பிஷப்பை துரத்தும் கூலிப்படை...எம்.பி.யை வளைக்கும் காவி படை? நெல்லை சி.எஸ்.ஐ. திருச்சபையில் பிஷப் பர்னபாஸ் தலைமையிலான கோஷ்டிக்கும், லே செயலாளர் ஜெயசிங், ஞானதிரவியம் எம்.பி கோஷ்டிக்கும் இடையேயான மோதலில் இயேசு ரட்சிக்கிறார் சபை பிஷப் காட்பிரே நோபிள் ஓட ஒட விரட்டி அடித்து துரத்தப்பட்டது அறிவாலயம் அறிந்ததே. இதனைத் தொடர்ந்து அவர் போலீஸில் புகார் செய்ய, ஞானதிரவியம் எம்.பி உள்ளிட்ட 33 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பிஷப் காட்பிரே நோபிள், எஸ்.பி சிலம்பரசனை சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ”தி.மு.க. எம்.பி ஞானதிரவியத்தின் கூலிப்படைதான் என்னை கொலை செய்ய முயன்றது. நம் ஊரில் மோட்டார் பைக்கிற்கு ஆசைப்பட்டு கொலை செய்கிறவன் இருக்கிறான். அப்படிப்பட்ட நான்கு கூலிப்படையினர் என்னை கொல்ல அலைகிறார்கள். எனவேதான் எனக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு செய்திருக்கிறேன். எனக்கு ஏதாச்சும் நிகழ்ந்தால் தி.மு.க ஆட்சிக்குத்தான் கெட்ட பெயர்” என்றார். இதற்கிடையே ஞானதிரவியம் எம்.பி மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அவரை பா.ஜ.க.வுக்கு இழுக்கும் முயற்சிகள் தொடங்கிவிட்டன. என்ன செய்யப்போகிறது தி.மு.க.?-அ.துரைசாமி.எடப்பாடி பினாமிக்கு டெண்டர்... கொர் சேலம் தி.மு.க.?’ சேலத்தில் வீரபாண்டியாரின் வெற்றிடத்தை நிரப்ப தி.மு.க.வில் யாரும் இல்லை. அதனால் எடப்பாடி கோட்டையாகிவிட்டது. ஆளுங்கட்சியாய் இருக்கும்போது கோலோச்சலாம், சரி. எதிர்க்கட்சியாய் இருக்கும் போதும் எகிறி அடித்தால் சும்மா இருப்போமா?’ என்று முன்னாள் பகுதிச் செயலாளரும் 18வது வார்டு கவுன்சிலருமான சரவணனும், முன்னாள் மாநகரச் செயலாளரும் 28வது வார்டு கவுன்சிலருமான ஜெயக்குமாரும் முண்டா தட்ட, அவர்கள் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதுதான் சேலம் ஜிலீர். எடப்பாடிக்கு நெருக்கமானவர், கொங்கணாபுரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கரட்டூர் மணி. கடந்த ஆட்சியில் ஸ்டாலின் இப்பகுதிக்கு வந்தபோது, அவரைத் தடுக்க ஏகப்பட்ட உருட்டுகளை உருட்டியவர். அப்படிப்பட்டவருக்கு இன்றைய ஆளுங்கட்சியின் சேலம் மா.செ.க்களின் அனுமதியோடு பல கோடிகளுக்கு ஒப்பந்தம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத்தான், ‘தி.மு.க.வில் ஆளே இல்லையா? சேலம் தி.மு.க. வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது’ என்று தலைமைக்கு கடிதம் அனுப்பிவிட்டு, சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தலைமைதான் நியாயம் சொல்லணும்..!-கே.பழனிவேல்.காங். வாரிசுகள் கத்திச்சண்டை..!சிவகங்கையில் ப.சிதம்பரம் அணி, சுதர்சன நாச்சியப்பன் அணி என இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து பூத் கமிட்டி கூட்டங்களை நடத்துவது கதர் வேட்டிகளுக்குள் கடும் புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. இத்தொகுதியில் பல முறை வெற்றி பெற்றும் தொகுதி வளர்ச்சிக்காக எதையும் செய்யாத ப.