கோடநாடு விவகாரம், பா.ஜ.க அழுத்தம், உள்கட்சி குழப்பம் என மும்முனைத் தாக்குதலில் சிக்கித் தவிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு இப்போது இன்னுமொரு சிக்கல். கோடநாடு வழக்கின் முடிவுகளை எதிர்பார்த்து எடப்பாடிக்கு சொந்தக் கட்சி நிர்வாகிகளே சூனியம் வைக்கத் தொடங்கிவிட்டதாக வெளியாகும் தகவல்களும்… கூடவே முன்னாள் அமைச்சர் வேலுமணியின் கை ஓங்கத் தொடங்கியிருப்பதும் எம்.ஜி.ஆர் மாளிகையை உலுக்கும் லேட்டஸ்ட் பூகம்பம்.என்னதான் நடக்கிறது? அ.தி.மு.க.வின் சீனியர் நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ``ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கட்சிக்குள் பல பிரச்னைகள் எழுந்தபோதும், நான்கரை ஆண்டுகால ஆட்சியை பழனிசாமி நிறைவு செய்தார். 2021 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதிலும், ஆட்சியை இழந்தபிறகு எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதிலும் தனது ஆளுமையை நிரூபித்தார். தொடர்ந்து, பொதுச் செயலாளராகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என சென்ற இடமெல்லாம் எடப்பாடிக்கு சாதகமாகவே அமைந்தது. `இனி எந்தப் பிரச்னையும் இல்லை' என நினைத்து தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கட்சியைக் கொண்டு வர அவர் எடுத்த முடிவுகளே, அவருக்கு வில்லனாக வந்து சேர்ந்துள்ளது" என பீடிகை போட்டவர், அடுத்து நடந்த விஷயங்களைப் பட்டியலிட்டார்.“மதுரையில் நடந்த அ.தி.மு.க.வின் எழுச்சி மாநாட்டுக்குப் பிறகு செப்டம்பர் 10-ம் தேதி எம்.ஜி.ஆர். மாளிகையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடப்பாடி எடுத்த சில முடிவுகள் சீனியர்களில் பலருக்கு மனக்கசப்பை ஏற்படுத்தியது.இரண்டு தொகுதி... ஒரு மா.செ!அ.தி.மு.க.வில் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை 75 ஆக இருக்கிறது. இதில், சில மாவட்டச் செயலாளர்களுக்கு ஐந்து அல்லது நான்கு தொகுதிகள் அடங்கிய எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது. அதனை மாற்றி 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற வகையில், 234 தொகுதிகளுக்கு 117 பேரை நியமிக்க எடப்பாடி முடிவு செய்தார். இதைக் கூட்டத்திலும் அறிவித்தார். இதன்மூலம், சீனியர்களுக்கு செக் வைப்பதுதான் அவரின் திட்டம்.ஆனால், எடப்பாடியின் இந்த அறிவிப்பு அவருக்கு எதிராகவே பூமராங் ஆகியிருக்கிறது. எடப்பாடிக்கு நெருக்கமாக இருந்த வடமாவட்ட முன்னாள் அமைச்சர் ஒருவரே, ‘நீங்களும் ஓ.பி.எஸ்ஸும் சேர்ந்து, இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்று காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நியமித்தீர்களே? அவர்களில் யாராவது கட்சியை வளர்த்தார்களா? இப்படி நியமித்த இடங்களில்தான் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிக தோல்வி ஏற்பட்டது. எனவே, பரிசீலித்து முடிவெடுங்கள்’ என்றார், காட்டமாக. அவரை சமாதானப்படுத்தும் வகையில், சில வாக்குறுதிகளை எடப்பாடி தரப்பு கொடுத்தபோது, ‘அப்படியானால் என்னுடைய மாவட்டத்தைக் கடைசியாக பிரிக்கப் பாருங்கள்' என விரிசலுக்கு தற்காலிக முற்றுப்புள்ளியை வைத்தார்.வேகமெடுத்த வேலுமணிஅதேநேரம், கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை வேலுமணியை மீறி எதுவும் செய்யமுடியாத நிலை உள்ளது. அங்கு ஐந்து தொகுதிகளுக்கு மாவட்டச் செயலாளராக வேலுமணி உள்ளார். அங்கு மாவட்டத்தைப் பிரிப்பது பற்றியும் எடப்பாடி ஆலோசனை நடத்தினார். இந்த விவகாரத்தில், பல்வேறு கூட்டல் கழித்தல் கணக்குகளைப் போட்டுப் பார்த்த வேலுமணி, தனி ஆவர்த்தனத்தைக் காட்டத் தொடங்கிவிட்டார்.