`செந்தில் பாலாஜியை தொடர்ந்து அடுத்து யார்?' என அரசியல் வட்டாரத்தில் அனல் பறந்து கொண்டிருக்க, டேக் டைவர்சனாக வியாபாரிகளை அலறவைத்துக் கொண்டிருக்கிறது, அமலாக்கத்துறை. ஜி.எஸ்.டி செலுத்தாத வியாபாரிகளின் விவரங்களை அமலாக்கத்துறையிடம் நிதித்துறை ஒப்படைத்ததுதான் அதிர்ச்சிக்கான ஒன்லைன் காரணம். ``என்ன நடக்கிறது?'' என அமலாக்கத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். ``நிதி சார்ந்த வழக்குகளை விசாரிக்கும் மத்திய அரசின் முதன்மையான விசாரணை அமைப்புதான் அமலாக்கத்துறை. பண மோசடி, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்குகளை இது விசாரிக்கும். மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் வருவாய்த்துறைக்குக்கீழ் அமலாக்கத்துறை இயங்கி வருகிறது. `யார் மீது சந்தேகம் எழுகிறதோ?' அவர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையால் சோதனை நடத்த முடியும். அவர்களின் சொத்துகளை முடக்கி வைக்கவும் முடியும். தேவைப்பட்டால் சம்மந்தப்பட்டவர்களைக் கைது செய்யலாம். நாடு முழுவதும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் சோதனை நடத்துவதற்கு அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. அரசியல்வாதிகளைத் தொடர்ந்து வணிகர்களை நோக்கியும் அமலாக்கத்துறையின் கரங்கள் நீளத் தொடங்கியுள்ளன. இதன் பின்னணியில் சில காரணங்கள் உள்ளன. ஜி.எஸ்.டியை அதிகளவில் வசூல் செய்யக்கூடிய மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. அதேநேரம், மாதம் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஜி.எஸ்.டியில் ஏமாற்று வேலை நடப்பதும் தமிழகத்தில்தான். இதேபோல் மேற்குவங்கம், மகாராஷ்டிரா, டெல்லி உட்பட சில மாநிலங்களில் வரி ஏய்ப்பு நடக்கிறது. இதைத் தடுத்து உரியவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தும் வகையில் அமலாக்கத்துறை தன் கடமையை செய்யப் போகிறது. இதில், நேர்மையாக வரிகட்டக் கூடிய வணிகர்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை’’ என்றார் விரிவாக..மத்திய நிதித்துறையின் முடிவு குறித்து, வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவிடம் பேசினோம். ``அமலாக்கத்துறைக்கு வானாளாவிய அதிகாரம் இருக்கிறது. ஜி.எஸ்.டி வரிவிதிப்பு குறித்த ஆய்வில் அமலாக்கத்துறை உள்ளே புகுந்தால் வியாபாரிகளிடம் எந்தநேரத்திலும் அவர்களால் விசாரணை நடத்த முடியும். வியாபாரிகள் சரியாக வரி செலுத்தக்கூடியவர்கள்தான். உண்மையில், அரசுக்கு ஜி.எஸ்.டி வரியை செலுத்தக்கூடியவர்கள்தான் இப்படிப்பட்ட சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். ஜி.எஸ்.டி கட்டாதவர்கள் எளிதில் தப்பித்துவிடுகிறார்கள். `வியாபாரிகள் ஒழுங்காக ஜி.எஸ்.டி கட்டுகிறார்களா?' என்பதை பல்வேறு அமைப்புகள் மூலம் மாநில அரசு கண்காணித்து வருகிறது. ஜி.எஸ்.டியை அதிகம் செலுத்தும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இப்போது ஜி.எஸ்.