Reporter
ஸ்கிராப் எடு கொண்டாடு! சென்னையை மிரட்டும் ரவுடிகள் ராஜ்ஜியம்
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தை சேர்ந்த சோட்டா வினோத், ரமேஷ் ஆகியோரை ஆகஸ்ட் 1ம் தேதி கூடுவாஞ்சேரி போலீஸார் என்கவுன்ட்டர் செய்தனர். வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸாரின் வாகனத்துடன் மோதியதோடு, எஸ்.ஐ.யை ஆயுதங்களால் தாக்க முயன்ற ரவுடிகளை என்கவுன்ட்டர் செய்ததாக போலீஸ் கூறுகிறது. `உண்மையில் நடந்தது வேறு' என்கிறது, ரவுடிகள் தரப்பு.