- பொ.அறிவழகன்`எங்க ஏரியா உள்ள வராதே' - இரண்டு வெவ்வேறு சமூகங்களுக்குள் குரோதம் ஏற்பட்டால் இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேட்பது இயல்பான ஒன்றுதான். ஆனால், ஒரே சமூகத்துக்குள் ஏற்பட்ட மோதலில் அநீதியை தட்டிக் கேட்கச் சென்ற போலீஸாரை, `யாரைக் கேட்டு வந்தீங்க?' என அரிவாளால் மிரட்டிய சம்பவம்தான், தேனியின் தற்போதைய ஹாட் டாபிக்..பெரியகுளம் வராகநதியின் தெற்குக் கரையில் உள்ள பட்டாளம்மன் கோயில் தெருவுக்குச் சென்றோம். பட்டியலின வகுப்பைச் சேர்ந்த ஒரே பிரிவினர் மட்டும்தான் அந்தப் பகுதியில் வசிக்கின்றனர். நாம் சென்றபோது யாரும் பேச முன்வரவில்லை. ஒருவழியாக, பாதிக்கப்பட்ட பெண்ணான ஹேமலதாவின் முகவரியைத் தேடிக் கண்டுபிடித்துச் சென்றோம்.“என் தம்பி பிரபாகரன். பா.ஜ.க.வுல இருக்கான், சென்ட்ரிங் வேலைக்குப் போறான். அவனுக்கும் காமராஜ், மாசாணம் ஆகியோருக்கும் என்ன பிரச்னையோ தெரியல. என் தம்பிய மிரட்டி சண்டை போட்டிருக்கானுங்க. எனக்கு கல்யாணமாகி தாமரைக்குளத்துல குடியிருக்கேன். கடந்த வாரம் உடம்பு சரியில்லாததால் அம்மா வீட்டுக்கு வந்தேன்.ஞாயிற்றுக்கிழமை திடீர்னு பட்டாக்கத்தியுடன் வந்த மாசாணமும் காமராஜும் வீட்டிலிருக்கும் சாமான்களை எல்லாம் எடுத்துப் போட்டு உடைச்சாங்க. தடுத்தும் கேட்கல. நான் நைட்டியில இருந்தேன். திடீரென பட்டாக்கத்திய வயித்துப் பகுதியில வச்சி, `அப்படியே அறுத்துப் போட்டுடுவோம்'னு சொல்லி, நைட்டிய மட்டும் கிழிச்சாங்க. நான் துண்டால போத்திக்கிட்டேன்.உடனே நைட்டியின் பின்பக்கமாவும் கிழிச்சி மானபங்கப்படுத்தினாங்க. என் அம்மாவையும் அடித்து சேலையைக் கிழிக்கும்போது, 100-க்கு போன் செஞ்சு சொன்னேன். `பயப்படாம இருங்க... போலீஸ அனுப்புறோம்'னு ஆறுதல் சொன்னாங்க. ஆனாலும் வந்திருந்த ரெண்டு பேரும், `உங்க சங்க அறுத்து, போட்டுத் தள்ளிடுவோம்'னு சொல்லிட்டே, மிச்சமிருக்கும் பொருட்களையும் அடிச்சி நொறுக்கிட்டுப் போய்ட்டானுங்க..அதுக்குப் பிறகுதான் போலீஸ் பைக்கில் வந்தாங்க. அதுக்குப் பின்னாடி நடந்ததைதான் வீடியோவா பாத்திருப்பீங்க... இப்ப என்னன்னா, `சின்னப் பசங்க படிப்பு கெட்டுடும்.. கேஸ வாபஸ் வாங்கு'னு சொல்லுறாங்க. பணம் கொடுக்கிறேன்னும் சொல்றாங்க. நான் விடமாட்டேன். போலீஸ் பிடிச்சிட்டு போனவன்ல ஒருத்தன ஜாமீன்ல விட்டுட்டாங்க. தொடர்ந்து மிரட்டுறாங்க... ஒரே சாதியா