உங்கள் கூடவே இருந்து நான் செய்கிற காரியங்கள் பயங்கரமாக இருக்கும்’ என்று பிரார்த்தனைக் கூட்டங்களில் பேசப்படும் வசனத்துக்கும் கோவில்பட்டி பாதிரியாருக்கும் செம பொருத்தம்போல. காணிக்கை பணம், கள்ளத்தொடர்பு என கலெக்டர் அலுவலகம் வரை பஞ்சாயத்து அணிவகுத்ததுதான், தூத்துக்குடி ஹாட்.பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் அலுவலகம் வந்த காலே பாண்டியன் என்பவரிடம் பேசினோம். “கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் இருக்கிறது, பெந்தேகொஸ்தே கிறிஸ்தவ ஏஜி சபை. அதில், பாஸ்டராக இருந்தார் ஸ்டீபன். கிறிஸ்துவர்களை பொறுத்தவரை வரும் வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை காணிக்கையாக கொடுக்க வேண்டும். இந்தப் பணத்தை ஏஜி சபை போதகர் மறைப்பதாக குற்றம் சுமத்தியதால், ஸ்டீபன் இடமாற்றம் செய்யப்பட்டார்.`எனக்கு தேவன் தந்த ஊர் கோவில்பட்டி. இங்கிருந்து நகர மாட்டேன் ' என்றார். அடுத்து, `சத்திய முழக்கம் அசெம்ப்ளி சர்ச்' என்கிற பெயரில் புதிய சபையை தொடங்கினார். `நான் தொடங்கும் சபையில் கணக்கு வழக்கு சரியாக இருக்கும். தேவனால் அழைத்து வரப்பட்டவன். பிழைப்புக்காக வரவில்லை’ என்றார். அதை நம்பி நான் உள்பட 200 குடும்பத்தினர் ஸ்டீபனின் சபையில் இணைந்தோம்'' என்றவர், அடுத்து நடந்த சம்பவங்களை அடுக்கினார்..``முதலில் வாடகை கட்டடத்தில் சபை இயங்கியது. புதிய சர்ச் கட்டினால் தனியாக கல்லறை தோட்டம் வேண்டும். இதற்காக காணிக்கை கேட்டார், கொடுத்தோம். அதைவைத்து 20 சென்ட் நிலம் வாங்கினோம். பிறகு, சொந்தமாக சர்ச் கட்ட திட்டமிட்டார். ஜெபக் கூட்டம் நடத்தி, `நீங்கள் கொடுக்கும் நகைகளுக்கு இரண்டு மடங்காக ஆண்டவர் திருப்பி கொடுப்பார்' என்றார். கடவுள் நம்பிக்கையைத் தூண்டியதால் மக்களும் மயங்கி, பணம், நகைகளை அள்ளிக் கொடுத்தனர். ஒரு கோடி ரூபாய் வரையில் சேர்ந்துவிட்டது.அதைவைத்து, எழுபது சென்ட் நிலத்தை வாங்கினோம். 2019 வருடம், `சத்திய முழக்கம்' என்கிற பெயரில் ட்ரஸ்ட் தொடங்கி பத்திரப்பதிவு செய்தோம். தொடர்ந்து, `சர்ச் கட்ட வசூல் செய்ய வேண்டும்' என்றார். இந்தநிலையில், சபைக்கு வந்த கைம்பெண் ஒருவருடன் பாஸ்டருக்கு பழக்கம் இருப்பதாக பேச்சு கிளம்பியது.உடனே, பாஸ்டரிடம் விளக்கம் கேட்டோம். `அவன் அவதூறு பரப்புகிறான்' என்றார். `அப்படியானால் அவரைப் பற்றி போலீஸில் புகார் கொடுப்போம்' என்றோம். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. எங்களுக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து, கணக்கு விவரங்களைக் கேட்டோம். கணக்கு கேட்பவர்களுக்கு சாபம்விட்டார். `பைபாஸ் ரோட்டில் விபத்தில் இறந்துவிடுவீர்கள். தவளை மாதிரி பிள்ளைகள் பிறக்கும். குடும்பம் விளங்காது' என ஆவேசப்பட்டார்.அதன்பிறகுதான், அவரின் தில்லாலங்கடி வேலைகள் தெரியவந்தன. அவர் தொடங்கிய ட்ரஸ்ட்டில் அவரின் குடும்பத்தினர் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர். அவர் நினைத்தால் உறுப்பினர்களை மாற்றிக்கொள்ளலாம். நினைத்தபோது வேறு டிரஸ்ட்டில் இணைத்து கொள்ளலாம் என்று பதிவு செய்துள்ளார்..மக்கள் கொடுத்த காணிக்கை பணத்தில் கள்ளக்காதலியுடன் கொடைக்கானல் டூர் போயிருக்கிறார். காணிக்கைக்கும் கணக்கே இல்லை. ஒரு மாதத்தில் ஏழு லட்சம் ரூபாய் காணிக்கை வரும். அந்தவகையில் 3 கோடி ரூபாய்க்கு கணக்கு இல்லை. சர்ச் கட்ட வாங்கிய இடத்தின் தற்போதைய மதிப்பு ஏழு கோடி ரூபாய். இதையெல்லாம் கேட்டதும் ஏழு பேர் மீது புகார் கொடுத்திருக்கிறார். இப்போது ரவுடிகள் துணையுடன் இடத்தை ஆக்ரமிப்பு செய்துள்ளார்” என்றார், கொதிப்புடன்.``இந்தப் புகார்கள் எல்லாம் உண்மையா?" என பாதிரியார் ஸ்டீபனை நேரில் சந்தித்துக் கேட்டோம். “ஏஜி சபையில் போதகராக பணியாற்றியது உண்மை.. தலைமை பாஸ்டர் இறந்ததும், `சர்ச்சை யார் கையாள்வது?' என்று தலைமை பாஸ்டரின் மகன்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. அவர்கள் சண்டையில் என்னை பழிகடா ஆக்கினார்கள். தொடர்ந்து, சத்திய முழக்கம் என்கிற பெயரில் சபையை தொடங்கினேன். நான் யாரையும் என்னுடன் வருமாறு அழைக்கவில்லை. என்னை நம்பி வந்தவர்களை வைத்து சபையை நடத்தினேன்.நாளாக நாளாக பக்தர்கள் அதிகம் வந்தார்கள். அதன்பிறகுதான், சுடுகாட்டுக்கு இடம் வாங்கினோம். சர்ச் கட்ட இடம் வாங்கினோம். அதற்கு மக்களிடம் காணிக்கை கேட்டேன். மக்கள் விரும்பித் தந்தார்கள். வாங்கிய இடத்தை அறக்கட்டளையின் பெயரிலேயே பதிவு செய்தேன். ஆனால், சிலருக்கு அறக்கட்டளையில் நிர்வாகம் செய்ய ஆசை வந்துவிட்டது.`சர்ச் கட்டும்போது அறக்கட்டளையை மாற்றி அமைக்கலாம்' என்றேன். ஆனால், அவர்கள் அமைதி காக்கவில்லை. நியாயப்படி பார்த்தால் அவர்கள் தானாக வந்த பக்தர்கள். அறக்கட்டளையில் அவர்கள் இடம்பெற முடியாது. அது தெரிந்ததும் பெண் தொடர்பு, காணிக்கையை மறைத்துவிட்டேன், இன்ப சுற்றுலா சென்றோம் என்றெல்லாம் அவதூறு பரப்புகின்றனர்" என்றார்.உண்மை என்னவென்பது தேவனுக்கே வெளிச்சம்! - எஸ்.அண்ணாதுரை