பிரபாகரனை இலங்கை ராணுவம் ஒருமுறைதான் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அவரை வைத்து அரசியல் செய்பவர்களோ பிரபாகரன் உயிருடன் இருப்பதாக சிறுமைப்படுத்தி அவரது ஆளுமையை மீண்டும் மீண்டும் கொலை செய்கிறார்கள். அந்த வகையில் இப்போது பிரபாகரனின் மனைவி மதிவதனியின் அக்கா. `தலைவரைப் பார்த்தேன்... சந்தோஷமாக இருக்கிறார்' என்று பேசிய வீடியோவும் ஆடியோவும்தான் ஈழத் தமிழர்களின் லேட்டஸ்ட் டாபிக்.`புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். அவர் உரிய நேரத்தில் வெளிப்படுவார்' என்று பிப்ரவரி மாதம் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கொளுத்திப் போட்டார். அவர், பற்றவைத்த நெருப்பில் நெய் வார்ப்பதுபோல் பிரபாகரனின் மைத்துனி தாரகா ஹரித்தரன் வெளியிட்ட வீடியோ, இலங்கை அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.சமூக ஊடகங்களில் வெளிவந்த அந்த வீடியோவில் தாரகா பேசியிருப்பது இதுதான்: `நான் தாரகா ஹரித்தரன், தந்தையின் பெயர் ஏரம்பு, தாயாரின் பெயர் சின்னம்மா. நாங்கள் பூங்கொடியை பிறப்பிடமாகக் கொண்டவர்கள். கடந்த 2009-ம் ஆண்டு நடந்த போரின் காரணமாக எனது தங்கை மதிவதனியும் அவரின் மகள் துவாரகா மற்றும் உறவினர்கள் இறந்துவிட்டதாக இலங்கை அரசாங்கம் கூறியது. கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் உயிருடன் இருப்பதாக வந்த செய்தியை அறிந்தேன். பின்பு அவர்களை நேரில் சந்தித்து உரையாடி உணவருந்திவிட்டு வந்துள்ளேன்' என்றார்.``இந்த வீடியோவில் பேசியிருப்பவர் யார்?'' என லண்டனில் வசிக்கும் முன்னாள் போராளி ஒருவரிடம் கேட்டபோது, ``அவர் பிரபாகரனின் மனைவி மதிவதனியின் உடன்பிறந்த அக்காதான்'' என்பதை உறுதிசெய்தார். அத்துடன் இலங்கை ஊடகத் துறையைச் சேர்ந்த ஒருவரும் தாரகாவும் உரையாடும் ஆடியோ ஒன்றையும் நமக்கு அனுப்பிவைத்தார்.அந்த உரையாடல் இதுதான்:தாரகா: நான் ரொம்ப சந்தோஷத்தில் இருக்கன். தலைவர், மதிவதனி, துவாரகா ஆகியோரைப் பார்த்துப் பேசினேன்.ஊடகவியலாளர் (சற்று பதற்றக்குரலில்): என்னது தலைவர் உயிருடன் இருக்கிறாரா? நீங்கள் பார்த்தியளா?தாரகா : ஆம், தலைவரையும் பார்த்தேன். சந்தோஷமாக இருக்கிறார். அவரின் உடலில் எந்தக் காயங்களும் இல்லை. நன்றாக நடக்கக்கூடிய நிலையில் அவர் இருக்கிறார். பாதுகாப்பு கருதி அவர்கள் இருக்கும் இடத்தைச் சொல்லமுடியாது. மதிவதனியுடன் 150 போராளிகள் இருக்கிறார்கள். அவர்கள், `அண்ணியை விட்டுப் போகமாட்டோம்' என்று சொல்கிறார்கள். துவாரகா ரொம்ப ஆக்டிவாக இருக்கிறாள். அவள்தான், `இந்த விஷயத்தை வெளியில் போய்ச் சொல்லுங்கள்' என்று சொன்னாள்.இப்படி முடிகிறது அந்த ஆடியோ.