சொந்தக் கட்சியாக இருந்தாலும் தவறென்று வந்துவிட்டால் சரமாரி தாக்குதல் தொடுப்பதில் பா.ஜ.க-வின் சுப்ரமணியன் சுவாமியை விஞ்ச முடியாது. சமீப காலமாக பா.ஜ.க ஆட்சியை விமர்சித்து ட்வீட்டுகளை தெறிக்கவிட்டவர், இப்போது உதயநிதிக்கு எதிராகக் கிளம்பியிருக்கிறார். உதயநிதி மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள அனுமதிக்கும்படி ஆளுநர் ரவிக்கு கடிதம் எழுதிவிட்டு காத்திருக்கும் சு.சுவாமியிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.`சனாதனத்தை ஒழிப்போம் என்றுதான் கூறினேன். சனாதனம் வேறு, இந்து மதம் வேறு' என்கிறாரே உதயநிதி?உதயநிதி ஸ்டாலினுக்கு இந்து மதம் பற்றி என்ன தெரியும்? அவர் அப்பாவுக்கே இந்து மதம் பற்றி எதுவும் தெரியாது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் சினிமா மட்டும்தான். சனாதன தர்மத்தைப் படம் பார்த்து கற்றுக்கொள்ள முடியாது. அது ஒரு கடல். குடும்ப வாழ்க்கை, சமுதாய வாழ்க்கை, துறவற வாழ்க்கை என்று ஒரு மனித வாழ்க்கையில் பல்வேறு படிநிலைகளை எப்படி வாழ்வது என்று போதிக்கும் தர்மம்தான் சனாதனம். கடந்த 55 வருட திராவிட ஆட்சியில் தமிழகத்தில் வறுமை தலைவிரித்தாடுகிறது. விலைவாசி எகிறுகிறது. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அரசியல் லாபத்துக்காக இந்து மதத்தை சீண்டுகின்றனர். இதற்கெல்லாம் இந்துக்கள் பதில் சொல்லவேண்டியதில்லை. ஆனால், சட்டரீதியான நடவடிக்கையை எடுக்கலாம்.இந்து மதத்தை சீண்டுவதால் தி.மு.க.வுக்கு என்ன லாபம்?திராவிடம் என்ற நிலப்பரப்பை இனம் என்று திரித்து இந்துக்களிடம் பிரித்தாளும் சூழ்ச்சியை செய்தவர்கள், ஆங்கிலேயர்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, ஆங்கிலேயர்களின் கொள்கையை அப்படியே பின்பற்றி பிரிவினைவாத அரசியல் செய்தவர் ஈ.வே.ராமசாமி. அவருடைய திராவிடர் கழகத்திலிருந்து தோன்றிய கட்சி தி.மு.க. இந்துக்களை ஏற்றுக்கொண்டால், திராவிடக் கொள்கை அழிந்துவிடும். திராவிடக் கொள்கை அழிந்துவிட்டால் தி.மு.க.வுக்கு வேலையே இல்லை. அதனால்தான், பிரிட்டிஷ் ஏஜென்ட்போல இந்து மதத்தை விமர்சனம் செய்கின்றனர்.`தி.க. மற்றும் தி.மு.க.வும் இந்துக்களை எதிர்ப்பதற்குப் பின்னால் அந்நிய சக்திகள் உள்ளன' என்று வலதுசாரிகள் கூறுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?தி.மு.க மட்டுமல்ல. இந்தியாவில் உள்ள இந்து விரோதக் கட்சிகளின் பின்னால் அந்நிய சக்திகள் இருக்கலாம். ஏற்கெனவே, இங்கு வெளிநாடுகளில் இருந்து காசு வாங்கி மதம் மாற்றுவது போன்ற செயல்கள் நடந்துவருகின்றன. அதே கும்பல் இங்குள்ள கட்சிகளை மறைமுகமாக பயன்படுத்தி அரசியல் செய்யலாம். ஆனால், அதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. காரணம், இங்கு சட்டம் வலுவாக உள்ளது. யாருடைய மதத்தை ஒருவர் புண்படுத்தினாலும் அது சட்டப்படி குற்றம்.