`ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் என்னாகும்?' என பல மாநிலக் கட்சிகள் பீதி கலந்த அச்சத்தில் சிக்கித் தவிக்க, `ஒரே மாநிலம், ஒரே பாடத்திட்டம்' என்ற தமிழக அரசின் முடிவும் ஏக குழப்பங்களுக்கு வித்திட்டுள்ளது. அதிலும், இரண்டு மாதங்களில் ஏழுமுறை பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டதுதான் ஆச்சர்யம்.``என்ன பிரச்னை?" என பல்கலைக்கழகங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் ஒருங்கிணப்பாளர் நாகராஜனிடம் கேட்டோம். “தமிழ்நாட்டில் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் உறுப்புக் கல்லூரிகளுக்கான பாடத்திட்டத்தை, தாங்களே தீர்மானித்துக் கொள்வது வழக்கம். தன்னாட்சிக் கல்லூரிகள் சுயமாகப் பாடத்திட்டத்தை வகுத்துக் கொள்ள யு.ஜி.சி அதிகாரம் வழங்கியுள்ளது..மட்டும் பொதுவாக அமைய வேண்டும் என வலியுறுத்தப்படும். ஆனால், முதன்முறையாக, `பாடத்திட்டத்தில் உள்ளே இருக்கும் பொருளடக்கத்திலும் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மாமன்றம் முடிவு செய்துள்ளதையே 75 சதவிகிதம் பின்பற்ற வேண்டும்' என சுற்றறிக்கை வந்துள்ளது.இப்படியொரு தீர்மானத்தை எடுப்பதற்கு முன் உயர்கல்வி சார்ந்த அறிஞர்களிடம் கலந்துரையாடி, அவர்களின் கருத்துகளைக் கேட்டிருக்க வேண்டும். ஆனால், உயர்கல்வி மாமன்றம் தன்னிச்சையாக முடிவெடுத்துத் திணிக்கிறது.இதைப் பற்றி உயர்கல்வித்துறையில் கேட்டால், ‘இருவேறு பட்டப் படிப்புகள் சமமானவை என்று சான்றிதழ் வழங்குவதிலேயே நிறைய பிரச்னைகள், அதுதொடர்பான வழக்குகள் வருவதால் ஒரே பாடத்திட்டமே தீர்வாக அமையும்’ என முடிவெடுத்ததாகக் கூறுகின்றனர்.ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பட்டப்படிப்புகள் புதுப்புது பெயர்களில் அறிமுகப்படுத்தப்பட்டன. உதாரணமாக, முதுகலை வேதியியல் என்ற பட்டப்படிப்பு இருக்கிறது. தற்போது, முதுகலை பசுமை வேதியியல் என்ற படிப்பு நடத்தப்படுகிறது. அதேபோல், இயற்பியல் மற்றும் வேதியியல் துறைகளில் நானோ தொழில்நுட்பம் என்ற புதிய படிப்பு நடத்தப்படுகிறது. தாவரவியல், தாவர உயிரியல் ஆக மாறிவிட்டது..இதுபோன்ற புதிய பட்டப் படிப்புகள், பெயரிடல்கள் எந்தப் பட்டப்படிப்புக்கு நிகரானவை என்ற கேள்வி, பணியில் சேரும்போது கேட்கப்படுவது உண்மைதான். இந்த சிக்கலைத் தவிர்ப்பதற்கு ஒரே பாடத்திட்டம் என்பது ஒருபோதும் தீர்வாகாது.தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக் கழங்களுக்கும் தனித்தனி சட்டம் உள்ளது. அதன்படி பாடத்திட்டங்களை வகுப்பதற்குப் பாடத்திட்டக் குழுவுக்கே அதிகாரம் உண்டு. தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் அவசர அவசரமாக அறிமுகப்படுத்தியுள்ள ஒரே பாடத்திட்டம் , பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிக்கிறது. அந்த பாடங்களில் பல தரமற்றதாக அமைந்துள்ளதையும் காண முடிகிறது.மேலும் தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிப்பாடங்களில் 100 சதவிகிதம் ஒரே பாடத்திட்டம் என்பதை ஏற்க முடியாது. தமிழ் மொழிப் பாடங்களில் அந்தந்தப் பகுதி சார்ந்த கதைகள், வட்டார நாவல்கள், தத்துவங்கள் பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும். அந்த வழியை உயர்கல்வி மன்றம் அடைத்துவிட்டது.