-அபிநவ்ஐ.டி. ரெய்டு பார்த்திருப்பீங்க... அமலாக்கத் துறை ரெய்டு பார்த்திருப்பீங்க... அவ்வளவு ஏன் சி.பி.ஐ. ரெய்டுகூட பார்த்திருப்பீங்க... ஆனா ஜி.எஸ்.டி துறை ரெய்டு நடத்திப் பார்த்திருக்கீங்களா? காதும் காதும் வைத்தாற்போல கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல இடங்களில் புகுந்து புறப்பட்டு சில சீட்டிங் பெருச்சாளிகளை ஸ்கெட்ச் போட்டு தூக்கியிருப்பதுதான் தி.மு.க.வுக்கு திகில்..இது குறித்து, ஜி.எஸ்.டி பிரிவு சட்ட நிபுணர் சத்யகுமாரிடம் பேசினோம். “ஜி.எஸ்.டி. வரி, கடந்த 2017, ஜூலை மாதம் முதல் மத்திய அரசால் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. ஆறு ஆண்டுகள் ஆகியும் இது எப்படிச் செயல்படுகிறது என்பது பலருக்கும் தெரியாது. ஆனால் அதை கச்சிதமாகப் புரிந்துகொண்ட இருவர், அரசாங்கத்தை ஏமாற்றி 175 கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை ஏப்பம் விட்டுள்ளனர். இதில் கொடுமையான விஷயம், அரசாங்கத்தை ஏமாற்றியிருப்பதோடு, அப்பாவி பொதுமக்களையும் ஏமாற்றியிருக்கும் இருவரில் ஒருவர் ஆளும் தி.மு.க.வின் நிர்வாகி என்பதுதான் பேரதிர்ச்சி. சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த பிரேமராஜா, பெரம்பூரைச் சேர்ந்த பிரேமநாதன் ஆகிய இருவரும் ஏரியாவில் உள்ள ஏழை மக்களிடம் வங்கியில் கடன் வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை காட்டி அவர்களது ஆதார், பான் அட்டைகளை வாங்கியுள்ளனர். அந்த ஆதார் மற்றும் பான் கார்டுகளை வைத்து அதன் உரிமையாளர்களுக்கே தெரியாமல், பல போலி நிறுவனங்களைத் தொடங்கியுள்ளனர். இத்தகைய ஷெல் (போலி) நிறுவனங்களின் பெயர் முறையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் நிஜத்தில் பார்த்தால் அப்படி ஒரு நிறுவனம் இருக்காது. இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் 59 போலி நிறுவனங்களை இவர்கள் தொடங்கியுள்ளனர். மேலும் தங்களை எளிதில் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக சில நவீன டெக்னிக்குகளையும் பின்பற்றியுள்ளனர். அதாவது கூகுள் நிறுவனத்தின் ரிமோட் ஆக்சஸ் சாஃப்ட்வேரைப் பயன்படுத்தி, அந்த 59 நிறுவனங்களும் வெவ்வேறு பகுதிகளில் இயங்குவது போன்ற ஒரு பிம்பத்தையும் உருவாக்கியுள்ளனர். அதனை மேலும் கச்சிதமாக்குவதற்காக, வெளிநாட்டு சிம் கார்டுகளைப் பயன்படுத்தியுள்ளனர். இதன்மூலம் நிஜமாகவே அந்த நிறுவனங்கள் வெவ்வேறு இடங்களில் இயங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.. இவற்றில் சுமார் 20 நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி பதிவையும் பெற்றிருப்பதுதான் இவர்களது சீட்டிங்கின் உச்சகட்டம். இதன்பிறகுதான் சமாசாரமே உள்ளது. ஜி.எஸ்.டியைப் பொருத்தவரை வரி என்பது ‘எண்ட் கன்ஸ்யூமர்’ அதாவது இறுதி வாடிக்கையாளர்களிடம் இருந்தே வசூலிக்கப்படுகிறது. அதாவது, ஒரு ரா மெட்டீரியலை வியாபாரி வாங்கும்போது அதற்கு ஜி.எஸ்.டி கட்டுவார். அதை பொருளாக மாற்றி விற்கும்போது, அதை வாங்கும் நபர் ஜி.எஸ்.டி கட்டுவார். இறுதியில் வியாபாரி, தான் கட்டிய ஜி.எஸ்.டி தொகையை ‘டேக்ஸ் இன்வாய்ஸ்’ மூலம் கணக்குக் காட்டி அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். இதுதான் நடைமுறை. இந்த நடைமுறையைப் பயன்படுத்தி, செயல்படாத தங்களது போலி நிறுவனங்கள் மூலம் 973.64 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்தது போல கணக்குக் காட்டியுள்ளனர் பிரேமராஜா மற்றும் பிரேமநாதன் அண்ட் கோ. பிறகு அந்த வியாபாரத்தில் கிடைக்க வேண்டிய உள்ளீட்டு வரியாக சுமார் 175.88 கோடி ரூபாய்க்கு டேக்ஸ் இன்வாய்ஸையும் தயாரித்து அந்தப் பணத்தை அரசாங்கத்திடமே திரும்பக் கேட்டு கில்லாடித்தனமாக ‘கிரைம்’ செய்துள்ளனர். அதாவது ஒரு ரூபாய்க்குக் கூட வியாபாரம் செய்யாமல், அரசாங்கத்திற்கு வரியும் கட்டாமல், வரி கட்டியதாக கணக்குக் காட்டி, 175.88 கோடி ரூபாயை அரசாங்கத்திடமிருந்து வாங்கி, அபேஸ் செய்துள்ளனர்..