-கரூர் அரவிந்த் `அரசியல் என்பது சாத்தியங்களின் கலை' என்ற புகழ்பெற்ற வரிகளுக்கும் செந்தில் பாலாஜி விவகாரத்துக்கும் அவ்வளவு நெருக்கம். இவ்வளவு நாளாக அடக்கிவாசித்துக் கொண்டிருந்த கரூர் கம்பெனி, `கூடுதல் கப்பத்தைக் கட்டத் தயாராக இருக்கிறோம்' என பிழைப்புக்கான அடுத்த சாத்தியங்களை ஆராயத் தொடங்கியதுதான், கதிகலக்கும் கரூர் பாலிடிக்ஸ்..என்ன செய்கிறது கரூர் கம்பெனி?“கரூரில் இருந்து கேரளா சென்று ஃபைனான்ஸ் தொழில் செய்யும் வட்டிக்கடை அதிபர்கள் பலரும், ஓணம் பண்டிகையின்போது தமிழகத்துக்கு வந்து 15 நாள்கள் ஓய்வெடுப்பது வழக்கம். அவர்கள் வரும்போதெல்லாம் வட்டித் தொழில் செழிக்க திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் தொகுதியில் மாம்பாறை முனியப்பன் கோயிலில் கிடாவெட்டு விருந்து நடத்துவார்கள்.இந்தக் கோயிலில் பெண்களுக்கு அனுமதியில்லை. ஆண்களே சமைத்து, ஆண்களே சாப்பிடவேண்டும். எவ்வளவு சாப்பாடு மிஞ்சினாலும் அங்கேயே விட்டுவிட்டு வரவேண்டும். தினமும் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொள்ளும் இந்தக் கோயில் கிடா விருந்து பந்தியில் முதலில் ஒருவர் வந்து இலையில் தண்ணீர் பாட்டில் வைப்பார். அடுத்து வருபவர் மதுபாட்டில் வைப்பார். இலையில் சரக்கு பரிமாறுவது இந்தக் கோயிலில் வழக்கமான ஒன்று. அமைச்சர்கள் சக்கரபாணி, செந்தில்பாலாஜி ஆகியோர் ஒவ்வொரு தேர்தல் வெற்றியின்போதும், இந்தக் கோயிலில் கிடா விருந்து கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு, இந்தக் கோயிலில் கரூர் கம்பெனியை சேர்ந்தவர்கள், கிடா விருந்தை நடத்தி முடித்துள்ளனர்.அப்போது, தமிழகத்தில் அதிகம் சம்பாதித்துக் கொடுத்த மாவட்டமாக சென்னை, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி எனப் பட்டியலிட்டனர். அடுத்து, சட்டவிரோத பார்களில் கெமிக்கல் பவுடர் கலந்த போலி சரக்குகளையும் கடலூரில் இருந்து பாண்டிச்சேரி சரக்குகளை சப்ளை செய்த நபர்களைப் பற்றியும் பேசியுள்ளனர்..தொடர்ந்து பேசிய அவர்கள், `அ.தி.மு.க ஆட்சியிலும் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வாங்கினார்கள். ஏதோ நாம் மட்டும்தான் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கியதுபோல் பத்து ரூபாயைப் பற்றி அதிகம் பேசுகிறார்கள். இதற்குக் காரணமே தி.மு.க. ஆட்கள்தான். ஒவ்வொரு தீபாவளிக்கும் பொங்கலுக்கும் தமிழகம் முழுக்க மாவட்டம் முதல் வட்டம், ஒன்றியம், நகரம், வார்டு என உள்ளாட்சி பிரதிநிதிகள்வரை பல்லாயிரம் பேருக்கு பல கோடி ரூபாய்களை செலவழித்தோம்.வரும் தீபாவளிக்கு இவர்களுக்கு யார் பணம் கொடுப்பார்கள்? யாருமே கொடுக்கமாட்டார்கள். நம்ம குரூப்ல இருந்த மூலனூர் கார்த்தி, வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் வீரா. சாமிநாதன் வீடுகளில் ரெய்டு நடத்தறதுக்குக் காரணமே, தி.