`கிணத்தைக் காணவில்லை’ என்ற வடிவேலு காமெடி ஸ்டைலில், கரையே இல்லாத ஊரணிக்கு கல் பதிக்க கான்ட்ராக்ட் கொடுத்த சம்பவம், சிவகங்கை நகராட்சியின் லேட்டஸ்ட் தகிடுதத்தம்.என்ன நடந்தது? ஒப்பந்ததாரர் கந்தசாமியிடம் கேட்டோம். “சிவகங்கை நகராட்சியில கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் நடக்கற பணிகள்ல, குண்டு ஊரணி, லட்சுமி தீர்த்த ஊரணிகளோட கரையில பேவர்பிளாக் கல் பதிக்கிற பணியை டெண்டர் எடுத்திருந்தேன்.இதுல குண்டு ஊரணிக்கரையில கல் பதிக்கிற பணி, 35 லட்சம் ரூபாய்ல நடந்து முடிஞ்சிடுச்சு. அடுத்து லட்சுமி தீர்த்த ஊரணிக் கரையில பணியைத் தொடங்கலாம்னு தீர்மானிச்சு அங்கே போய்ப் பார்த்தா, அப்படியே ஷாக் ஆயிட்டேன். அங்கே ஊரணிக்குக் கரையே இல்லை. உடனே நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரியிடம் போய் விஷயத்தைச் சொன்னேன்.அதுக்கு அவங்க, ‘ஊரணிக்கரை, ஆக்ரமிப்புல இருக்கும். அதை மீட்டுத்தரேன்’னு சொன்னாங்க. நானும் காத்திருந்தேன். ஆனா, எதுவுமே நடக்கலை. மறுபடியும் போய் கேட்டதுக்கு, `ஆக்ரமிப்பெல்லாம் இல்லை’ன்னு மட்டும் சொன்னாங்களே தவிர, கரையைக் கண்டுபிடிச்சு சொல்லவே இல்லை. அதனால, ‘ரொம்ப காலதாமதம் ஆகுது, டெண்டர் டெபாசிட்டை எனக்குத் திருப்பிக் குடுத்துட்டு, வேற யாருக்காவது டெண்டரை குடுத்திருங்க’ன்னு சொன்னேன்..அதுக்கும் பதில் வரலை. ஏற்கெனவே செஞ்சு முடிச்ச வேலைக்கும் பில் பாஸ் பண்ணலை. டெண்டர் விட்டு வேலையை செஞ்சு முடிச்சுட்டதா போலியா கணக்குக் காட்டி காசு பார்க்க நினைச்சிருக்காங்க. நான் அதுக்கு சம்மதிக்க மாட்டேன்னு தெரிஞ்சுட்டதால, பில் தொகையைக் கொடுக்காம என்னைப் பழிவாங்கினாங்க.அதனாலதான், முதல்வர் முதல் லஞ்ச ஒழிப்புத்துறை வரைக்கும் பாண்டீஸ்வரி மேல புகார் குடுத்தேன். கூடவே, வக்கீல் நோட்டீஸும் அனுப்பினேன். அப்பவும் அந்தம்மா அசரவே இல்லை. வட்டிக்குப் பணம் வாங்கித்தான் கான்ட்ராக்ட் வேலை செய்யறோம். அடிமட்டத்துல இருந்து அதிகாரிகள் வரைக்கும் தனித்தனியா கமிஷன் கொடுக்கவேண்டியிருக்கு. இதுல இப்படிப்பட்ட பிரச்னைகள் வேற" என்றார், நொந்துபோய்.ஒப்பந்ததாரரின் புகார் குறித்து பொறியாளர் பாண்டீஸ்வரியிடம் விளக்கம் கேட்டோம். " லட்சுமி தீர்த்த ஊரணி முழுக்கவே சாக்கடை, குப்பைகள் நிறைந்து கிடந்தது. அதை சரிசெய்து கொடுத்துவிடலாம் என்று நினைத்தோம். அதற்குள் டெண்டர் வந்ததால், ஊரணிக்கான கரையை பலப்படுத்திக் கொள்ளுமாறு ஒப்பந்ததாரரிடம் சொன்னோம். அவர் அப்படி செய்யவில்லை. ஆனாலும், ஊரணிக்கான கரையை ஏற்படுத்திக் கொடுக்கும் வேலையை அதிகாரிகள் செய்வார்கள்" என்றார்.சிவகங்கை நகராட்சி ஆணையாளர் அப்துல் ஹாரிஸோ, " நான் பொறுப்பேற்று ஒருவாரம் தான் ஆகிறது. இதுகுறித்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கிறேன்" என்று மட்டும் பதில் அளித்தார்.- பாலா