அதன் முதல்கட்டம்தான் குடும்ப திருமணம். அதாவது, வரும் அக்டோபர் 21-ம் தேதி, தன் அண்ணன் மகன் விவேக்கின் திருமணம் நடைபெறவுள்ளது. மாநாடுபோல இந்த திருமணத்தை கோவையில் நடத்தவும் வேலுமணி திட்டமிட்டிருக்கிறார். இதற்காக திருமண பத்திரிகையை எடுத்துக்கொண்டு மாவட்டம்தோறும் சென்று வருகிறார்.முதலில் கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்குச் சென்ற வேலுமணி, மாஜி அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, கே.பி.அன்பழகன் ஆகியோருக்கு அவர்களின் இல்லத்துக்கே சென்று அழைப்பிதழை வைத்தார். அதைத்தொடர்ந்து இரண்டு மாவட்டங்களில் உள்ள ஒன்றியம் தொடங்கி கிளைச் செயலாளர் வரையில் திருமண பத்திரிகையை வழங்கியிருக்கிறார்.அதைத்தொடர்ந்து. தென்மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் வடமாவட்டங்களான திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய பகுதிகளுக்குச் சென்ற வேலுமணி, அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாஜி அமைச்சர்களை சந்தித்து அழைப்பிதழை கொடுத்திருக்கிறார். கூடவே, உள்ளூர் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார். அப்போது மாவட்டவாரியாக அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி, நாடாளுமன்றத் தேர்தல் பணிகள், கட்சியின் செயல்பாடு எனப் பல்வேறு விஷயங்களை கேட்டறியும் வேலுமணி, `மாவட்டங்களில் அடுத்து என்ன செய்ய வேண்டும்?' என சில ஆலோசனைகளையும் நிர்வாகிகளுக்கு வழங்கி வருகிறார்.செப்டம்பர் 13-ம் தேதியன்று அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரெய்டு நடத்தினர். உடனடியாக தி.நகர் சத்யாவின் வீட்டுக்கே நேரில் சென்ற வேலுமணி, ரெய்டு முடியும்வரை காத்திருந்து சத்யாவுக்கு ஆறுதல் கூறினார். மறுநாள் ஆர்.எஸ்.ராஜேஷின் வீட்டுக்குச் சென்று தைரியம் கொடுத்தார்..சீக்ரெட் சந்திப்பு?இதுபோன்ற செயல்கள் மூலம் தன்னை சக்திவாய்ந்த தலைவராக வேலுமணி அடையாளப்படுத்திக் கொள்ள முயல்வதாகவே பார்க்க முடிகிறது. ஒருவேளை கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடிக்கு சிக்கல் ஏற்பட்டால், அ.தி.மு.க.வில் அடுத்த தலைமை யார் என்பதில் சிக்கல் வர வாய்ப்புள்ளது. அப்போது, கட்சியைக் கட்டுக்கோப்பாக வழிநடத்திச் செல்ல, தன் பின்னால் அனைத்து நிர்வாகிகளும் அணிவகுக்க வேண்டுமென வேலுமணி நினைப்பதாகவே பார்க்க முடிகிறது. இதற்கான கருவியாக குடும்ப திருமணத்தைக் கையில் எடுத்திருக்கிறார்.அதேபோன்று, அ.தி.மு.க.வில் இணைந்து செயல்பட வேண்டுமென சசிகலா விரும்புகிறார். இதற்காக திரைமறைவில் அ.தி.மு.க. தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். எடப்பாடிக்கும் சசிகலாவுக்கு இடையே மோதல் இருந்தாலும் மேற்கு மண்டலத்தில் உள்ள சிலர், சசிகலாவுடன் நல்ல நட்பில் உள்ளனர். அந்தவகையில், அவரின் ஆதரவைப் பெறும் வேலைகளும் ஒருபக்கம் நடந்து வருகின்றன.டெல்லியில் எடப்பாடிவேலுமணியின் காய் நகர்த்தல்கள் ஒருபுறம் இருக்க, செப்டம்பர் 14-ம் தேதி டெல்லி கிளம்பிச் சென்றார், எடப்பாடி. அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். டெல்லி போகும்போதெல்லாம் ஒரு டஜன் நிர்வாகிகளுடன் செல்லும் எடப்பாடி, தனது கூட்டாளிகளின் மேற்கண்ட உள்ளடி வேலைகள் காரணமாகவே அவர்களை தவிர்த்துவிட்டு இம்முறை தனி ஆளாகச் சென்று அமித் ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தனக்கு தலைவலியாக இருக்கும் கோடநாடு வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு அமித் ஷாவிடம் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. தவிர, நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாகவும் சில வாக்குறுதிகளை பா.ஜ.க தலைமைக்கு கொடுத்திருக்கிறார்.20 : 20 ஃபார்முலாஅ.தி.மு.க.வில் தனக்கு பெரியளவில் எதிர்ப்பு கிளம்பினால், பா.