டி வரி கண்காணிப்பை அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்தால் பல வியாபாரிகள் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வியாபாரிகள் மத்தியில் அச்ச உணர்வு அதிகரிக்கும். ஹவாலா மோசடிகளில் ஈடுபடுவோரை பிடிக்கவும் பணத்தைத் தவறான வழிகளில் குவிப்பவர்களை பிடிக்கவும் உருவாக்கப்பட்டதுதான் அமலாக்கத்துறை. வியாபாரிகளை விசாரிப்பதற்கு அவர்கள் தேவையில்லை. இதுதொடர்பாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மனு கொடுக்க இருக்கிறோம்'' என்றவர், வியாபாரிகளின் மனதில் இருக்கும் அச்சங்களைப் பட்டியலிட்டார். ``அதிகாரிகளைப் பொறுத்தவரை சட்டத்தைக் காட்டி பயமுறுத்துகிறவர்களும் இருக்கிறார்கள். எல்லாம் சட்டப்படி நடக்க வேண்டும் என நினைப்பவர்களும் இருக்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை ’குட்கா’ மற்றும் புகையிலைப் பொருட்களுக்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பிற மாநிலங்களில் இதே பொருட்கள் விற்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை குட்கா பொருட்களுக்கு தடை மட்டுமே இருக்கிறது. ஆனால், நடைமுறையில் ‘குட்கா’, புகையிலைப் பொருட்கள் தடையின்றி விற்கப்பட்டு வருகிறது. இதனை மொத்தமாக விற்பவர்கள் யார் என அதிகாரிகளுக்கு தெரியும். அதேபோல், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள் தமிழகத்துக்குள் டன் கணக்கில் வருகிறது..இந்த பேக்குகள் எங்கிருந்து வருகிறது என்பது அதிகாரிகளுக்கு தெரியும். ஆனால், கண்டுகொள்வது கிடையாது. அதேநேரம், சில்லறை வியாபாரிகள் வைத்திருக்கும் கேரி பேக்குகளுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கிறார்கள். ஜி.எஸ்.டிக்குள் அமலாக்கத்துறை அதிகாரிகள் நுழைந்தால் இதேதான் நடக்கும். தவறு செய்பவர்கள் மீது சட்டம் பாயட்டும். அதில் தவறில்லை. ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் வந்தால் எல்லா வரிகளையும் எடுத்துவிட்டு ’ஒரே வரி’ என்றார் மோடி. ஆனால் இன்று ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஜி.எஸ்.டி மூலம் வருகிறது. அனைத்து பொருட்களுக்கும் வரியை குறைத்து போட்டால் வருமானம் அதிகம் வரும். மக்களும் எல்லா பொருட்களுக்கும் ’பில்’ போட்டு வாங்குவார்கள். 140 கோடி கொண்ட இந்திய மக்கள் தொகையில் இன்று 40 சதவிகிதம் பேர்கூட ’பில்’ போட்டு வாங்குவது இல்லை. இதுதான் வேதனை. எனவே, வரிகளையும் சட்டங்களையும் எளிமைப்படுத்துங்கள். அப்போதுதான் சட்டத்தில் என்ன இருக்கிறது என்பது பொதுமக்களுக்கும் வணிகர்களுக்கும் தெரியவரும். இந்த சூழலில், ஜி.எஸ்.டிக்குள் அமலாக்கத் துறையை இறக்கினால் வணிகர்களுக்கு பேராபத்து ஏற்படும். இன்னும் 5 ஆண்டுகளில் 60 சதவிகித கடைகள்கூட இருக்காது. காரணம், ஏற்கனவே சொத்துவரி, மின் கட்டண வரி என பல வரிகள் உயர்த்தப்பட்டு மக்களை சோதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். மக்களிடம் பணம் இருந்தால்தான் அரசு செழிப்பாக இருக்கும். மக்களிடம் பணமே இருக்கக் கூடாது என நினைத்தால் என்ன செய்வது? ஜி.எஸ்.டிக்குள் அமலாக்கத்துறை நுழைக்கப்பட்டால் பாதிக்கப்படுவது வியாபாரிகள் மட்டும் அல்ல. பொதுமக்களும்தான். இந்தியாவில் இப்போது 25 கோடி வணிகர்கள் உள்ளனர். இதில், 15 கோடிப் பேர் அமலாக்கத்துறைக்குப் பயந்து ஓடிவிடுவார்கள். இதுதான் எதிர்காலத்தில் நடக்கப்போகிறது'' என்றார் கொதிப்புடன். விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்தான்! - கணேஷ்குமார்