`தீபாராதனை காட்டறவன் மொதல்கொண்டு தீவிரவாதியா மாத்தி வச்சிருக்காங்க' -`வின்னர்' படத்தில் வடிவேலு பேசும் இந்த காமெடியை பாதிரியார் ஒருவரின் அடாவடியோடு ஒப்பிட்டுப் பேசுகிறார்கள், தூத்துக்குடி மக்கள். விளைவு, காவல்நிலையம், போராட்டம் என பஞ்சாயத்து நீள்வதால் திணறித் தவிக்கிறது, திருமண்டல நிர்வாகம்.“அப்படியென்ன நடந்தது?” என போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய வட்டக்கோவில் எபனேசர் ஆலய சபையின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் ஜான்சனிடம் பேசினோம். “தூத்துக்குடி நாசரேத் சி.எஸ்.ஐ திருமண்டலத் தேர்தல் 2021ம் ஆண்டு நடந்தது. டி.எஸ்.எஃப். அணி, எஸ்.டி.கே.ராஜன் அணி ஆகிய இரு அணிகள் மோதின. அதில், டி.எஸ்.எஃப் அணி வெற்றி பெற்று நிர்வாகத்தை கைப்பற்றியது.திருமண்டல நிர்வாகத்தைப் பொறுத்தவரை தேர்தலில் யார் வெற்றிபெற்று வந்தாலும் ஆலய பாதிரியார்களின் கையே ஓங்கியிருக்கும். அவர்கள் நினைத்தால் வாக்காளர்களை நீக்கலாம், சேர்க்கலாம் என்று இருப்பதால் அடாவடியாக நடந்து கொள்கிறார்கள். எனவே, `பாதிரியார்களின் அதிகாரத்தை குறைக்க வேண்டும்' என்று மக்கள் மத்தியில் பேச்சு எழுந்தது.இந்தநிலையில், தென்னிந்திய திருச்சபையின் பிரதம பேராயர் தர்மராஜ் ரசலம் ஓய்வுபெற இருக்கும் நிலையில் ஓய்வுபெறும் வயதை 67ல் இருந்து 70 ஆக உயர்த்த முடிவெடுத்தார்கள். அதற்கு ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, கேரளம் ஆகிய மாநிலங்களில் உள்ள 24 திருமண்டலங்களில் 15 திருமண்டலங்களின் ஆதரவு தேவை. அதற்காக பிரதம பேராயர் தர்மராஜ் ரசலம் சுற்றுப்பயணம் செய்தார்..அதன்படி, தூத்துக்குடி வந்த அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் அவரை திருப்பி அனுப்பிவிட்டனர். அந்தப் போராட்டத்தில் நான் முன்னிலை வகித்தேன். அதனால், என் மீது ஆத்திரத்தில் இருந்த திருமண்டல நிர்வாகம் என்னை செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான். எனவே, அதைப் பற்றி கவலைப்படவில்லை.என்னை நீக்கியதுபோலவே ஒவ்வொரு ஆலயத்திலும் நீக்கம் நடந்தது. நீக்கியவர்களுக்குப் பதிலாக அவர்களுக்கு வேண்டியவர்களை நியமனம் செய்யும் வேலையில் ஈடுபட்டனர். எங்கள் ஆலயத்திலும் அதைச் செய்ய முயன்றார்கள். அதற்கு இங்கிருந்த பாதிரியார் சேவியர் அற்புதராஜ் ஒத்துழைக்கவில்லை. எனவே, அவரை மாற்றிவிட்டு ஜேசன் என்பவரை கொண்டுவந்தனர். அவரும் அவர்கள் சொல்வதைக் கேட்கவில்லை. அதனால் அவரையும் மாற்றிவிட்டனர்.அதற்குப் பிறகு ஜெயக்குமார் ஜாலி என்ற பாதிரியார் வந்தார். வழக்கமாக ஆலயத்துக்கு புதிதாக பாதிரியார் வரும்போது, அவரை சபை மக்கள் வரவேற்பார்கள். ஆனால், ஜெயக்குமார் ஜாலியோ, தன்னை திருமண்டல நிர்வாகிகள்தான் வரவேற்கவேண்டும் என்று தகராறு செய்தார்.