`வாஞ்சிநாதனை காலம் மன்னிக்கலாம், நாங்கள் மன்னிக்க மாட்டோம்' என வரிந்துகட்டிக் கொண்டு கிளம்பியுள்ளனர், நீலகிரி அ.தி.மு.க.வினர். கூட்டுறவுத்துறையின் இணைப் பதிவாளர் ஒருவர் மீதுதான் இத்தனை கோபமும். கூட்டுறவு கோல்மால்களும் அதற்கு எதிராக கரைவேட்டிகள் நடத்தும் நீதிமன்ற யுத்தமும் குளுகுளு ஊட்டியின் லேட்டஸ்ட் அனல். ஊட்டியின் கமர்ஸியல் சாலையில் கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் ஒன்று உள்ளது. இதன் தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த சங்கர் இருக்கிறார். இவருக்குக் கீழ் அதே கட்சியைச் சேர்ந்த சிலர் இயக்குநர்களாக தேர்வாகி, சூப்பர் மார்க்கெட்டை நிர்வகித்து வந்தனர். இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இந்த நிர்வாக அமைப்பையே அதிரடியாக கலைத்து உத்தரவிட்டார், இணைப் பதிவாளர் வாஞ்சிநாதன். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடத்திவரும் சங்கர் மற்றும் கண்ணபிரான், வெங்கடேஷ் மற்றும் சாந்தகுமார் ஆகியோரிடம் பேசினோம். “வாஞ்சிநாதன் மாதிரியான மிக பாரபட்சமான, நக்கலான உயரதிகாரிகள் அரசு நிர்வாகத்தை பிடித்த சாபக்கேடு. எங்க நிர்வாக குழு, 2019ல் முறையாக தேர்வாகி, சூப்பர் மார்க்கெட்டில் பல நல்ல விஷயங்களை செயல்படுத்திட்டு வந்தோம். அங்க பல வருஷமா சேல்ஸ்மேனாக வேலை பார்த்திட்டிருந்த ரவி என்பவர், 49 லட்சம் ரூபாய் மதிப்பில் முறைகேடுகளை பண்ணியிருந்ததை கண்டுபிடிச்சாங்க. தப்பு செஞ்ச நபர் மேல நடவடிக்கை எடுக்குறதுதானே சட்டம். ஆனால் வாஞ்சிநாதனோ, ரவியின் நடவடிக்கையை கவனிக்கத் தவறியதாக சொல்லி எங்களுக்கு நோட்டீஸ் கொடுத்தார். அதே கையோடு நிர்வாக அமைப்பையே தகுதிநீக்கம் பண்ணிட்டார்..இதை எதிர்த்து உடனடியா ஐகோர்ட்டுக்கு போனோம். நீதிமன்றமும் ஒரு கேள்வியை கேட்டுச்சு. `ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிர்வாக அமைப்புக்கு பதிலாக ஸ்பெஷல் ஆபீஸரை அந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு நியமனம் செய்துவிட்டீர்களா?' என்று. இந்தக் கேள்விக்கு `இல்லை'ன்னு இணைப் பதிவாளர் தரப்பிலிருந்து சொல்லப்பட்டது. நீதிபதியும், ‘அப்படியென்றால் இப்ப இருக்கும் நிலையே தொடரட்டும்’னு உத்தரவிட்டார். நாங்களும் நிம்மதியாக ஊட்டிக்கு வந்து சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்தை தொடர நினைச்சோம். அதுக்கும் வாஞ்சிநாதன் தடை போட்டுவிட்டார். சூப்பர் மார்க்கெட் வளர்ச்சிக்காக ஆலோசனை மீட்டிங் நடத்த நாங்க அனுமதி கேட்டப்பவும் மறுத்துட்டார். அந்தவகையில நீதிமன்ற உத்தரவை மீறி அவர் செயல்படறார். ஒழுங்கு நடவடிக்கையில சிக்கியதால மூணு வருஷங்களுக்கு கூட்டுறவு சங்க தேர்தல்ல நாங்க போட்டிபோட முடியாது. எந்தத் தப்பும் செய்யாம கட்சியிலயும் பொதுமக்கள்கிட்டயும் கெட்ட