இதைத்தான் தற்போதைய ரெய்டில் கண்டுபிடித்து இருவரையும் தட்டித் தூக்கியிருக்கிறது ஜி.எஸ்.டி. துறை. ஜி.எஸ்.டி சட்டத்தின் செக்ஷன் 132-இன் படி போலியாக டேக்ஸ் இன்வாய்ஸ் உருவாக்குவது, உள்ளீட்டு வரியை ஃபோர்ஜரி மூலம் பெறுவது ஆகிய குற்றங்களின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்ÕÕ என்று முடித்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஜி.எஸ்.டி துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ‘Ôபொதுவாக ஜி.எஸ்.டி வரியின் அடிப்படையில் ஒரு பொருள் உற்பத்தியாகும் இடம் முதல் அது கன்ஸ்யூமர் கைக்குச் செல்லும்வரை தொடர்ச்சியாகக் கண்காணிக்க முடியும். ஆனால், இந்த இருவரும் போலி சிம் கார்டு, நவீன் சாஃப்ட்வேர் போன்றவற்றைப் பயன்படுத்தி அரசாங்கத்தின் கண்களிலேயே மண்ணைத் தூவியுள்ளனர். ஜி.எஸ்.டி. துறையில் இதுபோன்ற குற்றங்களைக் கண்காணிப்பதற்கென்றே ஒரு குழு உண்டு. அந்த இன்டலிஜென்ட்ஸ் டீம்தான், இவர்களின் போலியான 59 நிறுவனங்கள் மற்றும் அதன் உள்ளீட்டு வரியில் சந்தேகம் இருப்பதைக் கண்டுபிடித்தது.. அதையடுத்து, களத்தில் இறங்கி பெரம்பூர், சேப்பாக்கம், கொளத்தூர், திருவல்லிக்கேணி மற்றும் இருவரின் வீடுகள், அவர்களின் உறவினர் வீடுகள் போன்றவற்றில் சோதனை நடத்தப்பட்டது. முடிவில் அனைத்துமே ஷெல் கம்பெனிகள் என்பது தெரியவந்தது. அதன்பிறகு, குற்றவாளிகளின் கம்ப்யூட்டர் ஐ.பி. முகவரியை வைத்து அவர்களைக் கண்டுபிடித்தோம். இந்த வழக்கைப் பொருத்தவரை குற்றம்சாட்டப்பட்டிருக்கும் பிரேமராஜா, சேப்பாக்கம் பகுதிப் பொருளாளராக இருக்கிறார். அவர், தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்திக் கடன் வாங்கித் தருவதாகச் சொல்லி மக்களை ஏமாற்றியே அவர்களின் டேட்டாக்களைப் பெற்றிருக்கிறார். ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் மக்கள் எளிதாக ஏமாந்துள்ளனர். முதலில் பெரம்பூரைச் சேர்ந்த பிரேமநாதனை கைது செய்துவிட்டோம். வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற பிரேமராஜாவை பெங்களூர் விமான நிலையத்தில் கண்டுபிடித்துக் கைது செய்துள்ளோம். அவர்கள் பயன்படுத்திய லேப் டாப்கள், செல்போன்கள், வெளிநாட்டு சிம் கார்டுகள், இன்டெர்நெட் வசதிக்காக பயன்படுத்திய மோடம்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பணத்தைப் பெற அவர்கள் பயன்படுத்திய 25 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அவர்களிடமிருந்த 20 ஜி.எஸ்.டி பதிவுகளும் ரத்து செய்யப்பட்டன. தற்போதைக்கு முதல்கட்ட விசாரணை மட்டுமே முடிந்துள்ளது. மேற்கொண்டு நடக்கும் விசாரணையில்தான் முழு விவரங்களும் தெரியவரும்’’ என்று முடித்தனர். தி.மு.க. பிரமுகர் ஜி.எஸ்.டி. வரியில் முறைகேடு செய்தது தொடர்பாக சேப்பாக்கம் பகுதி தி.மு.க. செயலாளர் காமராஜிடம் கேட்டபோது, ÔÔபிரேமராஜா இதுபோன்ற மோசடியை செய்திருக்க வாய்ப்பில்லை. அவர் மீது வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளது என நினைக்கிறோம்ÕÕ என சுருக்கமாக முடித்துக்கொண்டார். கூட்டிக் கழிச்சுப் பார்த்தா, இப்படிப் பணம் பெருக்கறவங்களை அடக்க கடுமையா சட்டம் வகுக்கணும்போல இருக்கே