மேலும் தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிப்பாடங்களில் 100 சதவிகிதம் ஒரே பாடத்திட்டம் என்பதை ஏற்க முடியாது. தமிழ் மொழிப் பாடங்களில் அந்தந்தப் பகுதி சார்ந்த கதைகள், வட்டார நாவல்கள், தத்துவங்கள் பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும். அந்த வழியை உயர்கல்வி மன்றம் அடைத்துவிட்டது.இலக்கியம் என்பது சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. அதை ஒரே நூலில் ஒற்றைத் தன்மையில் கோக்க முயல்வது பிற்போக்குத்தனமானது. தமிழ், ஆங்கிலத்தில் ஆளும்கட்சியின் தத்துவம் சார்ந்த நூல்கள் திணிப்பதற்கு இது வழிவகை செய்யும். பொதுப்பாடத் திட்டம் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டால் ஏற்றுக் கொள்வோமா?ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் தனித்தனியாக சிறப்புப் பாடத்தில் முதுகலை, ஆராய்ச்சிப் படிப்புகள் நடக்கும். உதாரணமாக ஒரு சில பல்கலைக்கழகங்கள் ஒப்பாய்வில் கவனம் செலுத்துகின்றன. சில பல்கலைக் கழகங்கள் மொழிபெயர்ப்பில் சிறப்பாய்வு செய்வார்கள்.இதுபோன்று, மாணவர்கள் பெறக்கூடிய சிறப்பு வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும். இனிவரும் காலங்களில் மூன்று வருடத்துக்கு ஒருமுறை உயர்கல்வி மாமன்றமே பாடத்திட்டத்தை வகுக்கும் எனில், 13 பல்கலைக்கழகங்களில் உள்ள 500க்கும் மேற்பட்ட பாடத்திட்டக் குழு எதற்கு?பல்கலைக்கழக சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டுவிட்டதா? தன்னாட்சிக் கல்லூரிகளின் நிலை என்ன என்பன போன்ற கேள்விகளுக்கும் பதிலே இல்லை. ஒரே பாடத் திட்டம் என்ற பெயரில் கட்சி சார்ந்த கருத்தியலைப் புகுத்தி, மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கவும் வாய்ப்பு உண்டு” என்றார், ஆவேசமாக..அடுத்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், "காலத்துக்கேற்ப மாற்றம் தேவைதான். ஆனால், நடைமுறைப்படுத்துவதில் குழப்பம் இருக்கக்கூடாது. அந்தந்தப் பகுதியின் வரலாறு, பூகோளம், சிறப்புகளுக்கேற்ப பாடத்திட்டங்களை அமைப்பதற்காக பல்கலைக் கழகங்களை உருவாக்கி அதிகாரம் கொடுத்தனர்.ஒரே மாநிலம் ஒரே பாடத்திட்டம் தொடர்பாக பலமுறை மனு கொடுத்திருக்கிறோம். ஆனால் மாற்றம் எதுவும் இல்லை. ஐந்து நாளைக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி, ' இதன்படி பாடம் நடத்து' என மாற்றிக்கொண்டே இருந்தால், எப்படி நடத்த முடியும்? பேராசிரியர்களே குழப்பத்தில் இருந்தால் மாணவர்கள் எப்படி தெளிவு பெறுவார்கள்?" என்றார், ஆதங்கத்துடன்.தமிழ்நாடு உயர்கல்வித்துறை செயலர் கார்த்திக் ஐ.ஏ.எஸ்ஸிடம் இதுகுறித்துக் கேட்டபோது, "இது பொதுப்பாடத் திட்டம் அல்ல, முன் மாதிரி பாடத்திட்டம். தன்னாட்சிக் கல்லூரிகள் இதனைப் பின்பற்ற தேவையில்லை என்று அரசே அறிவித்துவிட்டது. கூட்டு நடவடிக்கை குழு உள்ளிட்டோர் அறிவித்திருந்த போராட்டங்களையும் நிறுத்திவிட்டார்கள்" என்றார்.பேராசிரியர்களே குழம்பித் தவித்தால் மாணவர்களின் நிலை! - ஷானு