`நீங்க மாநாடு நடத்துங்க… நடத்தாம போங்க... அதுக்காக மீனவர்களே இல்லாமல் ஒரு மாநாடா?' என ரவுண்டு கட்டி குற்றச்சாட்டுகளை வீசுகின்றனர், ராமநாதபுரம் மீனவர்கள். அதிலும், “முதல்வரையே ஏமாற்றிவிட்டனர்” என்ற புகார், தி.மு.க.வினரே எதிர்பாராத டரியல் ட்விஸ்ட்!திருச்சியில் சில வாரங்களுக்கு முன்பு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல்கட்டப் பணியைத் தொடங்கிவைத்தார், முதல்வர் ஸ்டாலின். அதிலேயே சுவரேறி குதித்து கூட்டத்திலிருந்து வெளியேறியது உட்பட ஏகப்பட்ட சொதப்பல்களை அரங்கேற்றி கட்சித் தலைவர் ஸ்டாலினை டென்ஷனாக்கினார்கள் உடன்பிறப்புகள். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 17ம் தேதி நடந்தது தென்மண்டல பூத் கமிட்டி கூட்டம்.‘ஆடு மேய்ச்ச மாதிரியும் ஆச்சு… அண்ணனுக்கு பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சு’ என்று கணக்கு போட்டு அதே கூட்டத்தில் மீனவர் நல மாநாட்டுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. பூத் கமிட்டி கூட்டத்துக்காக பேராவூர் அருகே பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு 10 நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 17 ஆயிரம் பேர் வந்திருந்தனர்.பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம், மீனவர் நல மாநாடு என நிகழ்ச்சி நடைபெறும் இடங்களை சமன் செய்வதற்காக கரம்பை மண் அள்ளுவதற்குத் தற்காலிக அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதனைப் பயன்படுத்தி பேராவூர், நொச்சியூரணி பகுதிகளில் இருந்து மணல் அள்ளி ஜோராக காரியம் சாதித்தார்கள் முக்கிய நிர்வாகிகள்.இது ஒருபுறம் இருந்தாலும், மீனவர் நல மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், மீனவர் நலம் சார்ந்த 10 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு 13 ஆயிரம் பயனாளிகளுக்கு 88 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்தநிலையில்தான், “இந்த மாநாட்டில் உண்மையான மீனவர்கள் கலந்து கொள்ளவில்லை” என்ற புகார் கிளம்பியுள்ளது.``மீனவர்களுக்காக 10 அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டிருக்கிறார். அதில் எங்களுக்கு மகிழ்ச்சி. ஆனால், நீண்டநாள் கோரிக்கையான கடல் அட்டைக்கான தடையை நீக்கவும், பழங்குடியினர் பட்டியலில் மீனவர்களை சேர்க்கவும், மீன் பிடிக்கும்போது இறந்தால் அதை விபத்தாக கருதி நிவாரணம் வழங்க வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் முதல்வர் பேசவில்லை.கடலில் தவறிவிழும் மீனவர்களை கண்டுபிடிக்க 14 கடலோர மாவட்டங்களில் ரோந்துப் படகுகள் இல்லை. அதை வாங்குவதற்கு அதிகாரிகள் முயற்சி எடுப்பதும் இல்லை. கடலில் யாராவது தவறிப்போய்விட்டால் நிவாரணம் கிடைக்க குறைந்தது ஏழு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலத்தை குறைக்கும்படி கூறி வருகிறோம். நலவாரியத்தில் மாதம் இருபது ரூபாய் பிடித்தம் என்பதை ஐம்பது ரூபாயாக மாற்றி நிவாரணத்தை அதிகப்படுத்துமாறு போராடி வருகிறோம்.மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணனை ஏதாவது ஒரு கோயிலுக்கு அறங்காவலராக நியமனம் செய்யுங்கள். மீன் சாப்பிடுவதை தவிர அவருக்கு மீனவர்களைப் பற்றியோ, கடலைப் பற்றியோ ஒன்றும் தெரியவில்லை. `துறையில் நடக்கும் கொள்ளைகள் வெளியில் தெரிந்துவிடும்' என்பதற்காக ஆலோசனை கமிட்டி போடவிடாமல் தடுத்து வருகின்றனர்..சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்தினால் ஆழ்கடலில் மீன் பிடிக்க வசதியாக இருக்கும். வடகடல் பகுதி ஆழம் குறைவாக இருக்கும். அங்கிருக்கும் இரண்டாவது திட்டை இருபது அடிக்கு ஆழப்படுத்தினால் தெற்கே போய் மீன்பிடிக்க வசதியாக இருக்கும். மீன்பிடி தொழிலுக்கான திட்டங்களை அறிவிக்காமல் நாடாளுமன்றத் தேர்தலுக்காக மீனவர் நல மாநாடு நடத்தி மீனவர்களின் வாக்குகளை பெற்றுவிடலாம் என்று முதல்வர் நினைக்கிறார். கச்சத்தீவு பிரச்னை இன்னும் அப்படியே இருக்கிறது. அது முடிந்துவிட்டால் எங்களை வைத்து அரசியல் செய்ய முடியாது என்பதற்காக முடிவே கிடைக்காத விஷயங்களைப் பேசி வருகிறார்கள்'' என்றார்.அடுத்து, நம்மிடம் பேசிய தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி, ``மீனவர் நல மாநாடு என்ற பெயரில் முதல்வரை ஏமாற்றும் மாநாட்டை தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களும் அரங்கேற்றியுள்ளனர். மீனவ சமூகப் பெண்களை, `உங்களுக்கு சலுகைகள் வராது, ரத்து செய்துவிடுவோம்' என்று சொல்லியே மாநாட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். ஏற்கெனவே தாமரை மாநாட்டை பா.ஜ.க நடத்தியது. அப்போது அவர்கள் சொன்ன எதையும் செய்யவில்லை.தற்போது மீனவர்கள் அல்லாத 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள், மக்கள் நலப்பணியாளர்கள், மகளிர் குழுக்களை கொண்டு கூட்டத்தைக் காட்டி மாநாட்டை ஒரு சடங்காக நடத்தி முடித்துள்ளனர். கடலில் காற்றாலை போடும் திட்டத்தைத் தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை வைத்தோம். அதைப் பற்றி ஒருவார்த்தைகூட பேசாமல் முதல்வர் சென்றதில் வருத்தம்தான்'' என்கிறார்.மீனவர் மாநாடு எழுப்பும் சர்ச்சைகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான காதர்பாட்சா முத்துராமலிங்கத்திடம் விளக்கம் கேட்க தொடர்பு கொண்டோம். அவர் நம்முடைய அழைப்பை ஏற்காததால் வாட்ஸ்ஆப்பில் தகவல் அனுப்பினோம். அதற்கும் பதில் வரவில்லை. தொடர்ந்து, அவரின் அலுவலக இமெயில் முகவரிக்கும் விளக்கம் கேட்டு மெயில் அனுப்பினோம். அதற்கும் பதில் வரவில்லை.தேர்தல் வரும்போது பதில் சொல்லித்தானே ஆக வேண்டும் எம்.எல்.ஏ அவர்களே? - பாலாபடங்கள்: எம்.இராமசாமி