`பா.ஜ.க.வை வீழ்த்துவதே வாழ்நாள் அஜெண்டா'வாக `இந்தியா' கூட்டணி அடுத்த கூட்டங்களையும் வியூகங்களையும் அரங்கேற்றுகிறது. அதை முறியடிக்க சாம, பேத, தான, தண்டங்களைக் கையிலெடுத்து கதகளி ஆடுகிறது, டெல்லி பா.ஜ.க. தமிழகத்தில் ஆளும் தரப்பிலோ பா.ஜ.க-வை எதிர்கொள்ள பௌர்ணமி பூஜை, தேர்தல் ஸ்பெஷல் டீம், சீக்ரெட் சர்வே, ஆடியோ பிரசாரம் என அதிரடி பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டது, அறிவாலயம். இவர்களுக்கு இடையே நடக்கும் சண்டையில், ‘நமது சீட்டுக்கு வேட்டு வருமா?' என்று தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளும் பதறுவதுதான் லேட்டஸ்ட் ட்விஸ்ட்!``அறிவாலயத்தின் தேர்தல் வியூகம் என்ன?" என தி.மு.க.வின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். “ இதுவரை இல்லாத அளவுக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒரு யுத்தமாக ஸ்டாலின் பார்க்கிறார். பா.ஜ.க - தி.மு.க. இடையிலான இந்தப் போரில் மாபெரும் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் ஒவ்வொரு நகர்வையும் முன்னெடுத்து வருகிறார். சொல்லப்போனால், தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை முன்கூட்டியே தொடங்கிவிட்டார்.இதை ஆகஸ்ட் 27-ம் தேதி திருவாரூரில் நடந்த திருமண விழாவில் வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார். அப்போது பேசிய ஸ்டாலின், `நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையை திருவாரூரில் தொடங்கிவிட்டேன். தமிழகத்தைக் காப்பாற்றிவிட்டோம். வரும் தேர்தலில் வெல்வதன் மூலம் இந்தியாவையும் காப்பாற்ற வேண்டும்' என்றார். வெறும் பேச்சாக மட்டுமல்லாமல், நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்ள ஒரு ஸ்பெஷல் டீமையும் முதல்வர் ஸ்டாலின் உருவாக்கியுள்ளார். இந்தக் குழுவில் இரண்டு முக்கிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூலம், தி.மு.க. கூட்டணி 40-க்கு 40 தொகுதிகளையும் கைப்பற்றுவதற்கான வியூகங்களை வகுத்துள்ளார்.ஸ்டாலின் நியமித்த இருவர் அணி!அவர்களில் மிக முக்கியமானவர், பிரபல தொழிலதிபர் ஒருவரின் உறவினர்தான். அவர், தி.மு.க. குடும்ப உறுப்பினர்களுடன் மிக நெருக்கமான நட்பை வைத்திருப்பவர். கடந்த ஜனவரி மாதத்துக்கு முன்பே அவரை அழைத்து ஆலோசித்த ஸ்டாலின், `வரும் நாடாளுமன்றத் தேர்தலை லீட் செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறீர்களா?' என்று கேட்க, அவரும் அதை முழுமனதுடன் ஏற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து, குடும்பத்தின் முக்கிய உறுப்பினர் ஒருவருடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்ளுமாறு ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, ஸ்பெஷல் டீம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது..6 மண்டலம்... 10 டீம்...3 ஆயிரம் பேர்!அந்த டீம் கொடுத்த ஆலோசனையின்படி, தமிழகம், புதுச்சேரி உள்பட 40 நாடாளுமன்றத் தொகுதிகளை ஆறு மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். அதில், மண்டலத்துக்கு ஐநூறு பேர்வீதம் மூன்றாயிரம் பேர் இந்த சிறப்புக் குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர், தி.மு.க குடும்பப் பின்னணி கொண்டவர்கள், கட்சியின் தீவிர விசுவாசிகள். ஒவ்வொரு மண்டல தேர்தல் அலுவலகமும் சுமார் ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது. வார் ரூம், கேம்ப்பைன் டீம், மீடியா ஃபாலோஅப் டீம், சர்வேயர் டீம், சோஷியல் மீடியா டீம் உள்ளிட்ட 10 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பௌர்ணமி பூமி... ஆடியோ சீரிஸ்!