அண்ணாமலையின் பாதயாத்திரையை எப்படிப் பார்க்கிறீர்கள்?தமிழகத்தில் இத்தனை பிரச்னை நடந்துக்கொண்டிருக்கும்போது முறையான பதிலே கொடுக்காமல் இருக்கிறார். அவருடன் பாதயாத்திரை செல்பவர்கள் யாரும் உதயநிதியின் வீட்டுக்கோ, அலுவலகத்துக்கோ சென்று போராட்டம் நடத்த முயற்சிக்கவில்லை. மோடியையோ, அமித் ஷாவையோ அழைத்துக் கண்டன கூட்டம் நடத்தியிருக்கலாம். அதையும் செய்யவில்லை.இவ்வளவு பேசும் நீங்கள், `பா.ஜ.க.விலேயே இல்லை' என்ற செய்தி பரவுகிறதே?நான் துணிச்சல் மிக்கவன். தவறு யார் செய்தாலும் அதை விமர்சனம் செய்வேன். பிரதமர் மோடியைக்கூட நான் விமர்சனம் செய்துள்ளேன். அதனால், விஷமிகள் சிலர் இதுபோன்ற கருத்துக்களை பரப்புகின்றனர். ஆனால் அவர்கள்தான் பிரச்னை வரும்போது, `இதை எதிர்த்து சுப்ரமணிய சுவாமி நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்றும் கெஞ்சுகிறார்கள்.தி.மு.க ஆட்சியை கலைத்துவிடுவேன் என்று மிரட்டுகிறீர்களே? இது சரிதானா?தி.மு.க ஆட்சியை கலைப்பது ரொம்ப ஈஸி. 1991ம் ஆண்டு இதேபோல தி.மு.க ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுப்போனது. அப்போது பிரதமராக இருந்த சந்திரசேகர் தி.மு.க ஆட்சியைக் கலைத்தார். அப்போது, நான் மெட்ராஸில் இருந்தபடியே அனைத்தையும் கவனித்துக்கொண்டேன். பிறகு நடந்த தேர்தலில் தி.மு.க வெறும் இரண்டு தொகுதிகளைத்தான் வென்றது. இப்போது கவர்னரிடம் புகார் அளித்துள்ளேன். முப்பது நாள்கள்வரை அவகாசம் உள்ளது. அதற்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் ஏறுவேன். ஆட்சி கலைந்து மீண்டும் தேர்தல் வந்தால் தி.மு.க.வின் லட்சணம் தெரிந்துவிடும்.இதனால் எந்தப் பிரச்னையும் வரப்போவதில்லை. திராவிட, தனித் தமிழ் பேசும் அரசியல்வாதிகளின் பேச்சு அனைத்தும் வெத்து வேட்டுதான். நான் தமிழகம் வந்தால் எனது தலையை சீவி விடுவேன் என்று சீமான் பஞ்ச் டயலாக் பேசினார். அதன்பிறகு பத்து முறை சென்னைக்கு வந்து சென்றுவிட்டேன். எனக்கு ஒன்றுமே ஆகவில்லை. இதிலிருந்தே இவர்கள் காகிதப் புலிகள் என்பதை புரிந்துக்கொள்ள முடியும்.ஜி20 மாநாடு பற்றிய உங்களின் பார்வை என்ன?அரசியல்ரீதியாக அது பா.ஜ.க.வுக்குப் பயன்படாது. ஏற்கெனவே சொன்னதுபோல விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு போன்ற விஷயங்களில்தான் மக்கள் கவனம் செலுத்துவார்கள். பல கோடிகளை செலவழித்து ஜி20 மாநாடு நடத்துவதால் இந்தியாவுக்கு என்ன பயன்? வரும் 2024 தேர்தலில் பா.ஜ.க.வுக்கு கை கொடுக்கும் என்று தோன்றவில்லை.- அபிநவ்