மாமன்னன் படத்தைப் படமாகப் பார்த்தாலும் சரி, பாடமாகப் பார்த்தாலும் சரி… எந்தப் பக்கத்தில் நின்றாலும் எழும் கேள்விகள், அங்கு இங்கு சுற்றி தி.மு.க.வுக்கு எதிராகவே நிற்கும். பாம்புபோல் காலைச் சுற்றிவிட்டது ..இனி கடிக்காமல்விட்டால் சரிதான்!-குஞ்சன்விளை ரவி, கன்னியாகுமரி "அத்திப்பூ அதிகாரி" இறையன்பு! கட்டுரை நெகிழ்ச்சிஅடையச்செய்தது.`இவரா தலைமைச் செயலாளர்?' என்று புருவங்களை உயர்த்தும் அளவுக்கு எளிமையான மனிதர். பதவியிலிருந்து அவர் ஓய்வு பெற்றுவிட்டாலும், தனது செயல்களால் தமிழக மக்களின் மனங்களில் அவர் என்றென்றும் வீற்றிருப்பார்.-எஸ்.மந்திரமூர்த்தி,புதுச்சத்திரம்.துணிக்கடையில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்து வீடியோ எடுக்கும் அநாகரிகச் செயல் ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கிறது. கடுமையான தண்டனைகள் இல்லாவிட்டால் இதனை முழுமையாக ஒழிக்க முடியாது. Hidden camera finder என்ற பேனா அளவிலான கருவியை பெண்கள் எப்போதும் தங்களுடன் வைத்துக் கொள்வதே இப்போதைக்கு சரியான பாதுகாப்பு!-ஆர்.எஸ்.மனோகரன், முடிச்சூர்.ஸ்டாலின் மிட்நைட் மீட்டிங்...செங்கோட்டையில் ஃபாஸ்டிங்...ஆளுநர் ரிவர்ஸ் சீக்ரெட் ! கட்டுரை செம தூள்! செந்தில் பாலாஜி கைது நடவடிக்கைக்கு பல தரப்பிலும் எதிர்ப்பு வந்தாலும் முதல்வர் ஸ்டாலின் அவற்றைப் பொருட்படுத்தாமல் எதிர்க்கட்சிகளோடு ஆலோசனை செய்து, அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கி ஆளுநரின் உத்தரவை வாபஸ் வாங்கும் அளவுக்கு வெற்றியும் கண்டுவிட்டார் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.-தே.மாதவராஜ்,கோயமுத்தூர்..பெட்ரோல், டீசல்,கேஸ்…ஏன் தக்காளி, காய்கறிகள் விலைகூட ஏறிவிட்ட நிலையில், இப்போது அரசு பீக் ஹவரில் மின் கட்டணத்தையும் உயர்த்த இருப்பது மக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது. ‘இருள்மயமான எதிர்காலம் மக்கள் உள்ளத்தில் தெரிகிறது!’ என்று நீர் உரைத்தது உண்மை.-சு.ஆறுமுகம், கழுகுமலை.இசை வெளியீட்டுவிழாவில் மாரி செல்வராஜ் கொளுத்திப் போட்டதே, மாமன்னனின் கூடுதல் களேபரத்துக்குக் காரணம். நுணலும் தன் வாயால் கெடும் என்பதை மாமன்னன் நிகழ்வுகள் மூலம் உணர்ந்தோம்.-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணபுதூர். 'மக்கள் விரும்பினால் விஜய் முதல்வராகலாம்' டிக் அடிக்கும் விஜயசாந்தி என்ற தலைப்பில் வந்த நேர்காணல் படித்தேன். வரும் 4 மாநிலத் தேர்தலில் பாஜக வெற்றி என்றது, அண்ணாமலையைப் புகழ்ந்தது... ஸ்டாலின் ஆட்சியைக் குறை கூறியது எல்லாம் அரசியலில் லேட்டஸ்ட் கள நிலவரம் அறியாமலே விஜயசாந்தி கருத்தளித்துள்ளார் என்றே தோன்றுகிறது!- பா.ஜெயப்பிரகாஷ்,அரண்மனைப்புதூர்.