-ஷானுஅடுத்தடுத்த பாலியல் புகார்களால் தலைகுனிந்து நிற்கிறது, திருச்சியின் 177 ஆண்டுகால பாரம்பரியம்மிக்க செயின்ட் ஜோசப் கல்லூரி. அதிலும், கல்லூரி ஆசிரியர் ஒருவர் மாணவியை அச்சுறுத்தியதோடு, அவரின் தாய்க்கும் பாலியல் தூண்டில் வீசிய சம்பவம், கல்லூரியின் மானத்தைக் கப்பலேற்றியிருப்பதுதான் கொடுமை.திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் வேதியியல் துறை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார், லியோ ஸ்டான்லி. டிப்டாப் உடையில் கருப்பு ரேபான் கண்ணாடியுடன் கல்லூரியின் என்ட்ரி ஆகும் இவர் மீதுதான், பாலியல் புகார்களை அள்ளி வீசுகின்றனர் கல்லூரி ஊழியர்கள் சிலர்..``என்ன நடந்தது?'' கல்லூரி பணியாளர் ஒருவரிடம் கேட்டோம். ``சில வருடங்களுக்கு முன் பாதிரியார் ஒருவருக்கும் கன்னியாஸ்திரி ஒருவருக்கும் இடையிலான பாலியல் விவகாரம், கல்லூரிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது. இப்போது லியோ ஸ்டான்லி விவகாரம். தனது வகுப்பில் இருக்கும் மாணவிகளில் அழகாகவும் வசதி குறைவாகவும் இருப்பவர்களை விசாரித்து தெரிந்துகொண்டு, அவர்களுக்கு சிறு உதவிகளைச் செய்து, குடும்பத்துக்குள் ஒருவராக மாறிவிடுவார். பின்னர் அவர்களை பாலியல்ரீதியாக பயன்படுத்திக்கொள்வதுதான் இவரது வேலை. ஏற்கெனவே ஒருமுறை மாணவி தொடர்பான பாலியல் விவகாரத்தில் மெமோ வாங்கினார். ஆனாலும், 'நான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பிரமுகர்களுக்கு நெருக்கமானவன்' என்று சொல்லியே கல்லூரியில் நிலவும் சாதி பிரச்னைகளை சாதகமாக பயன்படுத்தி தப்பித்து வந்திருக்கிறார்.இந்தமுறை அவர் கை நீட்டிய மாணவி, தன் அம்மா, அப்பா, பாட்டியுடன் ஆகஸ்ட் 28ம் தேதி கல்லூரியின் செயலர் ஃபாதர் அமலிடம் புகார் கொடுத்திருக்கிறார். அப்போது, முதல்வர் ஆரோக்கியசாமி சேவியர் அமெரிக்காவுக்கு போயிருந்தார். அதற்குள் பேராசிரியர் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தத்தால், மாணவி விஷம் குடித்துவிட்டார். அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்றிவிட்டனர்.அடுத்தநாள் கல்லூரிக்கு வந்த மாணவியின் பாட்டி, மருத்துவக் குறிப்புகளை முதல்வரின் மேஜையில் விட்டெறிந்தார். `அவன் என் கையில கிடைச்சா செருப்பாலேயே அடிப்பேன்' என சாமியாடிவிட்டு போய்விட்டார். இதற்கிடையே, கள்ளக்குறிச்சியில் இருந்த தன் மனைவியை வரச்சொல்லி தன்னை சாதிரீதியாக துன்புறுத்துவதாகக் கூறி மாணவி தரப்பு மீது பி.சி.ஆர் பிரிவில் புகார் கொடுக்கவும் தயாராகி வருகிறார், ஸ்டான்லி. இதைக் கேள்விப்பட்ட மாணவர்கள், கல்லூரி முதல்வர் அறையின் வாசலில்கூடி கோஷம் போட்டிருக்கிறார்கள். இதையடுத்து, தாவரவியல் துறையின் தலைவர் செந்தில்குமாரை அனுப்பி சமாதானம் செய்துள்ளனர்" என்றார் விரிவாக..