- அபிநவ் பெட்ரோல் விலை, டீசல் விலை, கேஸ் விலை அவ்வளவு ஏன் தக்காளி விலையும்கூட எவரெஸ்ட்டில் ஏறி நிற்கும் நிலையில், தற்போது மத்திய அரசு, மின்சார விலையையும் ‘பீக் டைமில்’ 20 சதவிகிதம் அதிகப்படுத்தலாம் என்று திருத்தத்தை மேற்கொண்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியைக் கிளப்பியிருக்கிறது..இது என்னடா மின்சாரத்திற்கு வந்த சோதனை? என்று தமிழ்நாடு மின்துறை பொறியாளர் சங்கத்தலைவர் காந்தியிடம் பேசினோம். “முன்னெல்லாம், இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் மாநில அரசாங்கமே 100 சதவிகித மின் உற்பத்தியில் ஈடுபட்டு வந்தன. மின் பயன்பாட்டிற்கு ஏற்ப மக்களிடம் மின் கட்டணமும் வசூலிக்கப்பட்டு அனைத்தும் சரியாக சென்றுகொண்டிருந்தது. இந்த சூழ்நிலையில் நாட்டுக்குத் தேவையான அனைத்து மின்சாரத்தையும், அரசாங்கத்தால் மட்டுமே உற்பத்தி செய்ய முடியாது. தனியாருடைய பங்களிப்பும் அவசியம் என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து 2003ம் ஆண்டு மின்சார சட்ட விதிகளில் சில கொள்கை முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, மாநில மின் உற்பத்தியில் கட்டாயம் தனியார் நிறுவனங்களின் பங்கு இருக்க வேண்டும் என்று கொண்டு வரப்பட்டது. தற்போது அந்த கொள்கையின்படிதான் மின் உற்பத்தி நடந்து வருகிறது.ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியாக மின்சார வாரியம் உள்ளது. ஆனால் அந்த அரசாங்கங்கள் ஒட்டுமொத்த தேவைக்கான மின் உற்பத்தியில் ஈடுபடுவதில்லை. உதாரணத்திற்கு தமிழகத்தைப் பொருத்தவரை, மாநிலத்திற்குத் தேவையான மின் தேவையில் வெறும் 25 சதவிகிதம் மட்டுமே அரசாங்கம் உற்பத்தி செய்கிறது. 30 சதவிகித மின்சாரம் மத்திய தொகுப்பான நெய்வேலி, ராம குண்டம், கல்பாக்கம், கூடன்குளம் போன்ற இடங்களில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து நமக்கு கிடைக்கிறது. இதுபோக, மீதமுள்ள 45 சதவிகித மின்சாரம் தனியார் காற்றாலை, சூரிய ஒளி மூலம்தான் பெறப்படுகிறது..தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை வாங்குவதில் பல முறைகள் இருக்கிறது. மாநிலத்தின் மின் தேவையை முன் கூட்டியே புரிந்துகொண்டு, ஒரு நாளைக்கு முன்பே வாங்க முடியும். இதற்கு ‘டாம்’ என்று பெயர். ஆனால் என்னதான் திட்டம்போட்டாலும், ஒரு நாளில் சில மணிநேரங்களில் தேவைக்கு அதிகமாகவும், சில நேரங்களில் எதிர்பார்த்ததை விட குறைவாகவுமே மின் பயன்பாடு இருக்கும். அப்படி எதிர்பார்த்ததைவிட மின் தேவை அதிகமாக இருக்கும் பட்சத்தில், தனியார் மின் உற்பத்தியை அணுகும்போது, சாதாரண கட்டணத்தைவிட அதிக கட்டணத்தை வசூலிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் ஒவ்வொரு நாளும் மின்சாரத்தை வாங்கி மக்களுக்கு சப்ளை செய்வதில் செலவுகள் ஏறி ஏறி இறங்கும். ஆனால் மக்களோ, தங்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப மட்டுமே மின் கட்டணத்தை செலுத்தும் சூழல் உள்ளது. இதனால் பல நேரங்களில் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படும் சூழல் உள்ளது.இப்போது இதை சீர்செய்யும் முயற்சியில்தான் பீக் ஹவர்களில் 20 சதவிகிதம் வரை உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதாவது, ‘கன்சியூமர்’ சார்டர் என்ற விதிமுறை உள்ளது. அதில் ‘டைம் ஆஃப் டே’ (டி.ஓ.டி) என்ற கான்செப்டை உருவாக்கியுள்ளனர். இதன்படி பகல் வேளைகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு வழக்கத்தைவிட, 20 சதவிகிதம் குறைவான கட்டணமும், பீக் ஹவர்ஸ் எனப்படும் மின் தேவை அதிகம் உள்ள சமயங்களில், பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு வழக்கத்தைவிட 10 முதல் 20 சதவிகிதம்வரை அதிக கட்டணம் வசூலிக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது..அதாவது, இப்படி செய்வதன் மூலம், மக்கள் வழக்கத்தைவிட குறைவாக மின்சாரத்தை பயன்படுத்துவார்கள். அதனால், அதிக விலை கொடுத்து பீக் டைம்களில் மின்சாரத்தை வாங்குவது குறையும் என்பது அரசாங்கத்தின் வாதம். ஆனால், இது முழுக்க முழுக்க மக்களை மறந்துவிட்டு லாபநோக்கத்தோடு எடுக்கப்பட்டிருக்கும் முடிவாகும். இதை செயல்படுத்தினால், மக்கள் பணம் மேலும் உறிஞ்சப்படும். கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே லாபமடையும்” என்று கொந்தளித்தார்.. ‘இப்படி அடுக்கடுக்காக அடித்தால் எப்படி?’ என்று பா.ஜ.கவின் மாநில பொதுச்செயலாளர் ராம ஸ்ரீநிவாசனிடம் கேட்டபோது, ‘‘அடிப்படையில் மின்சாரம் என்பது மாநிலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விவகாரம். மின் கட்டண நிர்ணயம் மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. மத்திய அரசு ஒரு வழிகாட்டுதலாகவே இந்த திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் மின் கட்டணத்தை நிர்ணயிக்க ரெகுலேட்டரி கமிஷன் உள்ளது. மின் கட்டணத்தை அவர்கள்தான் நிர்ணயிக்கிறார்கள். இதனால் மின் கட்டணம் உடனடியாக உயரும் என்று சொல்வது அபத்தமானது. அடுத்ததாக பீக் ஹவர்ஸில் 20 சதவிகித உயர்வு என்று மட்டும் குற்றம் சாட்டுபவர்கள், பிற நேரங்களில் 20 சதவிகிதம் கட்டணம் குறைக்கப்படுவதைப் பற்றி பேசவில்லை. அதாவது தங்களது மின் தேவைகளை சரியாக பிரித்துக்கொண்டு பயன்படுத்தினால் தற்போது உள்ளதைவிட குறைவாகவே மின் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இது தனியாருக்கு லாபமான முடிவு என்று சொல்வதும் தவறானது. காரணம், தனியாருடைய பங்களிப்பு இல்லாமல் நாட்டினுடைய மின் உற்பத்தியை பூர்த்தி செய்வது என்பது இயலாத காரியம். ஒருவேளை முடியும் என்று தி.மு.க. போன்ற கட்சிகள் நினைத்தால் அவர்கள் அதை தாராளமாக செய்து காட்டட்டும்” என்று முடித்தார். இருள்மயமான எதிர்காலம் மக்கள் உள்ளத்தில் தெரிகிறது.