இந்த ஆறு மண்டல அலுவலகங்களும் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி புதன்கிழமை பௌர்ணமி தினத்தன்று பூஜை போடப்பட்டு திறக்கப்பட்டுள்ளன. அன்றைய தினமே நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. இதன் முன்று நாட்களுக்கு முன்பே திருவாரூர் திருமணத்தில் ஸ்டாலின் தனது பேச்சில் குறிப்பிட்டார். இந்தக் குழுக்களின் முக்கிய பணியாக, `ஸ்டாலின் குரல்' என்றொரு ஆடியோ சீரிஸ் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ‘ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா’என்ற தலைப்பில் முதல்வர் ஸ்டாலின் பேசத் தொடங்கியிருக்கிறார். இந்தத் தொடர் ஆங்கிலத்திலும் இந்தியாவின் பல்வேறு மாநில மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.இதுபோன்று இன்னும் பல யோசனைகளை தேர்தலையொட்டி இந்தக் குழு தயாரித்துள்ளது. தவிர, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சர்வே டீம் ஒன்று நியமிக்கப்பட உள்ளது. அதில், `தி.மு.க. அரசு மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, தி.மு.க.வுக்கு இருக்கும் ஆதரவு, ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்வுகளின் அடிப்படையில் சர்வே எடுப்பது' என பல வியூகங்களை இந்த டீம் வகுத்துள்ளது” என்றவர், அது குறித்தும் விவரித்தார்..வாரிசுகளுக்கு ரெட் கார்டு!“2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது தி.மு.க.வின் முக்கிய தலைவர்களின் வாரிசுகளுக்கு சீட் வழங்கப்பட்டது. அதில், அவர்கள் வெற்றி பெற்று எம்.பி.க்களும் ஆனார்கள். ஆனால், `2024 நாடாளுமன்றத் தேர்தலில் வாரிசுகளுக்கு சீட் கொடுக்கக்கூடாது' என ஸ்டாலினுக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளது, இந்த ஸ்பெஷல் டீம். அதேபோல, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்புக் கொடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது. இளைஞர்கள், படித்தவர்கள், பெண்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வேட்பாளர்கள் இருக்க வேண்டுமெனவும் ஸ்டாலினிடம் கொடுக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எம்.பி.களுக்கு ரேங்க் கார்டு!தற்போது சிட்டிங் எம்.பி.யாக இருப்பவர்கள் குறித்து தொகுதிவாரியாக ரேங்க் கார்டு தயார் செய்யும் பணியை ஸ்பெஷல் டீம் மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், `2019ல் எம்.பி.யாக பதவியேற்ற நாள் முதல் இன்றைய தினம் வரை சிட்டிங் எம்.பி.யின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன, தொகுதிக்கு அடிக்கடி செல்கிறாரா, அவர் மீது மக்களுக்கு இருக்கும் திருப்தி, அதிருப்தி, எம்.பி.யின் சமூகரீதியான செல்வாக்கு’ என தனித்தனியே ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதேபோன்று, ’எம்.பி-க்களின் நாடாளுமன்ற பங்கேற்பு, நாடாளுமன்றத்தில் அவர் பேசிய விஷயங்கள், கேட்ட கேள்விகளின் எண்ணிக்கை’ இவற்றின் அடிப்படையிலும் எம்.பி-க்கு மதிப்பெண் போட இருக்கிறார்கள். மேலும், ‘எம்.பி. தேர்தலின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள், அதில் எத்தனை வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றியிருக்கிறார், மீண்டும் அவரே போட்டியிட்டால் வெற்றிபெற முடியுமா?' எனப் பல கேள்விகளை உள்ளடக்கிய சர்வே ஒன்றும் எடுக்கப்பட உள்ளது. இதை நாடாளுமன்றத் தொகுதியை உள்ளடக்கிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் எடுக்க உள்ளனர். இந்த சர்வே முடிவுகளை அடுத்த இரண்டு மாதங்களில் முதல்வர் ஸ்டாலினிடம் இந்த டீம் அறிக்கையாக வழங்க உள்ளது.எதிர்க்கட்சி குறித்தும் சர்வே!சொந்தக் கட்சி எம்.பி.க்களை மட்டுல்லாமல், கூட்டணிக் கட்சி எம்.பி.க்களின் செயல்பாடு குறித்தும் இந்த ஸ்பெஷல் டீம் சர்வே எடுக்க உள்ளதுதான் ஹைலைட். `கூட்டணிக் கட்சிக்கு மீண்டும் அதே தொகுதியை வழங்குவதா, தற்போது எம்.