‘மோடி ஐ.பி.எல். எடப்பாடி ரன் அவுட்; ஸ்டாலின் ஸ்டம்ப் அவுட்;ஜி ஸ்கொயர் வாஷ் அவுட்’ என்று, தற்போதைய ஐ.பி.எல். கிரிக்கெட்டை வைத்தே இன்றைய அரசியலை சூடான அட்டைப் படக் கட்டுரையாக்கி பரபரப்பு காட்டிய உமது திறமையே திறமை! சம்பந்தப்பட்ட தலைவர்கள் அலறப் போகிறார்கள். - ஜே.தனபாலன், நஞ்சுண்டாபுரம் கும்பகோணம் மேயர் பற்றிய கட்டுரை படித்தேன். புதிதாக மாநகராட்சி மேயராக வருபவர் சட்டம், விதிகளைக் கற்றுக்கொண்ட பின்பே அவரின் பணிகளைத் திறம்பட செயல்படுத்த முடியும். ஆட்டோ ஓட்டுநரான மேயர் சரவணன் ஆர்வமுடன் மாநகராட்சி பற்றிய விவரங்களைக் கற்றுக் கொண்டிருப்பதாக செய்தித் தாள்களில் படித்திருக்கிறேன். ஒரு பாமரர் உள்ளாட்சி அமைப்பின் பெரிய பதவிக்கு வரும்போது போட்டி, பொறாமை, இளக்காரம், ஈகோ என பலருக்கும் வருவது இயல்பு. இதையெல்லாம் அவர்கள் துணிவுடன் உதறித் தள்ளவேண்டும். -ஆர்.எஸ்.மனோகரன், முடிச்சூர். நம்ம வம்பு போகிற போக்கில், ‘வசூல் வேட்டையில் பொன்னியின் செல்வன் நாயகன்’என பொடிமாஸை தூவி செம ட்விஸ்ட் வைத்து அரசியல் சூட்டை கிளப்பிவிட்டுள்ளார். ஒரு லாரிக்கு இவ்வளவு ரேட் என்று ஒரு ரூட்டையும் விட்டு வைக்காமல் துட்டு பார்த்து, பொன்னியின் செல்வனாய் மாமூல் வசூலில் சாதனை படைக்கப்போவது நிச்சயம்!-பாரதிமுருகன், மணலூர்பேட்டை. ‘பலாத்காரம்... கும்பல் தாக்குதல்... பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்கு!இருளர் பெண்ணுக்கு நடந்த கொடுமை’ கட்டுரை, கடும் சலசலப்பு.என்ன கொடுமை. பாலியல் பலாத்காரம் செய்ததோடு பாதிக்கப்பட்டவர் மீதே வழக்கு என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வரின் நேரடி கவனத்தில் இப்பிரச்னையில் நியாயம் கிடைக்கட்டும். இருளர் வாழ்வில் வெளிச்சம் பிறக்கட்டும். -ஒய்.ஜெயந்தி, குனியமுத்தூர். பணிபுரியும் வங்கிப் பணத்தைக் கையாடல் செய்து ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்து கம்பி எண்ணும் கேஷியர், நல்லவேளையாக விபரீதமான முடிவெடுக்காதது அரசுக்கும் ஆளுநருக்கும் கொஞ்சம் நிம்மதி. -குஞ்சன்விளை ரவி, கன்னியாகுமரி. தி.மு.க.வில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக ஸ்டாலினிடம் துரைமுருகன் பேசினால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் வைகோவைப் பார்த்து துரைசாமி பேசியதை நினைக்கத் தோன்றுகிறது. கருணாநிதியை எதிர்த்துத் துவக்கிய கட்சி பல தொண்டர்களின் ரத்தத்தில் உதித்த கட்சி ம.தி.மு.க., அதை துரைசாமி உணரவில்லை. கட்சியில் இருக்க விருப்பம் இல்லையென்றால், விலகிவிடுவதுதான் ஜனநாயகம். ஏன் இணைக்கச் சொன்னார் என்பது இது வரை புரியாத புதிராக இருக்கிறது. திராவிடக் கட்சிகளில் ஒன்றை அழிக்க நினைப்பது தவறு. -தே.அண்ணாதுரை, கம்பம்.