`27 அமாவாசைகள் முடிந்துவிட்டன, அடுத்த ஆறு அமாவாசைக்குள் தி.மு.க ஆட்சி முடிவுக்கு வரும்...' என சோலி உருட்டாமலேயே ஜோதிடம் பார்த்துக் கொண்டிருந்த எடப்பாடிக்கு `ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற லட்டு வசமாக சிக்கியிருப்பதாக சிலாகிக்கிறது, எம்.ஜி.ஆர் மாளிகை. நாடாளுமன்றத்தோடு சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரவாய்ப்புள்ளதாக வரும் தகவலையடுத்து, வேட்பாளர் தேர்வு, கூட்டணிக் கணக்குகள் என அ.தி.மு.க ஜரூர் காட்டத் தொடங்கியிருப்பதுதான், அரசியல் வட்டாரத்தின் அதிரிபுதிரி டாபிக்.`பா.ஜ.க ஆட்சியை வீழ்த்த வேண்டும்' என்ற ஒற்றை இலக்குடன் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகள் ஒன்றிணைந்து `இந்தியா' என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதனை விமர்சிக்கும் பா.ஜ.க, `ஊழல் கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்துள்ளன' என்கிறது. இதில், அரசியல்ரீதியான விமர்சன அம்புகள் ஒருபுறம் வீசப்பட்டாலும், மறுபுறம் `இந்தியா' கூட்டணியை வலுவிழக்க வைக்க அனைத்து ஆயுதங்களையும் கையில் எடுத்து கதகளி ஆடி வருகிறது, பா.ஜ.க..அதன் ஒரு முக்கிய நகர்வுதான், `ஒரே நாடு ஒரே தேர்தல்'. செப்டம்பர் 18ம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இதுதொடர்பான மசோதாவை தாக்கல் செய்யவும் மத்திய பா.ஜ.க. அரசு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் நாடு முழுவதும் ஒரேநேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்தப்படும்.அதனைக் கருத்தில்கொண்டு, `ஒரே நாடு ஒரே தேர்தல்' குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழு, `ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து மத்திய அரசுக்கு அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது.தொடக்கத்தில், `ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை எதிர்த்த அ.தி.மு.க, தற்போது டபுள் ஓ.கே. சொல்லிவிட்டு, இரண்டு தேர்தல்களையும் ஒருசேர சந்திக்கத் தயாராகி வருவதாக எம்.ஜி.ஆர். மாளிகை வட்டாரம் கதைக்கிறது.``எடப்பாடியின் திட்டம்தான் என்ன?" என அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். ``நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வருமென போகும் இடங்களில் எல்லாம் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். ஆகஸ்ட் 23-ம் தேதி சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும், `நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும்' என உறுதியாகப் பேசினார்.. டெல்லி சொன்ன சீக்ரெட் இவ்வளவு உறுதியாக எடப்பாடி பேசி வருவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. ஜூலை 18-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற என்.டி.ஏ. கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடிக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு முக்கிய தலைவர்கள் சிலருடன் மட்டும் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஆலோசனை நடத்தினர். அந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்றார். அப்போது, `ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பான ஆலோசனை நடந்தது. `2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றங்களுக்கான தேர்தலையும் நடத்த சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கிறது' என மோடியும் அமித் ஷாவும் பேசியது எடப்பாடிக்கு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. கூடவே, `இரண்டு தேர்தல்களுக்கும் சேர்ந்தே தயாராகுங்கள். தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை உள்பட தேர்தல் தொடர்பான பணிகளை டிசம்பர் மாதத்துக்குள் இறுதி செய்ய வேண்டும்' எனவும் கூட்டணிக்கட்சித் தலைவர்களுக்கு பா.