பேசி மன அழுத்தத்தை ஏற்படுத்துவார்கள். ஏனெனில், அவர்கள் தலைவன் அப்படிப்பட்ட தரத்தை உடையவர். - ஜி.ஜி.கே. படங்கள் : ம.செந்தில்நாதன்