கைநழுவின பூங்காக்கள்... கடுகடுக்கும் கவுன்சிலர்கள்! கோவை மாநகராட்சியில் இருக்கும் நூற்றுக்கணக்கான பூங்காக்களில் பல பூங்காக்கள் பராமரிப்பின்றிக் கிடக்கின்றன. இதிலும் காசு பார்க்கலாம் என்று திட்டமிட்ட ஆளும் தரப்பு சைலன்ட்டாக பூங்காக்களை பராமரிக்கும் ஒப்பந்தத்தை தி.மு.க கவுன்சிலர்களுக்கு அளித்துவிட்டது. இதையடுத்து, பெரும் தொகைக்கு பில் போடலாம் என்று கடந்த குஷியானார்கள் ஆளும் கட்சி கவுன்சிலர்கள். ஆனால், எதிர்க்கட்சி கவுன்சிலர்கள், ’எங்களுக்கு பூங்கா வேண்டும்’ என்று எகிறிக் குதிக்க... இரு தரப்புக்கு இடையே பெரும் பஞ்சாயத்து ஆனது. இதனால் தலையைப் பிய்த்துக்கொண்ட மாநகராட்சி நிர்வாகம் இப்போது இரு தரப்புக்குமே பூங்காக்கள் கிடையாது என்று கைவிரித்துவிட்டு, தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால், ஆளும் தரப்பு கவுன்சிலர்கள் பலரும் கடுகடுப்பில் இருக்கிறார்கள். # அமைதி பூங்கா அலறல் பூங்காவாயிடுச்சே!ஒத்த ரூபா தாரேன்... பிளாஸ்டிக்கை ஒழிச்சுக் காட்டுறேன்!பொதுமக்களால் அலட்சியமாக தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பாட்டில்கள் சாக்கடைகளை அடைத்துக்கொள்வதால் மழைக்காலத்தில் ஏகத்துக்கும் பிரச்னைகள் ஏற்படுகின்றன. கால்நடைகள் பிளாஸ்டிக்கை தின்பதால் அவையும் பாதிக்கப்படுகின்றன. எனவே பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்காக ‘நெகிழி இல்லா நெல்லை’ என்ற திட்டத்தை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி கொண்டு வந்திருக்கிறார். அதாவது, சாலைகளில் கிடைக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு வந்து ஒப்படைத்தால் ஒரு பாட்டிலுக்கு ஒரு ரூபாய் தரப்படும் என்பதுதான் இந்த திட்டம். இதற்காக முதல்கட்டமாக 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பத்தே நாட்களில் 17 ஆயிரம் பாட்டில்கள் வாங்கப்பட்டிருக்கின்றன. அதேசமயம், இப்படி வாங்கப்படும் பாட்டில்கள் சிமென்ட் ஃபேக்டரிகளுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படும் என்று சொல்லப்படுவதால், “பிளாஸ்டிக்கை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாதா?” என்று கேள்வி எழுப்புகிறார்கள் சூழலியலாளர்கள்! # பாடியை எரிக்கிறதா, புதைக்கிறதா மொமன்ட்!டார்ச்சர் தாங்கலை... டிரான்ஸ்ஃபர் கொடுங்க!முட்டை மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தலைமைப் பொறுப்பில் பணிபுரிபவருக்கு டிரான்ஸ்ஃபர் என்ற விஷயம் ஏரியாவில் பரபரக்கிறது. லோக்கல் அரசியல் சூழல், தி.மு.க. பிரமுகர்கள் கொடுக்கும் குடைச்சல் போன்ற விஷயங்களால் அரசிடம் பணிமாறுதல் கேட்டிருக்கிறார் என்று கிசுகிசுக்கிறார்கள் விவரமறிந்தவர்கள். அலுவலக வட்டாரத்தில் விசாரித்தால், ”உண்மைதான்... அவங்களும் கட்சிக்காரங்க டார்ச்சரை எத்தனை நாளுதான் சமாளிப்பாங்க? அதனால்தான், அவங்களும் ’ரெண்டு வருஷமா ஒரே மாவட்டத்துல இருந்து போர் அடிக்குது. உடம்பும் ஒத்துவரலை’ன்னு டிரான்ஸ்ஃபர் கேட்டிருக்காங்க” என்று காதைக் கடிக்கிறார்கள்! மாற்றம்... முன்னேற்றம்... அம்மணி!.பேருதான் தங்கம்... வாயைத் திறந்தா பங்கம்!