நாம் புகார் கொடுத்த மாணவியை சந்தித்துப் பேசினோம். "பெண்கள் என் கண்கள். என் தாய், என் சகோதரி என்றெல்லாம் ரொம்ப நல்லவர்போல் பேசினார். மணிப்பூர் பிரச்சனைக்கு கல்லூரியில் எங்களை எல்லாம் சேர்த்து நிற்கவைத்துப் போராடி நல்லவர்போல் காட்டிக்கொண்டார். `என் அம்மாவுக்கு வேலை வாங்கித் தருகிறேன்' என்றார். 'நாளைக்கு எனக்கு பர்த் டே. சாக்லேட் கொடு' என்று கேட்டார். அதில், வேறு அர்த்தம் இருப்பது எனக்குத் தெரியவில்லை.ஒருநாள் என்னிடம், 'உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். லவ் யூ டி செல்லம். பாட்டி வீட்டில் இல்லாதபோது கூப்பிடு' என்றார். நான் அவரின் பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்கவே, `ரொம்ப கொழுப்பெடுத்து திரியிற. உன் பேப்பர் என்கிட்ட தானே இருக்குது. உன் கொழுப்பை எப்படி அடக்கணும்னு எனக்கு தெரியும்' என்றார். இன்னும் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு சேட்டைகள் அதிகமாகவே, வீட்டில் சொல்லி கல்லூரியில் புகார் கொடுத்தேன்" என்றார்.அடுத்து நம்மிடம் பேசிய அவரின் தாய், ``ஒருநாள் மகளை கூட்டிட்டு வர காலேஜுக்கு போனேன். 'உங்களுக்கு வேலைக்கு சொல்லி இருக்கேன். வேலை கிடைச்சிடும். கையைக் குடுங்க' என்று கைகுலுக்க வந்தார். நான் கைகூப்பி வணக்கம் சொன்னேன். 'என்ன இப்படி இருக்கீங்க, கையைக் குடுங்க' என்று சொல்லி நிர்பந்தப்படுத்தி என் கையைப் பிடித்தவர், உள்ளங்கையை சுரண்டிக்கொண்டு ஐந்து நிமிடம் கையை விடவே இல்லை..நானும் கணவரும் பிரிந்திருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொண்டுதான் இப்படிச் செய்கிறார் என்பதைப் புரிந்துகொண்டேன். 'நான் வீட்டுக்கு வரேன். பணம் வேணும்னா தரேன். எத்தனை லட்சம் வேணும் கேளுங்க. என் வைஃப் இங்க இல்ல. நான் மட்டும் தனியாத்தான் இருக்கேன். புரியுதுங்களா?' என்று திரும்பத் திரும்ப கேட்டார். குடும்ப கஷ்டத்தை நினைத்து பல்லைக் கடித்துக் கொண்டு அங்கிருந்து வந்து விட்டேன்" என்றார் கண்ணீருடன்.``இதெல்லாம் உண்மையா?" என லியோ ஸ்டான்லியிடம் கேட்டபோது, "நான் எந்தத் தவறும் செய்யவில்லை. தகப்பன் நிலையிலிருந்து செய்தது தவறாகப் போய்விட்டது. நான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. அந்தப் பெண்ணின் வாழ்க்கை முக்கியம். அதனால் இந்தச் செய்தியை நீங்கள் போட வேண்டாம்" என்றார்..கல்லூரி முதல்வர் பாதிரியார் ஆரோக்கியசாமி சேவியரிடம் கேட்டபோது. "நீங்கள் சொன்னது மாதிரி புகார் வந்திருப்பது உண்மைதான். என் கவனத்துக்கு வந்ததும் உடனடியாக விசாகா கமிட்டி அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறேன். விசாரணை முடிவில், தவறு நடந்திருப்பது உறுதியானால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்" என்றார் அவர்.புனித வளனார் என்கிற பெயரில் இருக்கும் புனிதத்தையே கெடுத்துவிட்டாரகள்!