‘ஸ்டாலின் சர்ஜிகல் ஸ்டிரைக்’காக செந்தில் பாலாஜியைக் காப்பாற்ற முதல்வர் தீவிரம் காட்டலாம். ஆனால், மூத்த அமைச்சர்கள் அவர் மீது கோபக்கண்ணோடுதானே பார்த்தார்கள். நேற்று கட்சியில் சேர்ந்தவருக்கு முக்கியத் துறை ஒதுக்கப்பட்டதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்பதுதானே யதார்த்தம்?.-டி.சி.இமானுவேல், மயிலாடுதுறை.‘ரேட்டு... பூட்டு...’, ‘சிந்தனைச் சிற்பி... தேங்காய் பர்பி...’, ‘சர்க்கரை... அக்கறை...’ போன்ற தலைப்புகளில் உள்ள அடுக்குச் சொற்களின் அற்புதமே கட்டுரைகளைப் படிக்க ஆவலைத் தூண்டிவிடுகிறது.-வெ.லட்சுமிநாராயணன், வடலூர்.நெல்லையில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் போலீஸார் மன அழுத்தத்திற்கு ஆளாவதும், தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது. ஓய்வு இன்மை, பணிச்சுமை,மேலதிகாரிகளின் கடுமை இவையெல்லாம்தான் அவர்களை அந்நிலைக்குத் தள்ளுகின்றன. இனிமேலாவது போலீஸாருக்கு மாதம் ஒருநாளாவது விடுப்பு வழங்கிட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.-சு.ஆறுமுகம், கழுகுமலை.திருமாவளவன் கொதிக்கும்படியான கேள்விகளை பத்திரிகையாளர்கள் கேட்பது வழக்கமில்லையே. திடீர்னு ‘விஜய் அரசியல் வருகை தி.மு.க.வை பாதிக்குமா..?’ எனக் கேட்டால், கோபம்தானே வரும்! கேள்வி கேட்க பா.ஜ.க., மணிப்பூர், மோடி இருக்க குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவதுபோல தமிழகக் கேள்வியைக் கேட்டால் சலிப்புத்தானே வரும்.- என்.ஏ.நாகசுந்தரம், குஞ்சன்விளை.‘சர்க்கரை நோயாளிகள் மீது நோ அக்கறை, தவிக்கும் தமிழகம்... தவிர்க்கும் டெல்லி’ கட்டுரை தமிழகத்தை மத்திய அரசு எப்படி வஞ்சித்து வருகிறது என்பதைக் காட்டி இருந்தது. சர்க்கரை நோயின் தாக்கத்தை சிறிதும் கருத்தில் கொள்ளாது டிப்ளமோ இன் டயாபட்டாலஜி படிப்புக்கு மத்திய அரசு அனுமதி மறுத்திருப்பது கொடுமையிலும் கொடுமை. கட்சி பேதமின்றி தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சித் தலைவர்களும் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி, இந்த அனுமதியைப் பெறவேண்டும்.- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி..‘வேண்டவே வேண்டாம் டாஸ்மாக்... குடும்ப உறுப்பினர்களிடம் நேரு எடுத்த பாஸ் மார்க்!’ வம்பானந்தா கட்டுரை வேற லெவல். ஏற்கெனவே வாய்க்கா வரப்பு தகராறு இருக்கும் போது தேவையில்லாமல் முதல்வரிடம் எதுக்கு கெட்ட பெயர் வாங்கணும்? சரியான முடிவைத்தான் நேரு எடுத்திருக்கிறார்!- தே.மாதவராஜ், இராமநாதபுரம்.‘அரசியல் பாதைக்கு மாறும் லியோ’ என லைட்மேன் அஸ்திவாரத்தை நிலைநிறுத்தினாலும் அதை மெருகேற்றுவதில் நடிகர் விஜய், ‘இதோ வரேன் அதோ வரேன்’ என்று தில்லாலங்கடி வேலையைக் காட்டாமல் மக்கள் மனங்களில் இடம்பெறுவதற்கான வேலைகளில் விறுவிறுவென இறங்கணும். லியோ பட புரோமோஷனுக்கு மட்டும் உங்கள் அர்ப்பணிப்பு என்றால், அரசியல் நிலவரத்தில் ரஜினி மாதிரி ‘காணவில்லை’ என்று போஸ்டர் ஒட்டவேண்டியதுதான். -பி.எம்., விழுப்புரம்.