தமிழக உள்ளாட்சிகளை தன் பொறுப்பில் வைத்திருக்கும் தங்கமான அதிகாரி அவர். ஆனால், வாயைத் திறந்தால் ஊழியர்கள் காதைப் பொத்திக்கொண்டு ஓடுகிறார்களாம். வாரத்தில் மூன்று நாட்கள் தனக்குக் கீழ் வேலை பார்க்கும் இணை இயக்குநர்கள், மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களுடன் வீடியோ கான்ஃபிரன்சிங் மூலம் தங்கமான அதிகாரி கூட்டம் நடத்துவது வழக்கம். அப்போது “டெண்டர் விட்டாச்சா, கான்டிராக்டர்களுக்கு பணம் செட்டில் பண்ணியாச்சா?” என்று அதிகார தோரணையில் கேட்கிறார். யாரேனும் இல்லை என்று இழுத்தால், காரணம்கூட சொல்ல விடாமல், “அதைவிட புடுங்குற வேலை என்ன இருக்கு... கொன்னு குழித்தோண்டி புதைச்சிடுவேன்...” என்று வெளுத்து வாங்குகிறாராம். இதையடுத்து, “ஒப்பந்ததாரர்கள்கிட்ட இவர் கமிஷன் காசு வாங்குறதுக்கு எங்களை விரட்டினா எப்படி?” என்று புலம்புகிறார்கள் அதிகாரிகள். ஏற்கெனவே கடந்த ஆட்சியில் கோயில் நகரில் உயர் பதவியில் இருந்தபோதே அரசியல்வாதிகளை கையில் போட்டுக்கொண்டு ஏகத்துக்கும் சர்ச்சையில் சிக்கியவர், இப்போது அமைச்சர் நேருவின் பெயரைச் சொல்லி அட்ராசிட்டி செய்கிறார் என்கிறார்கள் உள்ளாட்சி வட்டாரத்தில்! # பொன் ஊசின்னாலும் கண்ணுல குத்திக்க முடியுமா? தி.மு.க. நிர்வாகிகளுக்கு கட்டம் சரியில்லை..!அ.தி.மு.க. ஆட்சியில் உளவுத்துறையில் இருந்து ஓய்வுபெற்றவர் அந்த அதிகாரி. இவரின் தம்பி மகள் மேனகா என்பவரை, பிரபல ஜவுளி நிறுவன அதிபர் ஒருவர் காதலித்து குடும்பமும் நடத்திவிட்டு, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தார். இதையறிந்த மேனகா போலீஸ், நீதிமன்றம் என்று படையெடுத்து கல்யாணத்தை நிறுத்திவிட்டார். அது சம்பந்தப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஜவுளி நிறுவன அதிபருக்கு ஆதரவாக தேனி தெற்கு மாவட்ட தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் மீரா ரபீக், தலைமை செயற்குழு உறுப்பினர் அரசேந்திரன் ஆகியோர் இறங்கினர். அந்தப் பெண்ணைப் பற்றி இன்ஸ்டாகிராமிலும் சிலர் அவதூறு பரப்பினர். இதனால் கொதித்துப்போன ரிட்டயர்டு ஆபீஸர், விஷயத்தை கட்சித் தலைமையிடம் கொண்டுசெல்ல, தி.மு.க.விலிருந்து இருவரும் கட்டம் கட்டப்பட்டுள்ளனர். # கம்முன்னு இருந்தா ஜம்முன்னு இருந்திருக்கலாமே! மாணவிகளை வதைக்கலாமா?ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இயங்கி வருகிறது தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி. இங்கு தேர்வுகள் எல்லாம் முடிந்து, 15 நாட்களுக்கு முன்பே விடுப்பு விடப்பட்டுவிட்டது. இந்தநிலையில்தான் சமீபத்தில் இந்த கல்லூரியில் நடந்த ஆண்டு விழாவுக்கு ’அனைவரும் கட்டாயம் கலந்துக்கொள்ள வேண்டும்’ என்று போனில் குறுச்செய்தி மூலம் அழைப்பு விடுத்திருக்கிறது கல்லூரி நிர்வாகம். ஆனால், பெரும்பாலான மாணவிகள் குக்கிராமத்தில் இருந்து வருவதாலும், இரவு வீடு திரும்ப போக்குவரத்து வசதி இல்லாததாலும் விழாவுக்கு வரவில்லை. அப்படி விழாவுக்கு வராத 400 மாணவிகளுக்கு தலா 500 அபராதம் விதித்துள்ளது கல்லூரி நிர்வாகம். அத்தனை பேரும் ஏழை மாணவிகள் என்பதால் செய்வதறியாமல் தவிக்கிறார்கள். # நியாயமா சாரே!