இதுகுறித்து தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சித் தலைவர் வியனரசு கூறுகையில், ``அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற 11வது உலகத் தமிழ் மாநாட்டுக்குப் போயிருந்தேன். அங்கு பல ஈழத்தமிழ் அறிஞர்கள், முன்னாள் போராளிகள், இறுதிக்கட்ட யுத்தத்தில் பிரபாகரனோடு இருந்தவர்களையும் சந்தித்தேன். அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக சொல்வது, `தலைவர் சாகவில்லை. எங்கேயோ உயிருடன் இருக்கிறார்' என்பதுதான்.2009, மே மாதம் 18 அன்று முள்ளிவாய்க்காலில் காட்டப்பட்டது பிரபாகரன் உடல் அல்ல. ஆனால், கருணா உறுதி செய்ததால் சிங்கள ராணுவம் நம்பிவிட்டது. இது பிரபாகரன் செய்த தந்திரம். மே 14ம் தேதியே பிரபாகரன், பொட்டு அம்மானுடன் ஈழத்தில் இருந்து தப்பிச் சென்றுவிட்டார்'' என்றவர்,``கடந்த 2002ம் ஆண்டு புலிகளுக்கும் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதற்காக புலிகளின் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் இலங்கை வந்தார். ஆனால், திடீரென பேச்சுவார்த்தை முறிந்தது. உடனடியாக ஆண்டன் பாலசிங்கம், அவரின் மனைவி அடேல் பாலசிங்கம் ஆகியோரை கைதுசெய்ய அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு ராணுவம் விரைந்தது. ஆனால், அங்கு அவர்கள் இல்லை. .இரண்டு நாள்களுக்குப் பிறகு இந்திய எல்லையில் புலிகளின் சரக்கு கப்பலை இந்திய ராணுவம் சுற்றிவளைத்தது. இரண்டு நாட்கள் சோதனை செய்தும் முடிவில் எதுவும் சிக்கவில்லை. அதற்குள் பிரபாகரன், பழ.நெடுமாறனை தொடர்புகொண்டு விஷயத்தைச் சொல்ல, அவர் தனக்குத் தெரிந்த வட்டாரத்தில் பேசி, கப்பலை விடுவிக்க முயற்சிகளை மேற்கொண்டார்.அதன் தொடர்ச்சியாக அந்தக் கப்பலும் விடுவிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து நெடுமாறனை லண்டனில் சந்தித்தார், ஆண்டன் பாலசிங்கம். அப்போது, `என்னை காப்பாற்றியவரே வருக' என்றுகூறி வரவேற்றார். நெடுமாறனுக்கு குழப்பம்.அதன்பிறகு, கப்பல் பிடிபட்ட சம்பவத்தை நினைவூட்டி, `அந்தக் கப்பலில்தான் நானும் என் மனைவியும் ஒளிந்திருந்தோம்' என்று கூறியதும் பழ.நெடுமாறனுக்கு வியப்பு. இதே சம்பவம், பிரபாகரனுக்கும் பொருந்தும்'' என்றார்.அதேநேரம், தாரகாவின் பேட்டி குறித்துப் பேசும் மாஜி போராளி ஒருவர், ``பழ.நெடுமாறனை ஏமாற்றிய அதே டீம்தான், இந்த டுபாக்கூர் வேலையையும் செய்திருக்கிறது. 2009 வரை இயக்கத்தின் நிதிப் பொறுப்பாளர்களாக இருந்து பணத்தை ஆட்டையைப் போட்டுவிட்டு எஸ்கேப்பான அந்த டீம், `முதலில் துவாரகாவை காட்டுகிறோம்' என்று சொல்லி, பர்தாவால் முகத்தை மூடியபடி இருந்த ஒரு பெண்ணைக் காட்டி, `இதுதான் துவாரகா' என்று சொன்னார்கள்.துவாரகாவுக்கு டிரைவிங் சொல்லிக்கொடுத்த போராளியின் பெயரே அந்தப் பெண்ணுக்கு தெரியாததால், `இது ஒரு ஏமாற்று வேலை' என்பது நிரூபணமானது. தற்போது உடல் உபாதைகளுடன் மருத்துவ சிகிச்சையில் இருக்கும் மதிவதனியின் அக்கா தாரகாவும், அந்த டீமின் வலையில் சிக்கியிருக்கிறார்.மதிவதனியையும், துவாரகாவையும் பார்த்தேன் என்று வீடியோ வெளியிட்டவர், நான்கு நாட்களுக்குப் பிறகு பேசிய ஆடியோவில், `தலைவரையும் பார்த்தேன். 100 அல்லது 150 போராளிகளும் இருக்கிறார்கள்' என்று சொல்வதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த வீடியோவுக்குப் பின்னர் அவரை தொடர்புகொண்ட பலரின் போன்கால்களை அவர் எடுக்கவே இல்லை. அவர் சொல்வது உண்மையாக இருந்தால் தைரியமாக தொலைக்காட்சிகளில் பேசலாமே'' என்றார்.எப்போதுதான் சர்ச்சை ஓயுமோ? - அ.துரைசாமி