ஜ.க தலைமை அறிவுறுத்தியுள்ளது. எடப்பாடி கொடுத்த உற்சாகம் இதே உற்சாகத்தோடு சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி ஆகியோருடன் ஆலோசனையை நடத்தினார். `தொகுதிவாரியாக பூத் கமிட்டி அமைக்கும் பணியை விரைந்து முடித்து, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும்' எனவும் உத்தரவிட்டார். .அதன்படி, செப்டம்பர் 10-ம் தேதி நடந்த அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பூத் கமிட்டி உறுப்பினர்களின் பட்டியலை நிர்வாகிகள் சமர்ப்பித்தனர். இந்தக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, `எம்.பி. தேர்தலோடு, எம்.எல்.ஏ. தேர்தலும் நடைபெறவுள்ளதால், தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும். `கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்படுமோ?' என்ற சந்தேகத்துடன் யாரும் இருக்கவேண்டாம். நம்பிக்கையுடன் வேலையை பாருங்கள். வெற்றி நமக்கே' என உற்சாகமூட்டினார்.தொகுதிக்கு 10 வேட்பாளர்கள்அதே கூட்டத்தில், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கான வேட்பாளர்களின் பெயரை மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரை செய்து அனுப்புமாறு மறைமுக உத்தரவும் பிறப்பித்துள்ளார். குறிப்பாக, `தமிழகம் மற்றும் புதுவை உள்பட மொத்தம் 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் யாரை வேட்பாளராக நிறுத்துவது?' என தொகுதிக்கு 5 பேர்வீதம் பரிந்துரை செய்து அனுப்புமாறு எடப்பாடி உத்தரவிட்டிருக்கிறார்.அதேபோல, தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தொகுதிக்கு 5 பேர்வீதம் வேட்பாளர்களை பரிந்துரை செய்து பட்டியலை அனுப்பி வைக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். ஆக, எம்.பி. தொகுதிக்கு 5 பேர், எம்.எல்.ஏ. தொகுதிக்கு 5 பேர் என மொத்தம் 10 பேர் அடங்கிய பட்டியலை வரும் நவம்பர் மாதத்துக்குள் அனுப்பிவைக்குமாறு தலைமை உத்தரவிட்டுள்ளது.எடப்பாடி டார்கெட் 180 : 202021 சட்டமன்றத் தேர்தலில் 179 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிட்டது. ஆனால், இந்தமுறை குறைந்தது 190 தொகுதிகளில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளது. மீதமுள்ள தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு பிரித்துக் கொடுக்கும் முடிவில் எடப்பாடி இருக்கிறார்.நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை கடந்தமுறை பா.ஜ.க.வுக்கு ஐந்து தொகுதிகளை அ.தி.மு.க ஒதுக்கியது. ஆனால், `வரும் நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்தபட்சம் இரண்டு இலக்கத்திலாவது போட்டியிட வேண்டும்' என பா.ஜ.க. நினைக்கிறது. இதனை மனதில்வைத்து, `பா.ம.க. போட்டியிட்ட தொகுதிகளில் இருந்து சில தொகுதிகளைப் பிரித்து பா.ஜ.க.வுக்கு தரலாமா?' எனவும் எடப்பாடி ஆலோசித்து வருகிறார்..தே.மு.தி.க உள்ளே... பா.ம.க. வெளியே!கடந்த சட்டமன்றத் தேர்தலில் 23 தொகுதிகள் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டன. `இந்தமுறை பா.ம.க.வை கூட்டணியில் சேர்க்கக்கூடாது' என எடப்பாடி முடிவு செய்துவிட்டார். அதற்குப் பதிலாக தே.மு.தி.க.வை சேர்த்துக் கொண்டு 15 தொகுதிகள்வரை ஒதுக்கவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.கூட்டணியில் பா.ம.க. இல்லாத குறையை சரிசெய்ய வடமாவட்டங்கள் மற்றும் அக்கட்சிக்கு செல்வாக்குள்ள தொகுதிகளில் வன்னிய வேட்பாளர்களை நிறுத்தவும் எடப்பாடி வியூகம் வகுத்துவருகிறார். `பா.ஜ.க.வுக்கு கடந்தமுறை 20 தொகுதிகளை ஒதுக்கிய நிலையில், இந்தமுறை 25 தொகுதிகளை ஒதுக்கலாம்' என எடப்பாடி முடிவெடுத்துள்ளார்" என்றார், விரிவாக.