கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான பிறகு குஷ்புவின் பேச்சில் அதிகாரத் தொனி இருப்பதைப் பார்க்கிறோம். நாட்டில் மகளிர் நலன் காக்க ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன. ஆனால், மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு, தபால் ஆபீஸ் பணியைத்தான் செய்திருக்கிறார்.-ஆர்.எஸ்.மனோகரன், முடிச்சூர். ‘கெடு விதித்த எடப்பாடி, பிடி கொடுக்காத டெல்லி… தாமரை கூட்டணிக்கு குட்பை! கட்டுரை செம தூள். பா.ஜ.க.வில் கட்சி வளரும் போது ஆள் கிடைப்பதில்லை. ஆள் வந்தபோது தலைமை சரியில்லை. தலையைக் காட்டினால் ஓட்டு விழும் என்ற நிலைமை, அ.தி.மு.க.வில் இப்போது இல்லை. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. கட்சியைவிட்டு ஒரு அடி நகர்ந்தாலும் செல்லாக்காசு என்பதை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், அண்ணாமலை மூவரும் உணரவேண்டும். எப்படியோ தி.மு.க. காட்டில் மழைதான்.-தே.அண்ணாதுரை, கம்பம். ‘அமலாக்கத்துறை கையில் பகீர் ஆடியோ! அடுத்த ஆக்ஷனுக்குத் தயாராகும் டெல்லி’ சுவாமி வம்பானந்தா தனது அஸ்திரத்தை வீசியிருந்தார். சும்மாவேனும் வாய் இருக்கிறதென்று சவடால்பேச்சுகளை அள்ளிவிட்டால், சம்பந்தப்பட்டோர் சந்தித்துதான் தீரவேண்டும்.-ஜே.தனபாலன், நஞ்சுண்டாபுரம்..தேசிய அரசியலில் மாநிலக் கட்சி முன்னேறுவது காட்டாற்று வெள்ளத்தில் எதிர்நீச்சல் போடுவது போலாகும். தமிழக முதல்வர், தேசிய அரசியலை வாய்க்கால் என நினைக்கிறார். மாநிலத் தலைவர்களோடு பேச பிற மொழிகள் கொஞ்சமாவது தெரியவேண்டும். இல்லாவிட்டால் பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்த்தது போலாகும். தனி விமானத்தைப் பிடிக்க ஓடியதுபோல ஓடவேண்டியது தான்.-குஞ்சன்விளை ரவி, கன்னியாகுமரி. பெண்களுக்கு எதிராக 750 வழக்குகள் இருக்கின்றன என்றும் இதுகுறித்து டி.ஜி.பி.யிடம் தெரிவித்திருப்பதாகவும் அவர் கால அவகாசம் கேட்டிருப்பதாகவும் குஷ்பு பேட்டியில் சொல்லியிருக்கிறார். டி.ஜி.பி.யின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் நிறைவடைவது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருக்குத் தெரியாதது ஆச்சரியம்தான். ஆக, மகளிர் காதில் குஷ்’பூ’!-ம.அரங்கநாதன், புது பெருங்களத்தூர்.சாத்தான்குளம் தந்தை, மகன் படுகொலை ஒரு முடிவிற்கு வர மத்திய அரசோ, மாநில அரசோ முனைப்போடு செயல்பட வேண்டும். அது இல்லாத வரை சொதப்பல்தான். காவல்துறை கைங்கர்யம் இரு அரசுகளுக்கும் தேவைப்படுகிறதே!-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.