ஓ.பன்னீர்செல்வம் இனி கட்சி ஆரம்பித்து அதனை வளர்த்து, அது பூத்துக் காய்த்து கனி தரும்வரை பொறுமை வேண்டும், நல்ல மனசு வேணும். அது, பன்னீரிடம் கம்மிதான். ஜெ., மரணப் படுக்கையில் இருக்கும்போது அ.தி.மு.க.வை வசப்படுத்தி விரட்ட வேண்டியவர்களை விரட்டியிருப்பார். அப்போ வாய்ப்பைவிட்டவர் இனி கட்சி தொடங்கி... கண்ணைக் கட்டுது... ஆளை விடுங்க சாமி!-குஞ்சன்விளை ரவி, கன்னியாகுமரி. ‘ஒரிஜினல் பாதி... டூப்ளிகேட் மீதி! அரசுப் பணத்தில் அடுக்குமாடி... கல்லா கட்டிய பெண் ஊழியர்’ என்ற கட்டுரை அரசு அலுவலகங்களில் அரங்கேறி வரும் பகற்கொள்ளைகளுக்கு கண்கூடான உதாரணம். திட்டக்குடி சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலகத்தில் நடந்திருக்கும் சர்வகொள்ளைகளுக்கு அந்த அலுவலக தற்காலிக ஊழியரான அகிலா மட்டும் காரணமாக இருக்க வாய்ப்பில்லை. எனவே, அகிலா நீட்டிய பேப்பரில் கையெழுத்துப் போட்ட அவரது பாஸ்களுக்கும் பங்கு இருக்கக்கூடும்.-ஆர்.வி., கரூர். ‘வீக் எண்ட் பார்ட்டி விதவிதமாய் ப்யூட்டி கோலிவுட் நடிகைகள் ஃபுல்டைம் டூட்டி’ ரைமிங் சூப்பரா இருந்தாலும் அதில் அடங்கிய நியூஸ் வேற லெவல். போதை கலாசாரத்துக்கு கோலிவுட் கூடாரமாக இருப்பதை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த குமுதம் ரிப்போர்ட்டரின் பங்கு முற்றுப்புள்ளியை தேடித் தருமா? இந்த பூனைக்கு மணி கட்ட ஆட்சியாளர்கள் முழுவீச்சில் இறங்கினால்தான், போதை கலாசாரத்தில் இருந்து சமூகம் பிழைக்கும்!-பாரதிமுருகன், மணலூர்பேட்டை..தமிழ்நாடு முன்னேற்ற முன்னணி! பன்னீருக்கு பா.ஜ.க. புது அசைன்மென்ட்!’ வேற லெவல்தான். தமிழகத்தில் எப்படியாவது ஐந்து தொகுதியை கூட்டணிக் கட்சிகளோடு பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜ.க விளையாடுகிறது. அ.தி.மு.க அணிகளை ஒன்றுசேர்க்க முடியாத நிலையில் எடப்பாடியை தன்பக்கம் வைத்துக்கொண்டு ஓ.பி.எஸ் மூலம் காயை நகர்த்தப் பார்க்கிறது, பா.ஜ.க., ஏற்கெனவே இதேபெயரில் கொஞ்சம் மாற்றத்துடன் கட்சி நடத்திய சிவாஜி கணேசன் கதை, ஓ.பி.எஸ்ஸுக்குத் தெரியாதா? எப்படியோ களத்தில் ஓ.பி.எஸ். இருக்காரு... அவ்வளவு தான்.-தே.அண்ணாதுரை, கம்பம். கோவை மேயர் கல்பனா, `தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அருகில் உள்ள வீட்டின் மாடியில் யூரினை கொட்டுறாங்க' என்று சொல்வது பொய். `என் வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள் செய்யும் விஷமம்தான்' என்று சொல்வது சரியா என்பதை காவல்துறைதான் விசாரித்து சொல்லவேண்டும்.-சு.ஆறுமுகம், கழுகுமலை