ஜ.க.வின் சப்போர்ட் வேண்டுமென எடப்பாடி நினைக்கிறார். இதற்காக 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒற்றை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்கும் முடிவில் இருந்தவர், தற்போது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். அ.தி.மு.க.வில் எழுந்துள்ள புதிய பூகம்பத்தால், பா.ஜ.க.வை பகைத்துக்கொள்ளவும் எடப்பாடி விரும்பவில்லை.இதன் தொடர்ச்சியாக, பா.ஜ.க. தரப்பில் இருந்து வைக்கப்பட்ட கோரிக்கைக்கு செவிசாய்த்துவிட்டதாகத் தெரிகிறது. அதாவது, ‘20 தொகுதிகளை பா.ஜ.க.விடம் கொடுத்துவிடவேண்டும். கூட்டணிக் கட்சிகளுக்குப் பிரித்துக்கொடுக்கும் பொறுப்பை பா.ஜ.க. பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்பதுதான் டீல். அதன்படி, அ.தி.மு.க. 20 தொகுதிகளை வைத்துக்கொண்டு, மீதமுள்ள புதுவை உள்பட 20 தொகுதிகளை பா.ஜ.க.விடம் ஒப்படைக்கவும் தயாராகி வருவதாகத் தகவல்.சீற்றத்தில் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார்இப்படியொரு நிலை வந்தால், பா.ஜ.க கேட்கும் தென்சென்னை, மதுரை, கோவை என சில தொகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டியது வரும். தென்சென்னை தொகுதியில் தனது மகன் ஜெயவர்தனை போட்டியிட வைக்க ஜெயக்குமார் முடிவு செய்திருக்கிறார். இதற்காக தேர்தல் பணிகளையும் செய்து வருகிறார். இதனால் தென்சென்னையை பா.ஜ.க.வுக்கு விட்டுத்தருவதை அவர் விரும்பவில்லை. இதன் காரணமாக, முன்னாள் முதல்வர் அண்ணா குறித்து அவதூறாகப் பேசிய அண்ணாமலைக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த ஜெயக்குமார், ‘மறைந்த தலைவர்களை விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ளவேண்டும்’ என எச்சரித்தார். செல்லூர் ராஜூவும், ‘அண்ணாவைப் பற்றி தவறாகப் பேசினால் அவர்கள் நாக்கு அழுகிவிடும்’ என்று சாபம் கொடுத்தார்.அந்தவகையில், தமிழக பா.ஜ.க.வுடன் கடும் மோதலும் டெல்லி பா.ஜ.க.வுடன் பதமான போக்குடன் நடந்து கொள்வதைப் பார்த்து, அ.தி.மு.க தொண்டர்கள் கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். `மோதல் போக்கு தொடர்ந்தால் தேர்தல் நேரத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பே இல்லை' என்ற குமுறல்களும் கேட்கத் தொடங்கிவிட்டன.கோடநாடு வழக்கின் வேகம், நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்து பா.ஜ.க கொடுக்கும் அழுத்தம், போதாக்குறைக்கு வேலுமணியின் தொடர் சந்திப்புகள் என ஒருவித பதற்ற நிலையிலேயே சிக்கித் தவிக்கிறார், எடப்பாடி" என விவரித்து முடித்தார்.அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேலிடம் இதுகுறித்துக் கேட்டபோது, ``மாவட்டத்தை பிரித்து புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிப்பது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை. அதேநேரம், காலியாக இருக்கும் ஆறு இடங்களுக்கு புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் எந்த அதிருப்தியும் இல்லை. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்று வருகிறது. வேலுமணி தலைமைக்கழக நிர்வாகி என்பதால், கல்யாண பத்திரிகையைக் கொண்டு செல்லும்போது, அங்கு நடக்கும் கூட்டங்களில் `இரண்டு வார்த்தை பேசுங்கள்' எனக் கேட்கிறார்கள். மற்றபடி கட்சியில் எந்த வேறு எந்தப் பிரச்னைகளும் கிடையாது" என்றார்.எடப்பாடியின் விசுவாசிகளோ, “கட்சியின் அடிமட்ட தொண்டனாக இருந்து வளர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி. கடந்த ஐந்தாண்டுகளில் எத்தனையோ புயல்களைக் கடந்துசென்ற எடப்பாடி, இதையும் கடந்து செல்வார்” என்கின்றனர். அடுத்து நடக்கப் போவதை பொறுத்திருந்து பார்ப்போம்!- பாபுபடங்கள்: ம.செந்தில்நாதன்