இருந்தாலும் இப்படி செஞ்சவங்கள எப்படி சும்மா விடமுடியும்?'' என்றார் அழுகையுடன். இதையடுத்து, அப்பகுதி மக்களிடம் பேசியபோது, ``இங்குள்ள சின்னப் பசங்க கஞ்சா, அது இதுன்னு என்னென்னமோ போதைப்பொருளெல்லாம் பயன்படுத்துறாங்க. யார் சொல்றதையும் கேக்கமாட்டாங்க. இப்ப தேவையில்லாம போலீஸிடம் வம்பிழுத்து பெரிய பிரச்னையாக்கிட்டாங்க.ஆரம்பத்துல போதையில் பேசி வம்பு இழுத்தவனுங்க, ஒருகட்டத்தில் அரிவாளை எடுத்து வெட்ட வந்துட்டானுங்க. பாவம் போலீஸ்காரங்க கொஞ்ச தூரம் ஓடித்தான் தப்பிச்சாங்க. அடுத்து நிறைய போலீஸ் வந்துச்சு. அடிக்கடி விசாரிக்கிறாங்க. எங்க மேலயும் கேஸ் போட்டுவிடுவாங்களோன்னு பயமா இருக்கு'' என்றனர்.இளைஞர்களால் மிரட்டப்பட்ட போலீஸ்காரர் தினேஷ், செந்தமிழ் ஆகியோரிடம் பேசியபோது, ``மதியம் 2 மணி இருக்கும். நாங்கள் அங்கே சென்றபோது, எதிரே பைக்கில் மூன்று பேர் போதையில் சத்தம் போட்டபடியே சென்றனர். அங்கிருக்கும் ஆலமரம் அருகே சென்றபோது, மூன்று பேர் மறித்துக் கொண்டு, `எப்படி இங்க வந்தீங்க? யாரைக் கேட்டு வந்தீங்க?' என்றனர். அவர்களின் இடுப்பில் டின் பீர்களை செருகியிருந்தனர். அவர்கள் மூவரும் முழு போதையில் கன்ட்ரோல் இல்லாமல் இருந்தார்கள்..`புகார் தொடர்பாக விசாரணைக்கு வந்திருக்கோம்' என்றதும் `எங்கள சாதிய சொல்லி திட்டுனீங்கன்னு சொல்லி காக்கி சட்டைய கழட்ட வைக்கவா?' என்றனர் தெனாவெட்டாக. அதற்குப் பின்புதான் நாங்கள் அலெர்ட்டாகி மொபைலில் வீடியோவாக பதிவு செய்தோம்.அவர்கள் செய்த அராஜகத்தை உயர் அதிகாரிகளுக்கு ஆதாரத்துடன் தெரியப்படுத்தினோம். ஒரு டீம் கிளம்பி வந்தபோது தப்பி ஓடிவிட்டார்கள். இந்த மாதிரி பசங்க சாதி பிரச்னைய கிளப்பி தப்பிக்க முயல்வதும், பழிபோடுவதும் வாடிக்கையாக வைத்திருக்காங்க'' என்றனர். இதுகுறித்து விளக்கம் கேட்க பெரியகுளம் டி.எஸ்.பி. கீதாவை நேரில் சந்தித்தோம். “ஹேமலதா கொடுத்த புகாரில் ஒரு வழக்கும் போலீஸாரை மிரட்டியது தொடர்பாக ஒரு வழக்கும் தனித்தனியாக போடப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் தொடர்புடைய மூன்று பேரில் மாசாணம், தீபக் ரஞ்சித் ஆகியோரை கைது செய்துவிட்டோம்.மாசாணத்தின் வயது குறைவைக் காட்டி மாஜிஸ்திரேட், ஜாமீன் கொடுத்துள்ளார். காமராஜை தேடி வருகிறோம். விரைவில் கைது செய்வோம். இந்த மாதிரி வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.