பெயரை சம்பாதிச்சிருக்கோம். இதைப் பத்தி வாஞ்சிநாதனை சந்திச்சு கேட்டோம். ‘ஆர்டர் கடிதத்தை தர்றேன், சைலன்டா மடிச்சு பாக்கெட்ல வெச்சுட்டு போயிடுங்க. வேணும்னா பத்திரிக்கை, மீடியாக்களுக்கு சொல்லாம விட்டுடுறேன்’ன்னு நக்கலா பதில் சொன்னார். இதே ஊட்டியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் அரை கோடிக்கு நிதி முறைகேடு நடந்திருக்குது, அங்கே இவர் நிர்வாக கமிட்டியை தகுதிநீக்கம் பண்ணலை. கூடலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ஒரு கோடிக்கு மேல் ஊழல் நடந்திருக்குது, அங்கேயும் எந்த நடவடிக்கையும் எடுக்கலை. `எங்கே ஊழல் நடந்தாலும் சாதாரண ஊழியர்கள் மேல நடவடிக்கையை எடுத்துட்டு அதிகாரிகளை காப்பாத்திவிடறார். அடிக்கற கொள்ளைல இவருக்கு அதிக பர்சன்டேஜ் போகுது'ன்னு கூட்டுறவு ஊழியர்களே சொல்றாங்க. வாஞ்சிநாதனை காலம் மன்னிச்சாலும் நாங்க சட்டரீதியா தண்டிப்போம்” என்றனர், கொந்தளிப்புடன். நீலகிரி மாவட்ட தி.மு.க.வினரிடம் பேசியபோது, “மாவட்டம் முழுக்க கூட்டுறவு ஸ்டோர்களில் விற்பனையாளர் மற்றும் பேக்கர்ஸ் போஸ்டிங்கை போட்டிருக்காங்க. இதில், எங்க கட்சியின் முக்கிய முகங்கள் சிலரோடு வாஞ்சிநாதனும் கைகோத்து செயல்பட்டு கணிசமா காசு பார்த்துட்டதாக தகவல். அதனால, கூட்டுறவுத் துறை அமைச்சர் உடனடியா இந்தப் பணி நியமனங்களின் உண்மைதன்மையை ஆராயணும்” என்றார்கள்..``இதெல்லாம் உண்மையா?" என இணைப்பதிவாளர் வாஞ்சிநாதனை சந்தித்துக் கேட்டோம். “என் உத்தரவையே புரிஞ்சுக்காம தப்பா பேசுறாங்க. சூப்பர் மார்க்கெட் நிர்வாகக் குழுவை தகுதிநீக்கம் செய்யலை. அதைக் கலைத்துதான் உத்தரவு போட்டிருக்கேன். நான் கோர்ட் உத்தரவை மீறியதாக அபாண்டமா பேசறாங்க. நிர்வாகக் குழுவை கலைச்சதும் உரிய அதிகாரியை நியமிச்சுட்டோம், ஆனால், இந்தத் தகவலை கோர்ட் வாதத்தில் பதிவு பண்ணலை, அவ்வளவுதான். நீலகிரி மாவட்ட கூட்டுறவு அமைப்பில் எங்கே முறைகேடு நடந்தாலும் கடும் நடவடிக்கையை எடுக்கறோம். மத்திய கூட்டுறவு வங்கி, கூடலூர் கூட்டுறவு அமைப்புன்னு எல்லாவற்றிலும் சம்பந்தப்பட்டவங்க மேலே டிஸ்மிஸ், அபராதம்னு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. ஊழல் அதிகாரிகளை காப்பாற்றி நான் பணம் வாங்குவதாகச் சொல்வது பொய் மட்டுமல்ல, குரூர சிந்தனை. கூட்டுறவுத் துறையின் பணி நியமனங்கள்ல நான் பணம் சம்பாதிச்சிருக்கிறதா வதந்தி கிளப்புறவங்களை என்ன செய்வது? வேலை தரச்சொல்லி என்கிட்ட சிபாரிசுக்கு வந்தவங்களை நிராகரிச்சிருப்பேன், அந்தக் கோபத்தில் இப்படி சொல்லியிருக்காங்க. மெரிட், இடஒதுக்கீடு அடிப்படையிலதான் பணி நியமனங்கள் நடந்தது. இதைப் பத்தி தாராளமா விசாரிக்கட்டும், எது உண்மை என பளிச்சுன்னு தெரியும்” என்கிறார். `எது உண்மை?' என்பதை அரசின் விசாரணை வெளிக்கொண்டு வரட்டும்! - எஸ்.ஷக்தி