-எஸ்.ஷக்தி`ஒருவனை துள்ளத் துடிக்க வெட்டுகிறார்கள். அந்தக் காட்சிக்கு திரையங்கமே எழுந்துநின்று கைதட்டுகிறது'-10 ஆண்டுகளுக்கு முன்பு மேடையொன்றில் வேதனைப்பட்டார், இயக்குநர் பாலுமகேந்திரா. ஆனால், அதைவிட உக்கிரமாக, வக்கிரமாக வெள்ளித் திரையெங்கும் சிவப்புத் துளிகளை தெறிக்கவிட்டு பரிசுகளை வாரிக் குவிக்கிறார்கள், கோலிவுட் பிரம்மாக்கள்..ஏன் இவ்வளவு `கொலவெறி'? நடிகர் ரஜினிகாந்தின் 171-வது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 171 எனும் எண்ணில் ரத்தக்கறை படிந்ததுபோன்ற டிசைன் அதிரவைத்தது. இதுமட்டுமல்ல, ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் இப்படித்தான் ரத்தம் சொட்டும் கத்தியுடன் அறிமுகமானது. அப்படம் முழுவதுமே தலையெடுப்பு, குண்டு வெடிப்பு, ரத்தச்சிதறல் என்று வெறித்தனங்கள்தான்.ரஜினி மட்டுமல்ல விஜய் தன் `லியோ'வில் கோடாரியை தூக்கி ரத்தம்தெறிக்க கிழித்தெடுக்கிறார். கமல்ஹாசனின் `விக்ரம்' படத்தின் முதல் காட்சி தொடங்கி கிளைமேக்ஸ் வரையில் ஃப்ரேம் பை ஃப்ரேம் ரத்தம்தான். அஜித்தின் `துணிவு' படத்தில் கார்பன் துப்பாக்கி கதறிக்கொண்டே இருந்தது. தனுஷின் எதிர்வரும் பீரியட் படமான கேப்டன் மில்லரின் டீசரிலோ, பீரங்கி வெடிக்கிறது, துப்பாக்கி மிரட்டுகிறது, கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கிறார். இவ்வளவு ஏன், விஜய் சேதுபதியின் புதிய படமான ‘மகாராஜா’வின் புதிய லுக்கில் ரத்தம் வழியவழிய கத்தி கபடாவுடன் கட்டு போட்டபடி உட்கார்ந்திருக்கிறார்..வன்முறை, வெறித்தனம், கொலை, ரத்தம் மட்டுமல்ல புகையும் மதுவும் கோலிவுட்டை மீண்டும் ஆட்டுவிக்கத் தொடங்கியுள்ளது. இந்தப் புரட்சியை மீட்டெடுத்த பெருமை, லோகேஷ் கனகராஜைத்தான் சேரும். அவரின் படைப்புகளான கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ என நான்கிலுமே புகை மற்றும் மது நாற்றம் குடலைப் புரட்டுகிறது. குத்துப்பட்ட இடத்தில் குவார்ட்டரை ஊற்றி ஆசுவாசப்படும் நாயகன் டில்லி, சரக்கடித்துவிட்டு கவுந்துகிடக்கும் கல்லூரி பேராசிரியர் ஜே.டி,பேரன் எடுத்துவிட்ட வயதில் போதையை ஏற்றிவிட்டு ‘பத்தல பத்தல புட்டியும் பத்தல, குட்டியும் பத்தல’ என்று ஆட்டம்போடும் மாஜி கேப்டன் விக்ரம்’ என்று வந்த படங்களின் நாயகர்கள் மட்டுமல்ல, வரவிருக்கும் `லியோ'வின் நாயகனும் மூளையில் போதையும் வாயில் சிகரெட்டுமாக ஆடுகிறார். லோகி மட்டுமல்ல நெல்சன், அட்லீ, அருண் மாதேஸ்வரன் என்று எல்லா இயக்குநர்களும் கொலைவெறியோடுதான் கோலிவுட்டை வலம் வருகிறார்கள்..``நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு?" என சினிமா விமர்சகர் ஆர்.எஸ்.