’எம்பூட்டு புள்ளை ஒரு பலூன் கேட்டா, வாங்கித் தர வக்கில்லை… ஆட்டக்காரிக்கு ஐநூறு ரூவா…” ‘களவாணி’ திரைப்படத்தின் காமெடியை மிஞ்சுகிறது அ.தி.மு.க-வில் நடக்கும் அதகளங்கள். எடப்பாடி பழனிசாமியும் அண்ணாமலையும் பாம்பும் கீரியுமாக அடித்துக்கொள்ளும் நிலையில், அண்ணாமலையில் பாதயாத்திரைக்கு அ.தி.மு.க மாஜிக்கள் நன்கொடை அளித்ததுதான் இலை வட்டாரத்தின் டெவில் டெரர் ட்விஸ்ட்!என்ன நடந்தது என்று அ.தி.மு.க சீனியர்கள் சிலரிடம் பேசினோம்… “தாய் பகை.. குட்டி உறவு என்பது போல, அ.தி.மு.க.வுடன் மோதல்போக்கைக் கடைபிடித்து வருகிறார், அண்ணாமலை. அதேநேரம் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சிலருடனும் அவர் ரகசிய தொடர்பை வைத்திருக்கிறார். இதன் காரணமாக, தனது நடைபயணத்தின்போது அந்த முன்னாள் அமைச்சர்களிடம் பல்வேறு உதவிகளைக் கேட்டுப் பெற்று வருவதாக எடப்பாடிக்குத் தகவல் கிடைத்தது.அதன்படி, அண்ணாமலையின் நடைபயணம் ராமநாதபுரத்தில் தொடங்கியபோது, அந்த மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், ஆட்களைத் திரட்டித் தருவது, உணவு ஏற்பாடு உள்ளிட்ட சில உதவிகளைச் செய்து கொடுத்திருக்கிறார். அதேபோல், மதுரையில் நடைபயணம் மேற்கொண்டபோது, அந்த மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், சில உதவிகளைச் செய்து கொடுத்திருக்கிறார். இதைத் தொடர்ந்து புதுக்கோட்டையிலும் அண்ணாமலைக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்திருக்கிறார், அம்மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மாஜி ஒருவர். இவர்களில் சிலர் கணிசமான தொகையையும் அண்ணாமலையின் நடைபயண செலவுகளுக்காக கொடுத்துள்ளனர்.விருதுநகர் மாவட்ட நடைபயணத்தின்போதும் முன்னாள் அமைச்சர் ஒருவர், பெரிய டீம் ஒன்றையே ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். இதில், பா.ஜ.க. நிர்வாகிகளே முகம் சுழிக்கும் அளவுக்கு அந்த மாஜி உதவி செய்ததுதான் கொடுமை.இந்தத் தகவல்கள் எல்லாம் உடனுக்குடன் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்குப் போக, சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர்களை சேலத்தில் உள்ள தனது இல்லத்துக்கே அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது, `ஆகஸ்ட் 20-ம் தேதி நடக்க இருக்கற நம்ம கட்சி மாநாட்டு செலவுக்கு நிதி கேட்டால் இல்லை என்று கூறும் நீங்கள், அண்ணாமலையின் நடைபயணத்துக்கு மட்டும் விழுந்து விழுந்து உதவி செய்வது ஏன்?' எனக் கேட்டு கடுமையாக டோஸ் விட்டார்.நீதிமன்ற நிபந்தனையால் விருதுநகர் மாவட்டத்தை விட்டு வெளியேற முடியாத அந்த மாஜியை போனில் அழைத்த எடப்பாடி, `புதிய உறுப்பினர் சேர்க்கையில் மெத்தனமாக இருந்துவிட்டு, பா.ஜ.க.வுக்கு ஆள் பிடிக்கும் வேலையைச் செய்கிறீர்களா?' என கடுமையாக கடிந்துகொண்டார்.அதுமட்டுமின்றி, ‘இனி அண்ணாமலை நடைபயணம் செய்யும் மாவட்டங்களில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர், முன்னாள் அமைச்சர்கள் யாரும் எந்த உதவியையும் செய்யக்கூடாது’ என்றும் எச்சரித்தார். இப்படியொரு கடுமையான எச்சரிக்கையை முன்னாள் அமைச்சர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை” என்றார்.``முன்னாள் அமைச்சர்களை எச்சரித்தது உண்மையா?'' என அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் சிவசங்கரியிடம் கேட்டோம். “அண்ணாமலை, அவரது கட்சியை வளர்ப்பதற்காக நடைபயணம் மேற்கொள்கிறார். அவருடைய கட்சி நிர்வாகிகள் இருக்கும்போது, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் உறவை அண்ணாமலை நாடவேண்டிய அவசியம் இல்லை. எங்களைப் பொறுத்தவரை, ஆகஸ்ட் 20ம் தேதி நடக்கவுள்ள மதுரை மாநாட்டில்தான் முழுக் கவனமும் உள்ளது” என்றார்.ஓஹோ! - பாபு படங்கள் : ம.செந்தில்நாதன்