`ஒரே நேரத்தில் இவ்வளவு குருவிகளா?' என சுங்கத்துறை அதிகாரிகளே ஒரு நிமிடம் தலைசுற்றி நின்ற சம்பவம், சென்னை விமானநிலையத்தில் அரங்கேறியது. இது பறக்கும் குருவி அல்ல, விமானத்தில் கடத்தல் ஐட்டங்களோடு பறந்துவந்த மனித குருவிகள். இவர்களிடம் 14 கோடி மதிப்பிலான பொருள்கள் சிக்கியதுதான் டெரர் ட்விஸ்ட்.சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தங்கம், போதைப் பொருள்கள், கடல்வாழ் உயிரினங்கள் உள்ளிட்டவை சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. `விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிலோ கணக்கில் கிடந்த தங்கம்', `ஆடையில் மறைத்துக் கொண்டு வரப்பட்ட தங்கம்' என சாமானிய மக்களை வெறுப்பேற்றும் சம்பவங்கள் தினசரி நடக்கின்றன. அதிலும், கடந்தவாரம் ஒரே விமானத்தில் 113 கடத்தல் குருவிகள் சிக்கியது அதிகாரிகளே நினைத்துப் பார்க்காத ஒன்று.``குருவிகளை வளைத்தது எப்படி?" என சுங்கத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். “தங்கத்தைக் கட்டியாகவும் பவுடர், பசை போன்ற வடிவங்களில் கடத்திவருவது தொடர்கதையாக நடந்து வருகிறது. கடத்தல் தொழிலில் ஈடுபடுகிறவர்கள், நேரடியாக களமிறங்காமல் சாதாரணப் பயணிகளைப்போல சிலரை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு கடத்தலுக்குக் கருவியாக பயன்படுகிறவர்களை குருவிகள் என்போம்..தங்கம், சிகரெட், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பொருள்களை பலவழிகளில் இவர்கள் கடத்திவருவார்கள். இவர்களில் பலர், விமான நிலைய சோதனைகளில் சிக்கிவிடுவார்கள். அதேசமயம், கடத்தல் தொடர்பாக சில ரகசிய தகவல்களும் எங்களுக்கு வரும். அந்தவகையில் செப்டம்பர் 13ம் தேதி ஒரு முக்கிய தகவல் கிடைத்தது. அந்தத் தகவலே எங்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.உடனே, பயணிகள் பட்டியலை சோதித்துப் பார்த்தபோது ஒரே ஏஜென்ட் ஒட்டுமொத்தமாக டிக்கெட்டுகளை புக் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கடத்தல்காரர்களை எப்படி வளைப்பது எனப் பலகட்ட ஆலோசனைகளை நடத்தினோம். இதனால் இதர பயணிகளுக்கு பதற்றம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் தீவிர ஆலோசனை நடத்தினோம்.மறுநாள், அதிகாலை வரும் முதல் விமானத்தில் இருந்தே சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபடத் தொடங்கினர். எங்களுடன் மத்திய வருவாய் புலானய்வுப் பிரிவு அதிகாரிகளும் இணைந்துகொண்டனர். செப்டம்பர் 14 காலை 8 மணியளவில் மஸ்கட்டில் இருந்து ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அதில்தான் குருவிகள் வருவதாக தகவல் கிடைத்திருந்தது. அந்த விமானத்தில் வந்த 186 பயணிகளையும் விமான ஓடுதளத்தில் இருந்து பேருந்துகளில் அழைத்துச் சென்றோம்.ஒவ்வொருவரிடமும் விசாரணை நடத்தி, பலகட்ட பரிசோதனைக்குப்பின், கடத்தலில் தொடர்பே இல்லாத 46 பேரை வெளியே செல்ல அனுமதித்தோம். மீதமுள்ளவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில், 113 பேர் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட குருவிகள் என்பது தெரியவந்தது. இவர்கள், முதலில் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ‘எங்களுக்குப் பசிக்கிறது. வெளியே சென்று சாப்பிட்டுவிட்டு மீண்டும் விசாரணைக்கு வருகிறோம்’ என்று போராட்டம் நடத்தினர்.அவர்கள் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்தோம். எங்களின் திட்டப்படி, அவர்களை வரிசையாக தரையில் அமரச் சொல்லி தலைவாழை இலையில் விருந்துபோல் பரிமாறினோம். அவர்கள் சாப்பிடும்போதே அதிகாரிகளின் கண்கள் அவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்தன. சாப்பிட்டு முடித்தவர்களை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு இரண்டு மணி நேரத்துக்குப்பின் விசாரணையைத் தொடங்கினோம்..அப்போது, பெண் பயணிகளில் பலர் தங்களின் உள்ளாடைகளில் தங்கக் கட்டிகள், தங்க பேஸ்ட், தங்க ஸ்ப்ரிங் கம்பி என மொத்தம் 13 கிலோ தங்கத்தை மறைத்து வைத்துக் கடத்தி வந்ததை கண்டுபிடித்தோம். பலரின் சூட்கேஸ்கள், ஹேண்ட் பேக் போன்றவற்றில் இருந்த ரகசிய அறைகளில் 120 ஆப்பிள் போன்கள், 84 ஆண்ட்ராய்டு போன்கள், ஆயிரக்கணக்கான பட்டன் செல்போன்கள் உட்பட 2,500 போன்கள் கைப்பற்றப்பட்டன.இவைமட்டுமன்றி, பண்டல் பண்டலாக வெளிநாட்டு சிகரெட்கள், 175 கிலோ பதப்படுத்தப்பட்ட குங்குமப்பூ, லேப்டாப்கள் என 14 கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் பொருட்களை அவர்கள் கடத்தி வந்ததை தெரியவந்தது. இந்த 113 பேரும் குருவிகளே. இவர்களை இயக்கியவர்கள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார். ``சிக்கிய குருவிகளுக்கும் என்ன தண்டனை?" என சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரி கார்த்திகேய பாண்டியனிடம் கேட்டோம். “சுங்க சட்டத்தின்கீழ் வழக்குகளைப் பதிவு செய்துள்ளோம். ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கடத்தல் பொருள்களைக் கொண்டு வருபவர்களை மட்டுமே, சுங்கச் சட்டப்படி கைது செய்ய முடியும். அதற்கும் குறைவாக இருந்தால், வழக்குப்பதிவு செய்து பிணையில் விடுவதுதான் நடைமுறை. அந்தவகையில் 140 பேரும் ஜாமீனில் சென்றுவிட்டனர். ஆனாலும், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்று தெரிவித்தார்.தண்டனை கடுமையானால் தவறுகள் குறையும்! - ரய்யான் பாபு