ஆகஸ்ட் 26 அதிகாலை. ராமேஸ்வரம் செல்வதற்கு வசதியாக லக்னோவில் இருந்து வந்த கொல்லம்-புனலூர் ரயிலின் பெட்டிகள் கழற்றிவிடப்பட்டு மதுரை-போடி ரயில் பாதையில் புதிய பிளாட்ஃபாரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. `திருடர்கள் வந்துவிடக் கூடாது' என்ற அச்சத்தில் உள்பக்கமாக பெட்டிகளை இழுத்து மூடிவிட்டு அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர் பயணிகள். அப்போது சிலர் பற்ற வைத்த அலட்சிய நெருப்பு ஒன்பது பேரின் உயிரைக் குடித்திருக்கிறது. இதில், ஆறு பேர் மாயம் என்பதுதான் அதிர்ச்சித் தகவல்.விபத்து நடந்தது எப்படி?உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து ராமேஸ்வரத்துக்கு இரண்டு வார ஆன்மிக சுற்றுலாப் பயணத் திட்டத்துடன் 180 பேர் ரயிலில் புறப்பட்டனர். ஆகஸ்ட் 17ம் தேதி தேதி கிளம்பிய இவர்களில் 3 பேர் சமையல்காரர்கள். தங்களுக்குத் தேவையான காய்கறி, மளிகைப் பொருட்கள் மற்றும் கேஸ் சிலிண்டர்களையும் கொண்டு வந்துள்ளனர்..விஜயவாடா, ரேணிகுண்டா, மைசூர், பெங்களூரு என பல இடங்களை சுற்றிப் பார்த்தவர்கள் ஆகஸ்ட் 25ம் தேதி இரவு நாகர்கோவில் வந்தடைந்தனர். அங்குள்ள பத்மநாப சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, அடுத்து ராமேஸ்வரம் செல்லத் திட்டமிட்டனர். புனலூர் -மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலில் இவர்களின் பெட்டி இணைக்கப்பட்டு ஆகஸ்ட் 26ம் தேதி அதிகாலை மதுரை வந்தனர். அங்கே பிளாட்பாரத்தில் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதன்பிறகு நடந்த துயர சம்பவத்தை நம்மிடம் விவரித்தார், ஜோதிகுப்தா என்ற பயணி.. ``நாங்கள் பயணித்த ரயில் பெட்டியில் எங்களுக்கு மூன்று வேளையும் உணவு, சப்பாத்தி, டீ என கொடுப்பதற்காக சிறிய கேன்டீன் ஒன்று இயங்கியது. அன்று அதிகாலையில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தோம். வெடித்த சத்தமோ, தீ பிடித்ததோகூட எங்களுக்குத் தெரியவில்லை. நேரம் ஆக ஆக தீப்பற்றி எரியத்தொடங்கியதும் ஜன்னல் வழியாக தப்பிக்கத் தொடங்கினார்கள். எங்களுடன் வந்த பாதிப்பேர் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அனைவரையும் தேடிப்பிடித்து எங்கள் ஊருக்கு அனுப்பி வையுங்கள்" என்று தழுதழுத்தார்..மற்றொரு பயணி சிவபிரதாப்சிங் சௌகான், ``அதிகாலை நான்கு மணி இருக்கும் டீ போடுவதற்காக அடுப்பை பற்றவைத்தார்கள். அவ்வளவுதான் பயங்கர வெடிச் சத்தம். எழுந்து பார்த்தால் தீ பரவிக்கொண்டிருந்தது. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஆங்காங்கே ஜன்னல் வழியாக இறங்கியதைப் பார்த்து நானும் தப்பிக்க முயற்சித்தேன். அதற்குள் என் கை, கால்களில் தீ பற்றியது. என் மனைவி மித்ரேஷ்குமாரி, மைத்துனர் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை" என கூறிக்கொண்டே சிகிச்சைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து, `என் மனைவி இறந்துட்டா சார்..' என்று கதறி அழுதார்.தீ விபத்து நடந்த இடத்துக்கு வந்த அமைச்சர் மூர்த்தி, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தருமாறு உத்தரவிட்டார். அப்போது ஸ்வேதா சுக்லா என்ற சிறுவன், இந்தியில் ஏதோ பேசினான். அது அமைச்சருக்குப் புரியவில்லை. சிறுவனுக்கு பிஸ்கெட் பாக்கெட், செருப்பு ஆகியவற்றை வாங்கிக் கொடுத்தார். அதற்கு நன்றி கூறிய சிறுவன், `என்னை ராமேஸ்வரம் கோயிலுக்கு கூட்டிச் செல்றீங்களா?' என்று கேட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது..மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த செல்லத்துரையிடம் பேசியபோது, ``தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து ஓடிவந்தோம். சிலிண்டர் ஒன்று வெடித்து வெளியே கிடந்தது. குக்கரில் வேகவைத்திருந்த உருளைக்கிழங்கு கருகிய நிலையில் இருந்தது. சமையல் பாத்திரங்கள் தூக்கி வீசப்பட்டதில் நெளிந்துபோய்க் கிடந்தன. பெட்டியை பூட்டி வைக்காமல் இருந்திருந்தால் காயத்தோடு தப்பியிருப்பார்கள்.ரயில்வே டெக்னிக்கல் டீம் வந்துதான் பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து அங்கிருந்த சிலிண்டர், அடுப்பு, விறகு, கரி மூட்டைகள், பாத்திரங்கள் என ஒவ்வொன்றாக வெளியில் எடுத்துப் போட்டனர். அப்போது எரிந்த உடல்களையும் அவர்கள் வெளியில் எடுத்து வந்தனர். சட்டவிரோதமாக சிலிண்டர்களை ரயிலில் ஏற்றி அனுப்பிய சம்பந்தப்பட்ட டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்தின் மீதும் அதனை தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதன் பின்னணியை விசாரிக்க வேண்டும்" என்றார்..தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் கூறுகையில், ``ரயில் பெட்டியில் சிலிண்டர் வெடித்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. லக்னோவில் இருந்து எப்படி வீட்டு உபயோக சிலிண்டரை ரயிலில் ஏற்ற அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. பயணிகள் 63 பேரில் 9 பேர் இறந்துவிட்டனர். அவர்களில் 7 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தவிர, 6 பேர் எங்கே சென்றார்கள்? அவர்கள் சமையல்காரர்களா என்பது தெரியவில்லை" என்றார்.இது விபத்து மட்டும் அல்ல... அலட்சியத்தின்,பொறுப்பற்றத் தன்மையின் விலை! இனியேனும் திருந்துவார்களா? - பாலாபடங்கள் : எம்.இராமசாமி