இதற்கிடையில் பாதிரியார்களுக்கு படித்துவிட்டு காத்திருந்த சிலருக்கு குரு பட்டம் வழங்கப்பட்டது. எங்கள் ஆலயத்தைச் சேர்ந்த சேவியர் பாஸ்கரன் என்பவருக்கு குரு பட்டம் வழங்க மறுத்தார். தவிர, ஆலயத்துக்கு பாதிரியார் ஒழுங்காக வருவதில்லை. அவருக்குப் பதில் யார் யாரையோ அனுப்பினார். துணை ஆலயங்களுக்கும் போக மறுத்துவிட்டார்.சபையில் இருந்து நீக்கப்பட்ட எனக்குப் பதிலாக வேறொருவரை செயற்குழு உறுப்பினராக நியமித்தார். தேர்தலில் போட்டியிடாத ஒருவரை திருமண்டல விதிமுறைப்படி நியமிக்க முடியாது. அதை எதிர்த்துக் கேட்கப்போன சபை மக்களை செருப்பைக் கழட்டி அடிக்கப் பாய்ந்தார்.உடனே, நாங்கள் தூத்துக்குடி வடக்கு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தோம். அவரோ, திருமண்டல பாதிரியார்களை காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தார். அதன்பிறகுதான், `பாதிரியார் ஜெயகுமார் ஜாலியை இங்கிருந்து மாற்றவேண்டும்' என்று உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினோம். இந்த போராட்டம் ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்கிறது. பேச்சுவார்த்தை நடத்தவும் யாரும் வரவில்லை. எங்களுக்கு நியாயம் கிடைக்கும்வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை” என்றார்..``செருப்பைக் காட்டியது சரியா?" என பாதிரியார் ஜெயக்குமார் ஜாலியிடம் கேட்டபோது, “திருமண்டல நிர்வாகிகளிடம் கேட்டுக்கொள்ளுங்கள்” என்று மட்டும் பதில் அளித்தார்.இதையடுத்து, தூத்துக்குடி நாசரேத் திருமண்டல உப தலைவர் பாதிரியார் தமிழ்செல்வனிடம் பேசினோம். “பாதிரியாரில் இருந்து பிரதம பேராயர் வரை அவர்களின் ஓய்வுபெறும் வயதை 70 ஆக உயர்த்த தென்னிந்திய திருச்சபை நினைக்கிறது. அதற்காக ஆதரவு திரட்ட பிரதம பேராயர் தூத்துக்குடிக்கு வந்தார். இதில் விருப்பம் இல்லை என்றால், போராடலாம். ஓட்டுப்போட்டு தோற்கடிக்கலாம். அதை விட்டுவிட்டு அவரை அசிங்கமாகப் பேசி காரை உடைத்து திருப்பி அனுப்புவது எந்தவகையில் நியாயம்?அதனால் திருச்சபை உத்தரவின்படி ஜான்சன் உட்பட சிலர் பதவிநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், திருமண்டல நிர்வாகத்தில் காலியாக இருக்கும் இடங்களுக்கு சில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கு யாரையும் நியமிக்கவில்லை. ஆனால், சபை மக்களிடம் பொய் சொல்லி ஆலயத்துக்குள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்துகின்றனர்.திருமண்டலத்தால் நியமிக்கப்பட்ட ஒரு பாதிரியாரை அவதூறாகப் பேசி அடிக்கப் போனதால் அவர் தன்னை பாதுகாத்துக்கொள்ளவே செருப்பைத் தூக்கியிருக்கிறார். அதில் என்ன தவறு? ஆதரவு கேட்டுவரும் பிரதம பேராயரின் காரை சேதப்படுத்தி விரட்டுவீர்கள். ஆலயத்தை நிர்வாகம் செய்யும் பாதிரியாரை மிரட்டுவீர்கள். திருமண்டலம் சும்மா இருக்க வேண்டுமா? இப்படி ஆளாளுக்கு ரவுடித்தனம் செய்து ஆலயத்தை முடக்க நினைத்தால் திருமண்டல நிர்வாகம் சரியாக இருக்குமா?” என்று கொதித்தார்.ஆண்டவரே இவர்களை மன்னிக்காதேயும்!- எஸ்.அண்ணாதுரை