இது ஸ்கூல் சீசன்போல. நெல்லையில் பட்டியலின மாணவர் மீது சக மாணவர்கள் நடத்திய கொடூர தாக்குதலின் அவப்பெயரில் இருந்து நெல்லை மீள்வதற்குள், பள்ளியை முன்வைத்து நடக்கும் இந்து-கிறிஸ்துவ மத மோதலால் திகிலில் ஆழ்ந்திருக்கிறது, தென்காசி.தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே அச்சங்குட்டம் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 700 இந்து குடும்பங்களும் 45 கிறிஸ்துவ குடும்பங்களும் வசிக்கின்றன. ஊரின் மத்தியில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துவ டயோசீஸின் கட்டுப்பாட்டில், திருநெல்வேலி டயோசீஸன் டிரஸ்ட் அசோசியேஷன் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.இதனை நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்த ஊர்மக்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்ற கல்வி அதிகாரிகள் முன்வந்தனர். ஆனால், அந்த இடத்தில் தேவாலயம் கட்ட டயோசீஸ் தரப்பில் முயற்சி செய்ய, `இந்து-கிறிஸ்துவ மோதலாக மாறிவிடுமோ?' என்ற அச்சத்தில் உறைந்திருக்கிறது, போலீஸ்.``என்ன நடக்கிறது?'' என தென்காசி மாவட்ட பா.ஜ.க. நலத்திட்ட உதவிகள் பிரிவின் செயலாளரான வசந்தகுமாரிடம் கேட்டோம். “கிறிஸ்துவ பள்ளியில் படிக்கும் 117 பேரில் 99 சதவிகித மாணவ, மாணவியர் இந்துக்கள். ஊர் மக்கள் தானமாகக் கொடுத்த 5 சென்ட் நிலத்தில் தொடக்கப்பள்ளி இயங்கி வந்தது. நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளுக்கு இங்கிருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வீராணத்துக்குத்தான் போகவேண்டும்..எனவே, `தொடக்கப் பள்ளியை நடுநிலைப்பள்ளியாக மாற்ற வேண்டும்' என்ற கோரிக்கையை கல்வி அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டு அனுமதி கொடுத்தனர். ஊருக்கு வெளியே இடமும் வாங்கி புதிய கட்டடம் ஒன்று கட்டப்பட்டது. மேலும், தொடக்கப் பள்ளியை இடித்துவிட்டு அங்கும் புது கட்டடம் கட்ட ஊர் மக்கள் முடிவு செய்தனர்.இந்தநிலையில், தொடக்கப்பள்ளி கட்டடத்தை இடித்த கிறிஸ்துவ டயோசீஸ் நிர்வாகம், அங்கு பள்ளிக்கூடம் கட்டாமல் புதிதாக தேவாலயம் கட்ட அடிக்கல் நாட்டியதுதான் பிரச்னைக்கு தொடக்கப்புள்ளி. இதுதொடர்பாக, டயோசீஸ் நிர்வாகத்திடம் ஊர்மக்கள் பேசினார்கள். ஆனால், சர்ச் கட்டுவதில் இருந்து அவர்கள் பின்வாங்கவில்லை. இதனால் டென்ஷனான ஊர்மக்கள், சர்ச் கட்ட எதிர்ப்பு தெரிவித்ததுடன் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை.இதன் காரணமாக, பொதுத் தேர்வுகளை வீராணம் பள்ளியில் போய் எழுதினார்கள். ஜூன் மாதம் பள்ளிக்கூடம் திறந்தவேளையில் திடீரென இரவோடு இரவாக சர்ச் கட்டும் பணி தொடங்கியது. இதை ஊர் மக்கள் தடுத்து நிறுத்தினார்கள். ‘கிறிஸ்துவ பள்ளியை மூடு, அரசுப் பள்ளி அல்லது நவோதயா பள்ளியைத் திற’ என்ற கோஷத்துடன் கலெக்டர், எஸ்.