சி., மக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்க, மகன் கார்த்தி சிதம்பரத்தை நிறுத்தி வெற்றிபெற வைத்தார். இந்த முறை சிவகங்கை எம்.பி. சீட்டை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக சுதர்சன நாச்சியப்பன், தன் மகன் ஜெயசிம்மனை களமிறக்கக் காத்திருக்கிறார். இதனாலேயே சிதம்பரம் நடத்தும் பூத் கமிட்டி கூட்டத்தை சுதர்சன நாச்சியப்பன் கோஷ்டியினர் தவிர்க்க, சு.நா. கோஷ்டியினர் நடத்தும் கூட்டங்களில் ப.சி. அணி கலந்து கொள்வதில்லை. கோஷ்டிப் பூசல் காங்கிரஸ் கட்சிக்கு புதுசு இல்லை என்றாலும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி வெளிப்படையாக மோதிக்கொள்வது வெற்றியை பாதிக்கும் என்கிறார்கள்.- பாலா.சீட்டிங் டியூஷன் டெல்லியில் படித்தோம்..!வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி குழந்தைகளுக்கு ஃபீஸைக் கட்டி பள்ளியில் சேர்க்கும் பெற்றோரைக் குறிவைத்து புதுவித மோசடியில் இறங்கியிருக்கிறது ஒரு கும்பல். பெற்றோருக்கு போன் செய்து, கல்வி உதவித்தொகை வாங்கித் தருவதாக ஆசைகாட்டி, புராசஸிங் ஃபீஸ் இரண்டாயிரத்தை க்யூஆர் கோடு மூலம் அனுப்புமாறு கூறி பெற்றோரின் வங்கிக் கணக்கில் இருந்த மொத்தப் பணத்தையும் சுரண்டியுள்ளது அந்த கும்பல். இது தொடர்பாக நூற்றுக்கணக்கானோரிடமிருந்து கோவை சைபர் க்ரைம் போலீஸுக்கு புகார் வந்ததையடுத்து, அலர்ட்டாகி, மோசடி டீமின் மொபைல் எண்களை டிரேஸ் செய்து, ஐந்து பேரைக் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அவர்கள், கூலித்தொழில் செய்துவந்ததாகவும், அதில் போதிய வருமானம் இல்லாததால், டெல்லிக்குச் சென்று சீட்டிங் பண்ணுவது எப்படி என்று டியூஷன் படித்துவிட்டு வந்ததாகவும் சொல்ல, அதிர்ந்துபோயிருக்கிறார்கள்.-எஸ்.ஷக்தி.வேலை செய்தும் ஓராண்டு ஊதியமில்லை!பொதுமக்களை அலைய விடுவதில் பெயர் பெற்றது வருவாய்த்துறை. அந்த வருவாய்த்துறை அலுவலர்களையே அரசு ஊதியம் வழங்காமல் அலையவைத்திருப்பதுதான் ஆச்சரியம். தாசில்தார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்த ஆர்.கே. பேட்டைக்குச் சென்றோம். திருத்தணி வருவாய் அலுவலர்கள் சங்கத் தலைவர் வெண்ணிலா, ’பள்ளிப்பட்டு தாலுகாவில் இருந்து ஆர்.கே.பேட்டையைப் பிரித்து புது தாலுகாவாக 2019ம் ஆண்டு உதயமானது. தாசில்தார் முதல் ஓட்டுநர் உட்பட பல்வேறு பணியிடங்களை தற்காலிகமாக அறிவித்து அவர்களின் ஊதியத்திற்கான நிதியையும் ஒதுக்கியது. அந்தத் தொகை 2022ம் ஆண்டு சில மாதங்கள் வரை வந்தது. அதன் பிறகு நிதியில்லை என்று நிறுத்திவிட்டது. இங்கு பணியாற்றியவர்கள் வேறு இடங்களுக்கு மாற்றலாகிப் போனாலும் இங்கு பணியாற்றிய காலத்திற்கான சம்பளம் அவர்களுக்கு வரவில்லை. பல மாதங்களாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லை’ என்கிறார்.இதற்கு திருத்தணி கோட்டாட்சியர் தீபாவோ, ‘இந்த ஆர்ப்பாட்டம் குறித்து எனக்கும் தகவல் வந்தது. அனைத்து விவரங்களையும் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறேன். சில தினங்களில் அவர்களுக்குரிய ஊதியம் கிடைத்துவிடும்!’ என்கிறார்.- அன்புவேலாயுதம்