`பிறருக்குக் கொடுக்கக் கொடுக்க குறையாதது கல்வி ஒன்றே' என்பதால்தான் `கற்றனைத்தூறும் அறிவு' என்றார் வள்ளுவர். அந்தக் கல்வியிலும், தனியார் பாணியில் அரசுப் பள்ளிகள் பாரபட்சம் காட்டுவதாகக் கிளம்பியுள்ள புகார், கல்வித் துறையின் லேட்டஸ்ட் களங்கம்.``என்ன நடந்தது?'' என இந்திய மாணவர் சங்கத்தின் வடசென்னை மாவட்ட செயலாளர் நிதீஷிடம் பேசினோம், ``சில நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. மாதவரத்தைச் சேர்ந்த ஒரு கூலித் தொழிலாளியின் மகள் தனியார் பள்ளியில் படித்து வந்தார். அவர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய நிலையில் தேர்வில் தோல்வியடைந்துவிட்டார். பிறகு நடந்த துணைத் தேர்வில் அவர் தேர்ச்சி பெற்றார். தான் படித்த அதே பள்ளியில் பிளஸ் 1 சேர விண்ணப்பித்தார். ஆனால், அவருக்கு சீட் கிடைக்கவில்லை. இதையடுத்து, மாதவரம் அரசுப் பள்ளியில் சேர முயன்றபோது, அங்கு சீட் கிடைக்கவில்லை.அரசுப் பள்ளியில் சீட் கொடுக்க மறுத்ததற்கான காரணம், `துணைத் தேர்வு எழுதி பாஸ் செய்யும் மாணவர்களை பள்ளியில் சேர்த்துக்கொண்டால், அவர்களால் 12 வகுப்பு பொதுத் தேர்வில் பாஸ் பர்சன்டேஜ் குறைய வாய்ப்புள்ளது' என்பதுதான். இந்த விவகாரம் எங்கள் கவனத்துக்கு வந்ததும், நேரடியாக பள்ளிக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்னோம். அதன்பிறகே அந்தப் பெண்ணுக்கு சீட் கிடைத்தது.. மாணவர்களைத் தயார் செய்து அனுப்புவதுதான் பள்ளியின் வேலை. பிள்ளைகள் அனைவரும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள். சிலர் படிப்பில் சுட்டி, சிலர் விளையாட்டில் கில்லி, இன்னும் சிலர் பொது அறிவில் சிறந்தவராக இருப்பார்கள். அதைப் பற்றியெல்லாம் பள்ளி நிர்வாகம் கவலைப்படக் கூடாது. மாறாக அனைத்து மாணவர்களையும் ஒன்றுபோல கருதி கல்வியை வழங்க வேண்டும். தனியார் பள்ளிகள்தான் இந்த அடிப்படை புரிதலை தூள்தூளாக்கிவிட்டன. அவர்கள் தங்களது வணிக நோக்கத்துக்காக அறிமுகப்படுத்தியதுதான் நூத்துக்கு நூறு பாஸ் பர்சன்டேஜ். இதனால் பொதுத் தேர்வில் தோற்று, துணைத் தேர்வில் வென்ற மாணவ மாணவிகளுக்கு தனியார் பள்ளிகளில் ‘சீட்’ கிடைப்பதில்லை. இந்நிலையில், அரசுப் பள்ளிகளும் இதே டிரெண்டை கையில் எடுத்துள்ளன. காரணம், நூற்றுக்கு நூறு ரிசல்ட் காட்ட வேண்டுமென்று அரசின் உயர்மட்டத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதுதான். வியாசர்பாடி கணேசபுரம் அரசுப் பள்ளி, எம்.கே.பி. நகர் அரசுப் பள்ளி, ஆர்.கே.நகர் தமிழ்நாடு அரசுப் பள்ளி, பட்டேல் நகர் அரசுப் பள்ளி, மணலி அரசுப் பள்ளி, திருவொற்றியூர் பர்மா நகர் அரசுப் பள்ளி போன்றவற்றில் துணைத் தேர்வு எழுதி வரும் மாணவர்களுக்கு சீட் வழங்கப்படுவதில்லை. இது சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளின் லிஸ்ட் மட்டுமே'' என்றவர், `` தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான அரசுப் பள்ளிகளில் துணைத் தேர்வு எழுதி வரும் மாணவர்களுக்கு சீட் தர மறுக்கும் கொடுமை நடந்து வருகிறது. இந்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது என்பதுதான் கூடுதல் வேதனை. துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சீட் கொடுக்க மறுத்தால் அவர்கள் கல்வி அடியோடு நின்றுவிடும். அவர்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிடும்'' என்றார் வேதனையுடன். .இதே விவகாரம் குறித்து, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறும்போது, ’’துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெரும் மாணவர்களை அரசுப் பள்ளிகள் புறக்கணிக்கும் விவகாரம் கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. இன்றையை சூழ்நிலையில் மக்களே அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். இதன் காரணமாக தனியார் பள்ளிகளுக்குப் போட்டியாக அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்திக் காட்ட வேண்டிய சூழலுக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது'' என விவரித்தவர்,`` ஒரு மாணவன் தேர்ச்சி பெறவில்லை என்றால் உடனே தலைமை ஆசிரியரை சி.இ.ஓ கேள்வி கேட்கிறார். அவரை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் கேள்வி கேட்கிறார், அவரை அமைச்சர் கேள்வி கேட்பார். அமைச்சரை மீண்டும் மக்கள் கேள்வி கேட்பார்கள். எனவேதான், `நமக்கெதுக்கு வம்பு' என்று அரசுப் பள்ளிகள் துணைத் தேர்வு எழுதும் மாணவர்களைப் புறக்கணிக்கின்றன. இந்த சிக்கலான வளையத்தில் சிக்கியிருப்பது என்னவோ மாணவர்களின் எதிர்காலம்தான்’ என்றார்..``இதெல்லாம் சரிதானா?'' என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அறிவொளியிடம் கேட்டோம். “இந்த முறை 52 ஆயிரம் மாணவர்கள் துணைத் தேர்வு எழுதியுள்ளனர். அதில், 27 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 11 ஆயிரம் பேர் பிளஸ் ஒன் சேர்ந்துள்ளனர். மீதமுள்ள மாணவர்கள் ஐ.டி.ஐ மற்றும் பாலிடெக்னிக் போன்ற படிப்புகளில் சேர்ந்திருக்கலாம். அப்படி சேர்ந்த மாணவர்களைப் பற்றி கணக்கு எடுத்து வருகிறோம்.அதேநேரம் எந்த படிப்பிலுமே சேராத மாணவர்கள் இருந்தால், அவர்கள் தொடர்ந்து படிக்காததற்கு என்ன காரணம்? என்பது பற்றி முறையாக விசாரணை செய்யப்படும். எம்.கே.பி நகர் போன்ற சில இடங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் இடப்பற்றாக்குறை இருக்கிறது. இதனால் சில மாணவர்களுக்கு சீட் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம். மற்றபடி துணைத் தேர்வு எழுதிய காரணத்திற்காக ‘சீட்’ வழங்க முடியாது என்று எந்த அரசுப் பள்ளி கூறினாலும், அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று முடித்தார்.`கேடில் விழுச்செல்லம் கல்வி' என்பதை உணர்வார்களா? - அபிநவ்