மு.க.வினர்தான். அவர்கள்தான், நம்மைப் பற்றி பா.ஜ.க.விடம் கொடுத்த புள்ளிவிபரப் பட்டியலைக் கொடுத்துள்ளனர்' எனக் கொதித்தனர்.மேலும், `இனியும் செந்தில் பாலாஜிக்காக காத்திருக்கவேண்டிய அவசியமில்லை. நாமே களத்தில் இறங்கலாம்' என்கிற முடிவோடு கலைந்து சென்றுள்ளனர். இதை எப்படியோ மோப்பம் பிடித்த செந்தில் பாலாஜியின் விசுவாசிகள், `இத்தனை காலமும் அமைச்சருக்கு நன்றியுணர்வுடன் இருந்த நல்ல நரிகள் எல்லாம் குள்ள நரிகளாகிவிட்டனவே?' எனக் கோபப்பட்டுள்ளனர்.நாளையே செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்தால், இவர்கள் கண்ணீர்விட்டபடியே மீண்டும் ஒட்டிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. `இவர்களால் செந்தில் பாலாஜிக்கு சிக்கல் வரக்கூடாது?' என்கிற நோக்கில் பின்னணியில் நடக்கும் தகவல்களை சேகரிக்க முழுநேர உளவுத்துறையாகவே மாறிவிட்டார்கள். இந்த விவரங்களை எல்லாம் செந்தில் பாலாஜிக்கு அப்டேட் செய்து வருகின்றனர்..இதில் உச்சகட்டமாக, கரூர் கும்பலில் உள்ள சிலர், மீசை அமைச்சர் உள்பட ஐந்து முக்கிய அமைச்சர்களிடம் சில தகவல்களைக் கூறியுள்ளனர். அவர்களிடம் பேசிய கரூர் கம்பெனி ஆள்கள், `செந்தில் பாலாஜியின் அனைத்து அரசியல் வியூகங்களும் எங்களுக்குத் தெரியும். அவரோடு அனைத்து தேர்தலிலும் தேர்தல்களிலும் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு ஜெயித்திருக்கிறோம். செந்தில் பாலாஜியின் தேர்தல் ஃபார்முலா எங்களுக்கு அத்துப்படி. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி பொறுப்பை எங்களுக்குக் கொடுங்கள். பணப்பட்டுவாடா முதல் அனைத்து வேலைகளையும் பக்காவாக செய்கிறோம். கூடுதல் கப்பம் கட்டவும் தயாராக இருக்கிறோம்' எனக் கூறியுள்ளனர்.இதையடுத்து, அமைச்சர்களில் சிலர் இவர்களிடம் நெருக்கம் காட்டத் தொடங்கிவிட்டனர். இதன் காரணமாக செந்தில் பாலாஜிக்கு சிக்கல் வந்ததுபோல் இந்த அமைச்சர்களுக்கும் சிக்கல் வரலாம். இந்த நெருக்கடியான நேரத்தில் கரூர் தி.மு.க.விலும் உள்ளாட்சி அமைப்புகளில் குழப்பமும் கோஷ்டி மோதலையும் ஏற்படுத்தியவர்களின் பட்டியலும் தயாராகி வருகிறது. செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளிவந்ததும் அந்தப் பட்டியல் அவரின் கைகளுக்குப் போய்விடும். அதன்பிறகு நடக்கப்போவதை மட்டும் வேடிக்கை பாருங்கள்" என்றார் விரிவாக.கரூர் கம்பெனியின் கூட்டம் குறித்தும் அமலாக்கத்துறை சோதனை குறித்தும் வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் வீரா சாமிநாதனிடம் பேசினோம். ``இப்போதுள்ள சூழ்நிலையில் என்னால் பதிலளிக்க முடியாது. விரைவில் அழைக்கிறேன்" என்றுகூறி இணைப்பைத் துண்டித்தார்.கிடா வெட்டிலும் குறுக்குவெட்டு அரசியல்!