`முதியோர் பென்சன் முறையாக வந்து சேருகிறதா?' என எந்த முதியவரிடம் கேட்டாலும் அங்கே ஒரு கண்ணீர் கதை எட்டிப் பார்க்கும். அந்தத் திட்டத்திலும் தன் உறவினர்களை எல்லாம் சேர்த்து கோடிகளை வாரிக் குவித்திருக்கிறார், திட்டக்குடியைச் சேர்ந்த பெண் ஊழியர் ஒருவர். ``என்ன நடந்தது?'' என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மங்களூர் ஒன்றியச் செயலாளரும் திட்டக்குடி நகர்மன்ற கவுன்சிலருமான ரெங்க.சுரேந்தரிடம் கேட்டோம். “திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூகப் பாதுகாப்பு திட்டத்துக்காக தனி வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த வட்டாரத்தில் உள்ள மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், ஏழை விவசாயிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், திருமணமாகாத ஆதரவற்ற முதிய பெண்கள் உள்ளிட்டோருக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவது, இந்த அலுவலகத்தின் பணி. இங்கு 2012-ம் ஆண்டு முதல் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக தினக்கூலி அடிப்படையில் அகிலா என்பவர் வேலை பார்த்து வருகிறார். தாலுகா அலுவலகத்தில் முதியோர் உதவித்தொகை உட்பட எந்தக் காரியம் நடக்கவேண்டுமானாலும் அகிலாவை கவனித்தால் போதும். ஒரேநாளில் ஆர்டர் வந்துவிடும். இங்கே கண்ணன் என்பவர் தாசில்தார் இருந்தபோது, அவரின் கையெழுத்தை அகிலாவே போடும் அளவுக்குக் கொடிகட்டிப் பறந்துள்ளார்..பயனாளிகளுக்கு அனுப்பும் உதவித்தொகைக்கு பில் போடும்போது, அதில் இடையிடையே இவரின் உறவினர்களின் பெயரையும் சேர்த்துவிடுவாராம். உதாரணமாக, நூறு பேருக்கு உதவித்தொகைக்காக பில் போடுகிறார்கள் என்றால் முதல் ஐந்து பேர் உண்மையான பயனாளியாக இருப்பார்கள். அடுத்த ஐந்து பேர், அகிலாவின் கணவர் வினோத், தாய் விஜயா, தங்கையின் கணவர் பாலகிருஷ்ணன், பெரியப்பா மணிவண்ணன் உள்ளிட்டவர்களின் பெயர்களாக இருக்கும். அடுத்த ஐந்து பேர் ஒரிஜினல் பயனாளிகளாக இருப்பார்கள். இப்படி மாற்றி மாற்றிப்போட்டு பட்டியலை தயார் செய்து கையெழுத்தை வாங்கிக் கொள்வார். இவற்றை எல்லாம் யாரும் ஆய்வு செய்யாதது, அகிலாவுக்கு மிகவும் சாதகமாகிவிட்டது. அந்த தைரியத்தில் இயற்கையாகவோ, விபத்திலோ இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் மூலம் கொடுக்கப்படும் லட்சம் ரூபாய்க்கு மேலான உதவித் தொகைகளை வந்த சுவடே தெரியாமல், தன் உறவினர்களின் வங்கிக்கணக்குக்கு அனுப்பியிருக்கிறார்.. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திட்டக்குடிக்கு ரெகுலர் வட்டாட்சியராக ரவிச்சந்திரன் வந்தார். இவர் இதற்கு முன்பே இங்கு எட்டு ஆண்டுகள் இருந்தவர்தான். ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று ஏழை எளிய மக்களை சந்தித்து அவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்ததால், இவருக்கு நல்ல பெயர் இருக்கிறது. ஆனால், இவர் காலத்திலும் சதாசிவம், கண்ணன், ராஜா, அண்ணாதுரை ஆகியோர் வட்டாட்சியர்களாக இருந்த காலகட்டங்களில் அகிலா மோசடி செய்திருக்கிறார். எவராலும் கண்டுபிடிக்க முடியாதபடி கனகச்சிதமாக அகிலா செய்துவந்த திருட்டுகள், சில ஊழியர்களால் கண்டுபிடிக்கப்பட்டதால் அகிலாவின் ஆட்டத்துக்கு என்ட் கார்டு போடப்பட்டுள்ளது'' என்றார். தொடர்ந்து பேசும்போது, ``அகிலாவின் மோசடிகள் குறித்து சென்னைக்குப் புகார்க் கடிதம் சென்றுள்ளது. இதையடுத்து, ‘திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பயனாளிகளுக்குச் சேரவேண்டிய பணம் அதிகாரிகள், ஊழியர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகப் புகார் வந்துள்ளது. இதன்மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யவும்’ எனக் கடிதம் வந்துள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணை நடத்துமாறு, கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசுவை மாவட்ட ஆட்சியர் நியமித்தார். இதன் தொடர்ச்சியாக, திட்டக்குடி வட்டாட்சியராக இருந்த ரவிச்சந்திரனை என்.எல்.சி. நிலஎடுப்பு தாசில்தார் அலுவலகத்துக்கு இடமாற்றிவிட்டார்கள். அகிலாவோடு கூட்டாக இந்த மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகளையும் கைது செய்யவேண்டும். பண மோசடி செய்து இவர்கள் வாங்கியுள்ள சொத்துகளை பறிமுதல் செய்து, உரிய பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு ஆர்பாட்டம் நடத்த உள்ளோம்" என்றார்..இதுகுறித்து, திட்டக்குடி வட்டாட்சியராக இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட ரவிச்சந்திரனிடம் பேசினோம். “எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. விசாரணை நடைபெற்றுவருவதால் எதையும் கூறவிரும்பவில்லை" என்றார். அதேநேரம், தாலுகா அலுவலக ஊழியர்களோ, “சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளின் பெயர்கள் உள்ள லிஸ்டில், இடையிடையே அகிலாவின் உறவினர்கள் பெயர்களைச் சேர்த்து, கோடிக்கணக்கில் பணத்தைச் சுருட்டியுள்ளார். திட்டக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு எதிரே உள்ள தெருவில் சுமார் 10 சென்ட் இடத்தில் இவர் கட்டியுள்ள வீட்டின் மதிப்பே ஒன்றரைக் கோடியைத் தாண்டும். இதில், உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்கின்றனர்.அகிலாவிடம் பேசுவதற்காக முயற்சி செய்தபோது, அவர், சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவரின் உறவினர்கள் தெரிவித்தனர். கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜிடம் பேசியபோது, “விசாரணை நடைபெற்று வருகிறது. அது முடிந்த பிறகுதான் என்ன நடந்தது என்பதை உறுதியாகக் கூற முடியும்” என்றார். `அரசின் திட்டங்கள் அறிவித்த காலத்துக்குள் வந்தால் அது நிர்வாக சாதனை' என ஆகஸ்ட் தொடக்கத்தில்தான் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார், முதல்வர் ஸ்டாலின். அதற்குள் இப்படி! - கோவிந்தராஜு