‘கோவைக்கு விஜய்யின் சீக்ரெட் விசிட்!’ கட்டுரை கலக்கிட்டீங்க... அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். தடையில்லை. ஆனால், அடித்தட்டு மக்களுக்கு பணிசெய்ய நல்ல எண்ணம் வேண்டும். ரகசிய சர்வே எடுக்காமல் அரசியலுக்கு வந்து மக்களுக்காகத் தொடர்ந்து பாடுபட வேண்டும். அதைவிடுத்து, சினிமாவில் சம்பாதித்ததை காப்பாற்ற நாடகம் ஆடக்கூடாது. காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ரகசிய சர்வே நடத்தி அரசியலுக்கு வரவில்லை. இதனை உசுப்பிவிடப்பட்ட விஜய் புரிந்து கொள்ளவேண்டும்! -தே.மாதவராஜ், இராமநாதபுரம். ‘புகார் பெட்டி பகீர் திட்டம் முதல்வன் ஸ்டைலில் அண்ணாமலை’ -எல்லாம் சரிதான். ஆக மொத்தத்தில் ‘100 நாட்கள் காமெடி ஸ்டார்ட்... கவுன்ட் டவுன் ரெடி’ என்பதுபோல பல ஊடகங்களில் வலம் வருவார்போல இருக்கிறதே. எது எப்படியோ 168 நாட்களுக்குப் பிறகு பா.ஜ.க.வின் இமேஜ் உயருகிறதோ, இல்லையோ அண்ணாமலையின் இமேஜ் 1000 வாலா பட்டாசா? நமத்துப்போன வெடியா? என்பதை தமிழகம் பார்க்கத்தானே போகிறது. அதுவரை பொறுத்திருப்போம். -பாரதிமுருகன், மணலூர்பேட்டை .நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கப் பணிக்காக பல வருடங்களுக்கு முன்பே நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அவற்றில் நெல் விளைவித்தது விவசாயிகளின் சொந்தப் பொறுப்பில். தவிரவும், திரும்பத் திரும்ப நோட்டீஸ் கொடுத்த பின்பே ஜே.சி.பி. இயந்திரங்களை பயன்படுத்தியுள்ளனர். பா.ம.க.வுக்கு இது ஒரு நல்வாய்ப்பாக அமைந்துவிட்டது என்பதே நிஜம். கைது சம்பவத்தின்போது அன்புமணி போஸ் கொடுப்பதை பார்க்கும்போதே புரியும். -ஏ.ஸ்ரீவாஸ், ஆலப்பாக்கம் ‘100 சதவிகிதம் மானியம்... 100 சதவிகிதம் பொய்! குறுவை சாகுபடி திட்ட கோல்மால்’ கட்டுரையைப் படித்ததும், உலகுக்கே உணவு உற்பத்தி செய்து தரும் அப்பாவி விவசாயிகளுக்கு விடிவே கிடையாதா? என வாய்விட்டுக் கதறத் தோன்றியது. விவசாய இடுபொருட்களுக்கு அரசு அளித்துவரும் மானியங்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய துயரம், திருவாரூர் மாவட்ட விவசாயிகளுக்கு மட்டுமல்ல, டெல்டா விவசாயிகள் அனைவருக்கும்தான். என்ன செய்வது? -ஆர்.வி., கரூர் தமிழக அரசியலில் பரபரப்பான கூட்டணியைத் தொடங்கி பார்வையாளர்களை திரும்பிப் பார்க்கவைத்த மூப்பனாரின் புதல்வர் ஜி.கே.வாசன் சொத்துகளை விற்று அரசியல் செய்கிறார் என்ற த.மா.கா. யுவராஜாவின் பேட்டி மனதை துவளச் செய்தது. குறிஞ்சிப் பூ மாதிரி ஜி.கே.வாசனின் அரசியல் பாதை இனிவரும் காலங்களில் வேகம் எடுக்கட்டும். -எஸ்.மந்திரமூர்த்தி, புதுச்சத்திரம்