`போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்' என்ற அறிவிப்பு, மருத்துவத் துறைக்கும் ரொம்பவே பொருந்தும். அதிலும், போலி மருத்துவர் ஒருவருக்கு கிளீனிக் நடத்திக்கொள்ள அனுமதி சான்றிதழ் வழங்கிய விவகாரம், திருப்பத்தூரை திகிலில் ஆழ்த்தியிருக்கிறது.தமிழகத்திலேயே திருப்பத்தூர் மாவட்டத்தில்தான் போலி மருத்துவர்கள் அதிகம் ஊடுருவி உள்ளனர். கொரோனா காலத்தில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டனர். அவர்களில், தாமலேரிமுத்தூரில் வைத்தியம் பார்த்து வந்த சம்பத்தும் ஒருவர். .சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர், ‘லித்யாஸ்ரீ பிரைமரி ஹெல்த் கேர் கிளினிக்’ என்ற போர்டுடன் கிளினிக்கை நடத்தி வந்தார். இதுகுறித்து கலெக்டர் கவனத்துக்குப் புகாராக செல்ல, அவரின் அனுமதிச் சான்றிதழை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.இதில், போலி மருத்துவர் சம்பத் தனது கிளினிக்கின் பெயர்ப்பலகையில், மரு.சம்பத் சி.எம்.எஸ். அண்ட் இ.டி. என்ற படிப்பைப் போட்டுத்தான் பிராக்டிஸ் செய்து வந்திருக்கிறார். `இது என்ன படிப்பு?' என்று மருத்துவர்களுக்குத் தெரியவில்லை..தங்களுக்கு வரும் கூட்டத்தைவிட இங்கு அதிக கூட்டம் வருவதைப் பார்த்து சில டாக்டர்களே மருத்துவத் துறை உயர் அதிகாரிகளுக்கு போன் செய்து வழக்குப் போட வைத்திருப்பதாகவும் தகவல். ஆனாலும், ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவரின் தலையீட்டால் கைதாகாமல் தப்பித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.கிளினிக் நடத்த அனுமதி கொடுத்தது குறித்து, திருப்பத்தூர் மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் மாரிமுத்துவிடம் கேட்டோம். “மாவட்டத்தில் போலிகளை ஒடுக்கக் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறேன். அப்போது இதே நபரை நான் கைதும் செய்திருக்கிறேன். அப்படி இருக்கையில் நான் எப்படி அனுமதி சான்றிதழைக் கொடுப்பேன்?'' எனக் கொதித்தவர்,``இந்தத் தவறுக்குக் காரணம் வேலூரிலிருந்து திருப்பத்தூரைப் பிரிக்காதபோது, அவர் அனுமதிகேட்டு விண்ணப்பித்திருக்கிறார். அதில், மாசுக்கட்டுப்பாடு, மருத்துவக்கழிவு மேலாண்மை திட்டம், தீயணைப்புத்துறை போன்றவற்றின் என்.ஓ.சி சான்றுடன் 5 ஆயிரம் ரூபாய் கட்டணமும் இணைத்திருந்தார். மாவட்டத்தைப் பிரிப்பதற்கு முன்னதாக வந்த 127 விண்ணப்பங்களை எனக்கு அனுப்பினர். அவற்றில் 37 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்தேன். அதில் இது போலியாக இருந்துள்ளது’’ என்றார்.. ``அதற்காக ஆய்வு செய்யாமல் கையெழுத்து போடலாமா?'' என்றோம். “அலுவலகத்தில் ஒரு ஊழியர்கூட இல்லை. ஓட்டத் தகுதியில்லாத ஜீப்பை கொடுத்திருக்கிறார்கள். சொந்த செலவில்தான் பெட்ரோல் போடுகிறேன். நான் ஒருவனாகவே எல்லா வேலைகளையும் செய்வதால் இத்தகைய தவறு நிகழ்ந்துவிட்டது'' என்றார்.இதையடுத்து, சம்பத்தின் விளக்கத்தைப் பெற அவரது கிளினிக்குக்கு சென்றோம். அவர் மனைவி கீதாலட்சுமி, “என் கணவர் பி. பார்ம் படித்திருக்கிறார். அதோடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டு படிப்பான (சி.எம்.சி.) அதாவது ‘கம்யூனிட்டி மெடிக்கல் சர்வீஸ் அண்ட் எஸென்ஷியல் ட்ரக்’ படித்திருக்கிறார். அதை வைத்துதான் கிளினிக் நடத்த ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தார்..அனைத்தையும் சரிபார்த்துவிட்டு அனுமதி கொடுத்தார்கள். யாரோ இவரைப் பற்றி தவறாகச் சொல்லவே சான்றிதழை திரும்ப பெற்றுக் கொண்டார்கள். புகார் சொன்னவர்களில் பலருக்கு இவரது படிப்பைப் பற்றிய விவரமே தெரியவில்லை. இப்போதும்கூட, இந்தப் படிப்புக்கு கிளீனிக் வைக்கும் தகுதி உண்டா என்று விசாரித்துவிட்டு முடிவெடுப்பதாகக் கூறியுள்ளனர்.இன்னொரு விஷயம், காய்ச்சல், சளி என எல்லா நோய்களுக்கும் இவர் சிகிச்சை அளிப்பதில்லை. கால் புண், கட்டி, கொப்புளங்களுக்கு மட்டுமே வைத்தியம் பார்ப்பார். அதிலும், கால் அகற்றவேண்டும் என்று மருத்துவர்களால் சொல்லப்பட்ட நிலையில் உள்ளவர்கள்கூட இவரிடம் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். அவர்கள் யாரும் புகார் கொடுக்கவில்லை'' என்றார்.புகார் வரும் வரையிலா காத்திருப்பார்கள்? - அன்புவேலாயுதம்