பி.யாக உள்ளவரையே வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி பெறுவாரா?' என ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.கூடவே, அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணியில் யார் யார் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்புள்ளது, அவர்களுக்கான செல்வாக்கு, அவர்களின் பிளஸ், மைனஸ் உள்ளிட்ட விவரங்ககளையும் ஆராய உள்ளனர். தவிர, கூட்டணிக்குள் சில மாறுதல்களும் வரவுள்ளன. குறிப்பாக பெரம்பலூரில் தி.மு.க. வேட்பாளராக வெற்றிபெற்ற பாரிவேந்தர், தற்போது பா.ஜ.க., கூட்டணியில் இணைந்துவிட்டார். அதேநேரம், கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க. கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது. இதனால், ம.நீ.ம.வுக்கு தொகுதி ஒதுக்க வேண்டியது வரும். கடந்தமுறை கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுத்த தொகுதிகளில் சிலவற்றை மாற்றிக் கொடுக்கவும் தி.மு.க. முடிவு செய்துள்ளது.அச்சத்தில் கூட்டணிக் கட்சிகள்!கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சரிபாதி தொகுதிகளை அதாவது, 20 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட்டது. மீதி 20 தொகுதிகளில் 10 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கும் சி.பி.எம், சி.பி.ஐ, வி.சி.க. ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளையும் ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, ஐ.ஜே.கே. ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியையும் தி.மு.க. பிரித்துக் கொடுத்தது.தற்போதுள்ள கூட்டணிக் கட்சிகளில் ஐ.ஜே.கே.வை தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் `இந்தியா' கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. இந்தக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் கடைசி நேரத்தில் இணையவும், நழுவவும் வாய்ப்புள்ளது. அப்படிப் பார்த்தால், `அதே தொகுதி, அதே எண்ணிக்கை கிடைக்குமா?' என்ற அச்சம் கூட்டணி கட்சிகளுக்கு இருக்கிறது. அதற்கும் உரிய நேரத்தில் உரிய முடிவை ஸ்டாலின் எடுப்பார்” என்று விவரித்து முடித்தார்..கூட்டணிக் கட்சிகள் இரையாகாது!இதுகுறித்து சி.பி.ஐ மாநில செயலாளர் முத்தரசனிடம் கேட்டோம். “தி.மு.க. கூட்டணியில் குழப்பங்களை ஏற்படுத்த சிலர் வதந்திகளை பரப்புகின்றனர். கடந்த தேர்தலில் வழங்கப்பட்ட இரு தொகுதிகளுக்குப் பதிலாக ஒரு தொகுதியை வழங்க உள்ளதாகவும் காங்கிரஸுக்கு குறைவாகவே தி.மு.க. தரும் என்றும்கூறி குழப்பம் ஏற்படுத்த முனைகிறார்கள். இதற்கு கூட்டணிக் கட்சிகள் இரையாகாது.” என்றார். தி.மு.க செய்தித் தொடர்பு செயலாளர் பி.டி.அரசகுமாரிடம் கேட்டபோது, “முன்கூட்டியே தேர்தல் வருவதற்கான சூழல் உள்ளது. எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க தி.மு.க. தயார். அதற்கான கட்டமைப்புக்களை முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி நிர்வாகிகள் செயல்படுத்தி வருகிறார்கள். `நாடும் நமதே நாற்பதும் நமதே' என்ற கோஷத்துடன் தேர்தல் பணியை தொடங்கிவிட்டோம்” என்றார் உறுதியாக!தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டின் மீது பா.ஜ.க.வின் பார்வை ஒரு தசாப்தத்துக்கும் மேலாக குவிந்து வருகிறது. அதன் ஒருகட்டமாக தி.மு.க.வை பலவீனப்படுத்தும் வேலைகளை பா.ஜ.க செய்து வருகிறது. அடுத்துவரும் நாள்களில் பா.ஜ.க வீசப்போகும் அஸ்திரங்களை அறிவாலயம் எப்படி எதிர்கொள்ளப் போகிறது... தி.மு.க.வின் தேர்தல் வியூகம் என்னவாகும்?' என்பதற்கான விடைகள், வரும் வாரங்களில் தெரியவரலாம்! - பாபு படங்கள் : ம.செந்தில்நாதன்