-பி.கோவிந்தராஜுகுருவை மிஞ்சிய சிஷ்யனாக அமைச்சர் சி.வி.கணேசன் ஆட்டம் காட்டிக்கொண்டிருப்பது, கடலூரில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தரப்பை ரொம்பவே கொந்தளிக்க வைத்திருக்கிறது. உதயநிதி பங்கேற்ற விழாவிலும் அது எதிரொலித்ததுதான் ஆச்சர்யம். ``என்ன நடந்தது?" என தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் கேட்டோம். “2014 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அனைத்து மாவட்டங்களையும் பிரித்தபோது கடலூர் மாவட்டத்தையும் தி.மு.க தலைமை பிரித்தது. அப்போது கிழக்கு மாவட்டச் செயலாராக எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை நியமித்தனர். மேற்கு மாவட்டச் செயலாளராக சி.வி.கணேசனை நியமிப்பதற்கு எம்.ஆர்.கே பரிந்துரை செய்தார். இதன்பிறகு இருவரும் இணைந்தே செயல்பட்டனர்..ஒருகட்டத்தில் சி.வி.கணேசனை அழைத்த கட்சித் தலைமை, ‘நீங்கள் தனியாகவே செயல்படலாம்’என அறிவுறுத்தியது. அன்று முதல் எம்.ஆர்.கே.வை ஓரம்கட்டிவிட்டு தனி ஆவர்த்தனம் நடத்தினார் கணேசன். கடலூரையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பன்னீருக்கு இது அதிர்ச்சியை கொடுத்தாலும், வெளிக்காட்டிக் கொள்ளவில்லை'' என்றவர்கள் தொடர்ந்து, அடுத்தடுத்த சம்பவங்களை அடுக்கினர். ``கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை தி.மு.க. அறிவித்தது. இந்தப் போராட்டத்தை விருத்தாசலம் அல்லது பண்ருட்டியில் நடத்திக்கொள்வதற்கு சி.வி.கணேசன் அனுமதி கேட்டார். அதை மறுத்து, எம்.ஆர்.கே. தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தலைமை அறிவுறுத்தியுள்ளது. சி.வி.கணேசனும் கலந்து கொண்டார்..இதற்குப் போட்டியாக தனது வலுவைக் காட்ட நினைத்தார், கணேசன். அதற்கு வாய்ப்பாக உதயநிதியின் கூட்டம் வந்து அமைந்தது. உதயநிதி பங்கேற்கும் இளைஞரணியின் கூட்டம், ஆகஸ்ட் 29-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. கூட்டத்தை வடலூரில் நடத்துவதற்கு எம்.ஆர்.கே. ஆயத்தமானார். இதனையறிந்த கணேசன், `எங்கள் மாவட்டத்துக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்' என்றார். இதற்கு உதயநிதியும் சம்மதித்தார். இதனால் உற்சாகமான கணேசன், கழுதூரில் உள்ள கல்லூரியில் நிகழ்ச்சிக்கான பந்தல்களைப் போடும் பணியை ஜரூராக நடத்தி முடித்தார். ஆகஸ்ட் 29-ம் தேதி கூட்டத்தில் பங்கேற்க வந்த உதயநிதியிடம் சேலம் மாநாட்டுக்காக 1 கோடி ரூபாயை கொடுத்தார், சி.வி.கணேசன். உடனே, தனது மாவட்டத்தின் சார்பில் இரண்டு கோடி ரூபாயை கொடுத்தார், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். இப்படி பொதுமேடையிலேயே இருவரும் போட்டி போட்டதைப் பார்க்க முடிந்தது. நிகழ்ச்சியில் பேசிய உதயநிதியும், ` இளைஞரணியினருக்கு வருங்காலம் வசந்தகாலமாக இருந்தாலும் நீட் தேர்வை ஒழிக்க நீங்கள் ஒவ்வொருவரும் உதயநிதியாக மாற வேண்டும்' என சூடேற்றிவிட்டுக் கிளம்பினார். இந்த ஆட்டத்தில் வென்றது பன்னீரா... கணேசனா?' எனப் பட்டிமன்றமே நடந்துவருகிறது" என்றனர் விரிவாக. போட்டி இருக்கலாம், பொறாமைதான் கூடாது!