`செல்போன் மிஸ் ஆயிடுச்சா.. டோன்ட்ரி வொர்ரி' என அலட்சியமாக வலம் வருகிறவரா நீங்கள்.. அப்படியானால் இந்தக் கட்டுரை உங்களுக்குத்தான். உங்கள் செல்போன் கேலரியில் சேமித்து வைத்திருக்கும் படங்களும் டேட்டாக்களும் மானத்தை வாங்கும் தோட்டாக்களாக மாறி பேங்க் பேலன்ஸை பதம் பார்க்கும் கதை தெரியுமா? ஆம்.. வடசென்னை முதல் வளைகுடா நாடுகள் வரையில் பணம் பறிக்கும் கும்பல்கள் பரவிக் கிடக்கின்றன..சென்னை, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர், தனது செல்போன் களவு போனதை அறிந்து பதறினார். ஓரிரு நாட்களில் அந்த செல்போன் மீண்டும் கிடைத்த சந்தோஷத்தில் இருந்தார். ஆனால், அவரது சந்தோஷம் ஒருநாள்கூட நிலைக்கவில்லை. தனது செல்போன் வாட்ஸ்அப்பில் வந்த வீடியோ, புகைப்படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். தற்கொலை வரை சென்ற அந்தப் பெண்ணை அவரது குடும்பத்தினர் கஷ்டப்பட்டு காப்பாற்றிவிட்டனர். `அப்படி என்ன நடந்தது?' எனக் கேட்டோம். அந்தப் பெண்ணின் சார்பில் பேசிய அவரது உறவினர் ஒருவர், ``சகுந்தலாவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 28 வயது. அவருக்கு 4 வயதில் ஓர் ஆண் குழந்தையும் உள்ளது. தண்டையார்பேட்டை ராஜா கடை அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். தினமும் வீட்டில் இருந்து அரசுப் பேருந்தில்தான் ஆபீஸுக்கு செல்வார். கடந்த ஏப்ரல் 20-ம் தேதி வழக்கம்போல் ஆபீஸுக்கு பஸ்ஸில் சென்றுள்ளார். ஆபீஸ் சென்றதும், பேக்கில் இருந்த செல்போன் மிஸ்ஸானது தெரிந்து அதிர்ச்சியடைந்தார். உடன் பணிபுரிகிறவர்களின் செல்போனில் இருந்து தனது எண்ணுக்கு பலமுறை தொடர்புகொண்டும், நீண்ட நேரத்துக்குப் பிறகு யாரோ ஒரு நபர் பதில் அளித்துள்ளார். பஸ்ஸில் கிடைத்ததாக தெரிவித்து, அன்று மாலையே சகுந்தலாவிடம் செல்போனை ஒப்படைத்தார். மறுநாள் 21-ம் தேதி இரவு சகுந்தலாவின் போட்டோ, வீடியோக்களை ஆபாசமாக மார்ஃபிங் செய்து அவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு சில எண்களில் இருந்து வந்துகொண்டிருந்தது..அடுத்த சில நிமிடம் கழித்து சம்பந்தப்பட்ட எண்ணிலிருந்து ஓர் அழைப்பு. `மேடம், வீடியோவையும் படத்தையும் பாத்தீங்களா? பதறாம கேளுங்க... இதை அப்படியே கமுக்கமாக விடணும்னா, ஒரு லட்ச ரூபாய் வேணும். நான் சொல்ற பேங்க் அக்கவுண்ட்டுக்கு உடனே டெபாசிட் பண்ணுங்க... இல்லாட்டி, உங்க உறவுக்காரங்க, ஃப்ரெண்ட்ஸுங்களுக்கு இதை அனுப்பிடுவோம்' என மிரட்டியிருக்கிறது அந்தக் குரல். இதனால் மனஉளைச்சல் அடைந்த சகுந்தலா, தற்கொலை முயற்சியில் இறங்கினார். அவரைக் காப்பாற்றி தண்டையார்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தோம். அவர்களும் 3 மாதங்களாக மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். மொபைல் போனை திருடி பிளாக்மெயில் செய்யும் கும்பலுக்கு காவல்துறை விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்'' என்றார். இதேபோன்ற ஒரு சங்கடம் அரசியல் கட்சிப் பிரமுகர் ஒருவருக்கும் நடந்துள்ளது. அதுகுறித்து நம்மிடம் பேசிய அந்தப் பிரமுகரின் நண்பர், ``கடந்த ஜூன் 20-ம் தேதி குடும்பத்துடன் அந்த வி.ஐ.பி. துபாய் சென்றார். ஜூன் 28-ம் தேதி கால்டாக்ஸியில் மனைவி, தாயுடன் ஷாப்பிங் சென்றுள்ளார். அப்போது அவரது செல்போன் தொலைந்து போயுள்ளது. தனது மனைவி எண்ணில் இருந்து அவரது மொபைல் எண்ணுக்கு பலமுறை தொடர்பு கொண்டும் அழைப்பு ஏற்கப்படவில்லை. பல மணிநேரமாக முயற்சித்த பிறகு அழைப்பை அட்டெண்ட் செய்த நபர், டாக்ஸில் கிடந்ததாகக் கூறியுள்ளார். பிறகு, `நீங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கே வந்து மொபைலை தருகிறேன்' என்றவர், மறுநாள்நேரில் வந்து மொபைல் போனை கொடுத்திருக்கிறார். ஆனால், 30-ம் தேதி இரவிலிருந்து அரசியல் பிரமுகரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு பல எண்களில் இருந்து தனது படங்கள் ஆபாசமாக மார்ஃபிங் செய்யப்பட்டு வீடியோ மற்றும் போட்டோக்களாக வந்துள்ளன.. குறிப்பாக, அந்த வீடியோ, படங்கள் எல்லாம் அவரது செல்போன் கேலரியில் இருந்தவைதான். அவற்றைத்தான் ஆபாசமாக மார்ஃபிங் செய்து வீடியோ தயாரித்துள்ளனர். அதனை ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அப்லோடு செய்துவிடுவோம்' என்று மிரட்டியுள்ளனர். மேலும், 50 லட்ச ரூபாய் வரை பணத்தைக் கேட்டு மிரட்டிய அந்த மர்ம நபர்கள், அவரது மகன், மனைவி ஆகியோரின் வாட்ஸ்அப் எண்ணுக்கும் அனுப்பி மிரட்டியுள்ளனர். இதுதொடர்பாக துபாய் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் அவர்களோ, `உங்கள் நாட்டில்தான் புகார் அளிக்க வேண்டும்' எனக் கூறியுள்ளனர். இந்த தகவலை துபாயில் இருந்தபடி எங்களிடம் சொல்லி பதறினார். இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் எல்லாம் சேர்ந்து, ஜூலை 3-ம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சைபர் கிரைம் பிரிவு காவல் அதிகாரிகளை சந்தித்து புகார் கொடுத்துள்ளோம். நண்பரும் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறிவிட்டார். தனது செல்போன் எண்ணையே மாற்றிப் பயன்படுத்த தொடங்கிவிட்டார். தீர்வு கிடைக்காமல் தற்போது குடும்பத்துடன் துபாயில் தவித்து வருகிறார்'' என்றார் சோகத்துடன். இதுகுறித்து சைபர் கிரைம் துணை ஆணையர் திஷா மிட்டலிடம் பேசினோம். ``அரசியல் பிரமுகரிடம் பணம்பறிக்க முயற்சிக்கும் கும்பல் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதுபோன்ற கிரிமினல் செயல்களில் ஈடுபடும் கும்பல்களிடமிருந்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்'' என்றார்.