பி., கல்வி அதிகாரிகள், அமைச்சர் அன்பில் மகேஷ் என அனைவரிடமும் மனு கொடுத்திருக்கிறோம்.அதேவேளையில், `எங்கள் பிள்ளைகளின் படிப்பு பாழாகிவிடக்கூடாது' என்பதற்காக ஊர்ப் பொதுமண்டபத்தை பள்ளிக்கூடமாக மாற்றியிருக்கிறோம். அங்கு, ஐந்து ஆசிரியர்களையும் நியமனம் செய்திருக்கிறோம். அவர்களுக்கு ஊர் வரியிலிருந்து சம்பளமும் கொடுக்கிறோம். எந்தக் காரணத்தை முன்னிட்டும் கிறிஸ்துவ பள்ளிக்கு எங்கள் பிள்ளைகளை அனுப்பமாட்டோம்'' என்றார்..மேலும், ``சி.எஸ்.ஐ டயோசீஸின் லே செயலாளராக இருக்கும் டி.எஸ்.ஜெயசிங் என்பவர்தான், நிதி கொடுத்து சர்ச்சை கட்டச் சொல்லி இருக்கிறார். இதற்காக தி.மு.க.வை சேர்ந்த வி.ஐ.பி.க்கள் அனைவரையும் சரிக்கட்டி இருக்கிறார். ஊருக்கு நடுவில் சர்ச் கட்டுவதையும் தடுத்து நிறுத்துவோம்” என்றார், கொதிப்புடன். ``உங்கள் மீதான புகாருக்கு என்ன பதில்?'' என சி.எஸ்.ஐ. டயோசீஸ் லே செயலாளர் டி.எஸ்.ஜெயசிங்கிடம் கேட்டோம். “அச்சங்குட்டத்தில் 150 ஆண்டுகள் பழமையான சர்ச் இருந்தது உண்மை. நெல்லை டயோசீஸில் வேதநாயகம் அணி, தினகரன் அணி என்று இரண்டு அணிகள் இருந்தன. இவைகளுக்கு இடையே நடந்த போட்டியில் வேதநாயகம் அணியை சேர்ந்த நபர் ஒருவர், அந்த சர்ச்சை இடித்து தரைமட்டமாக்கிவிட்டார்.ஒரு வெற்றுப் பேப்பரை ஊர்மக்களிடம் காட்டி, `இந்த இடம் உங்களுக்குச் (இந்துக்களுக்கு) சொந்தமானது' என்று பற்றவைத்துவிட்டுச் சென்றுவிட்டார். இதனால் அந்த இடத்தில் புதிய சர்ச் கட்ட முடியாத சூழல் ஏற்பட்டது. தற்போது, நாங்கள் அதிகாரத்துக்கு வந்தவுடன் மீண்டும் கலெக்டர், சபாநாயகர் அப்பாவு ஆகியோரை சந்தித்து விஷயத்தைச் சொன்னோம். கலெக்டரும், `அது சர்ச் இருந்த இடம்தான்' என்று சொல்லி புதுப்பிக்க உத்தரவு போட்டார்..ஆனால், அதை உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர் தடுத்தார். ஆனாலும் கலெக்டர் விடவில்லை. `கொடுத்த ஆர்டர்படி கட்டுங்கள்' எனக் கூறிவிட்டார். இதனைத் தொடர்ந்து சர்ச் கட்ட அடிக்கல் நாட்டினோம். இப்போது பிஷப் பர்னபாஸ் எங்களுக்கு எதிராக இருப்பதால், அடிக்கல் நாட்ட வந்த 10 போதகர்களுக்கும் சஸ்பெண்ட் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.தற்போது பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பாததால், கிறிஸ்துவ பள்ளியில் போதிய வருகை இல்லை. இதனால், பள்ளியை மூடவேண்டிய நிலை. இதன் காரணமாக, ‘சர்ச் வேண்டாம், பள்ளியே போதும்’ என்று உள்ளூர் பாதிரியார் எழுதிக் கொடுத்திருக்கிறார். இதுதான் உண்மை நிலை” என்றார், வெளிப்படையாக. `பூவா.. தலையா?' ஆட்டம் முடிவுக்கு வரட்டும்! - அ. துரைசாமி