கூட்டணிக் கட்சிகளின் டென்ஷன்!இரண்டு தேர்தலுக்கும் எடப்பாடி பழனிசாமி தயாராகி வருவது, அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளின் பி.பி.யை ரொம்பவே எகிற வைத்திருக்கிறது. காரணம், 2021 சட்டமன்றத் தேர்தலில் ஜி.கே.வாசனின் த.மா.கா.வுக்கு ஆறு தொகுதிகளும் டாக்டர் சேதுராமன், ஜெகன்மூர்த்தி, ஜான்பாண்டியன், ஸ்ரீதர் வாண்டையார், ஜோதி ராமலிங்கம் (பசும்பொன் தேசிய கழகம்) ஆகியோருக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டன.தற்போது கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், பாரிவேந்தரின் ஐ.ஜே.கே. ஆகிய கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ளதால், கடந்தமுறை வாய்ப்புக் கிடைத்த சிறு கட்சிகளுக்கு பதிலாக புதிய கட்சிகளுக்கு வாய்ப்பு தரவும் அ.தி.மு.க தலைமை முடிவு செய்திருக்கிறது. இதனால் கூட்டணிக் கட்சிகளுக்குள் ஏகப்பட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது.பா.ஜ.க. போடும் புது வியூகம்!தமிழக பா.ஜ.க.வை பொறுத்தவரை, `நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்தபட்சம் 15 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டும்' என நினைக்கிறது. அதேபோல், `சட்டமன்றத் தேர்தலில் 50 தொகுதிகளுக்கும் குறையாமல் களமிறங்க வேண்டும்' எனவும் முடிவு செய்துள்ளது. ஆனால் எடப்பாடியோ, `கடந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் ஒதுக்கப்பட்ட தொகுதிகளுடன் ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளச் சேர்த்துக் கொடுத்தால் போதும்' என நினைக்கிறார்.தாங்கள் எதிர்பார்க்கும் தொகுதியை அ.தி.மு.க. தலைமை ஒதுக்காதபட்சத்தில், பா.ஜ.க. தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கும் முடிவிலும் அக்கட்சி இருக்கிறது. அந்தக் கூட்டணியில், பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., அ.ம.மு.க., ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரையும் சேர்த்து எடப்பாடிக்கு செக் வைக்கவும் வியூகம் வகுத்துவருவதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..தயார் நிலையில் தமிழக பா.ஜ.க!அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் சிவசங்கரியிடம் இதுகுறித்துக் கேட்டபோது, ``நாடாளுமன்றம், சட்டமன்றம் என இரு தேர்தல்களும் சேர்ந்து நடக்கவே வாய்ப்பு அதிகம். அப்படி தேர்தல் வந்தால், யாருக்கு எத்தனை தொகுதிளைத் தருவது.. யாரை கூட்டணியில் சேர்த்துக் கொள்வது என்பன உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுப்பார். எப்போது தேர்தல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள அ.தி.மு.க. தயாராக உள்ளது" என்கிறார்.பா.ஜ.க.வின் வியூகம் குறித்து அக்கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் கேட்டபோது, ``தேர்தல் தொடர்பான திட்டங்களை அ.தி.மு.க வகுத்து வருகிறது. அவர்களைப்போல நாங்களும் தேர்தலுக்கான பணிகளை பாதியளவு முடித்துவிட்டோம். எங்கள் கட்சி பலமாக உள்ள தொகுதிகள், கூட்டணிக் கட்சி வலுவாக உள்ள தொகுதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்து வைத்துள்ளோம். தொகுதிப் பங்கீடு தொடர்பாக தேர்தல் நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்போம்" என்றார்.கூட்டணிக்குள் கூட்டல் கழித்தல் கணக்குகள் வேகமெடுத்தாலும், `ஒரே நாடு ஒரே தேர்தல் வருமா.. அப்படி வந்தால் மாநிலங்களில் ஏற்படப் போகும் மாற்றங்கள் என்ன.. பா.ஜ.க.வுக்கு என்ன லாபம்?' என ஏகப்பட்ட கணக்குகளை அரசியல் விமர்சகர்கள் போட்டு வருகின்றனர். தேர்தல் தேதி நெருங்க நெருங்க... `எடப்பாடியின் மனக் கணக்குகள் என்னவாகும்?' என்பதற்கான விடையும் தெரியத்தானே போகிறது. - பாபுபடங்கள்:ம.செந்தில்நாதன்