Reporter
``மணிப்பூர் வேண்டாம்... சென்னையே போதும்!''
சென்னையில் நட்சத்திர ஹோட்டல்கள், ஸ்பாக்கள், ரெஸ்டாரன்ட் உள்பட பல்வேறு தொழில்களில் மணிப்பூரை சேர்ந்த ஆண்களும் பெண்களும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கலவரம் காரணமாக மணிப்பூரில் இருந்து சென்னை வருவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. தினமும் சுமார் 100 பேர் வரை இங்கே வருவதாகவும் தகவல்.