அந்தணனிடம் கேட்டோம். “தியேட்டருக்கு போறப்ப டெட்டால், ஃபினாயிலெல்லாம் எடுத்துட்டுப் போகவேண்டியிருக்குது. ரஜினி சுடும்போது ரத்தம் நம்ம மேலே தெறிக்குது. விஜய் வெட்டுற வெட்டு, நம்ம தலையை துண்டாக்கிடுமோன்னு பயமா இருக்குது. ரஜினி, கமல் மாதிரியான சீனியர் ஹீரோக்களே கொஞ்சமும் சமூக அக்கறை இல்லாமல் இப்படி வன்முறை படங்களுக்குள் இறங்கியது வருத்தத்தை தருது.கமல்ஹாசன் அதைவிட பெரிய அதிர்ச்சியை தர்றார். எவ்வளவோ பரிசோதனை முயற்சியான சினிமாக்களை பண்ணி தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்துன மனுஷன் இப்படி வெட்டு, ரத்தம்னு போய் நிக்குறது ஏமாற்றத்தை தருது. `விக்ரம்' படம் கொடுத்த மாஸும் வசூலும் அவரை மயக்கியிருக்குது. இப்பகூட பாருங்க, அடுத்து அவர் ஹெச்.வினோத் இயக்கத்துல பண்ற படம் விவசாயம் தொடர்பான கதைன்னு சொன்னாங்க.ஆனா, அதை ஒதுக்கி வெச்சுட்டு துப்பாக்கி, ரத்தம்னு ஆக்சன் கதையைத்தான் கையில எடுக்கறார். லோகேஷை கேட்கவே வேண்டாம், அவரோட ஹீரோக்கள் ஊதித்தள்ளுற புகையில தியேட்டருக்குள்ளேயே மூச்சு திணறுது. ரத்தம், ஆயுதம், ஆபாசம் கிற வாசனையே இல்லாமல் நேர்த்தியா எடுக்கப்பட்ட எத்தனையோ படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடிச்சு வசூலை கொட்டியிருக்குது. ஆனா, இப்ப துப்பாக்கிய தூக்கிட்டு திரியுறது கதிகலங்க வைக்குது. இந்த நிலை கண்டிப்பாக மாறணும். அதுக்கு ஒரு மாஸ் ஆக்சன் படம் தோற்கணும்” என்று நிறுத்தினார.`தங்க மீன்கள்' போன்ற தரமான படைப்பைக் கொடுத்த தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரிடம் பேசியபோது, “அழகி, தங்கமீன்கள், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மாதிரியான இயல்பான படைப்புகள் காலாகாலத்துக்கும் கொண்டாடப்படும். லைப்ரரியில் வெச்சு பல தலைமுறைக்கு ரெஃபர் பண்ணப்படும். ஆனால் மாஸ், வசூலை வெச்சு எடுக்கப்படும் படங்கள் பாஸிங் கிளவுட்ஸ் மாதிரி நகர்ந்துடும்..கடந்த சில வருஷமா நம்ம சமூகத்துல துள்ளத்துடிக்க பல கொலைகள், கொலைவெறி தாக்குதல்களைப் பார்த்துட்டோம். இனியும் இப்படியான படங்களை எடுத்துட்டு இருந்தால் சமுதாய சூழல் இன்னும் மோசமாகிடும். வசூலை கொட்டிக் கொடுக்குற ரசிகர்களும் நல்லபடியா வாழணும்கிற அக்கறையும் பொறுப்பும் படைப்பாளிகளுக்கு இருக்குது. இயக்குநர்கள் நினைச்சா இதை மாத்த முடியும். ‘இந்த மாதிரி படங்களைத்தான் ரசிகன் விரும்புறான்’னு அவங்க தலையில பழியைப் போட்டுட்டு போகமுடியாது” என்கிறார்.இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீதான விமர்சனங்களுக்கு விளக்கம் கேட்டு அவரிடம் பேச முயற்சி செய்தோம். `` `லியோ’ போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள்ல பிஸியா இருக்கார்" என்ற பதிலே கிடைத்தது.`முள்ளும் மலரும்',`உதிரிப்பூக்கள்' போல முடியாவிட்டாலும் முள்ளாய் குத்தும் வன்முறைகளை கொஞ்சம் ஓரம்கட்டுங்க பாஸ்!