`பூ பாதையா... சிங்கப் பாதையா?' என இந்தியாவுக்கு எதிராக லாவணி பாடிக் கொண்டிருக்கிறது, சீனா. இப்படியான சூழலில் இந்தியாவின் மசாலா பாதை திட்டம், சீனாவின் பட்டுப் பாதை திட்டத்துக்கு வேட்டு வைத்துவிட்டதாக வெளியாகும் தகவல்களால், பா.ஜ.க முகாமில் ஏகத்துக்கு உற்சாகம்!இந்தியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரேசில், பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட 20 நாடுகளை உறுப்பினர்களாகக்கொண்டு ஜி20 நாடுகளின் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. `வளர்ந்த நாடுகளும் வளர்கின்ற நாடுகளும் இணைந்து பொருளாதார சமநிலையை ஏற்படுத்த வேண்டும்' என்பதே இதன் நோக்கம்.ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் ஜி20 மாநாட்டுக்கு இந்த முறை இந்தியா தலைமையேற்றுள்ளது. டெல்லியில் செப்டம்பர் 9, 10 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்ற மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதில் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோ கலந்து கொண்டார். அதேபோல், சீன அதிபரும் வரவில்லை.காரணம், கடந்த வாரம் அருணாசல பிரதேசத்தை தனது மேப்பில் சேர்த்து வெளியிட்டது, சீனா. இரு தரப்புக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்ற பின்னரும் லடாக்கில் உள்ள படைகளை சீனா வாபஸ் பெறவில்லை. இதனால், பிரதமர் லீ கியோங்கை அனுப்பியிருந்தார், ஜி ஜின்பிங். மற்றபடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் உள்ளிட்ட 18 நாட்டு அதிபர்கள் மற்றும் பிரதமர்கள் கலந்துகொண்டனர்.பிரதமர் மோடியின் தீவிர முயற்சியால் ஜி20 இனி ஜி21 ஆகிவிட்டது. ‘55 நாடுகளைக் கொண்ட ஆப்பிரிக்க யூனியன், ஜி20 நாடுகளில் 21வது நாடாக இணைகிறது’ என்று மோடி அறிவித்ததும் அந்நாட்டு அதிபர் அசாலி அசவுமானி, பிரதமரை கட்டிப்பிடித்து அழுதேவிட்டார். அதிலும், மாநாட்டில் அறிவிக்கப்பட்ட `மசாலா பாதை' திட்டம்தான் ஹைலைட். டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவரிடம் இதுகுறித்துப் பேசினோம். “இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடம் என்பதே மசாலா பாதைத் திட்டம். அதாவது, இந்தியாவை மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் ரயில் மற்றும் கடல்வழியாக இணைக்கும் மெகா திட்டமாகும். இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா ஆகிய நான்கு நாடுகள் இதில் கையொப்பமிட்டுள்ளன.அந்தக் காலத்தில் இந்த தடம் வழியாகத்தான் இந்தியாவிலிருந்து மசாலாப் பொருட்கள் மேலைநாடுகளுக்கு சென்றன. அதனால், இதற்கு மசாலா பாதை என்று பெயர். இந்தியாவின் 60 சதவிகித வர்த்தகம், மும்பை நாவா ஷேவா துறைமுகம் மூலமே நடக்கிறது. இங்கிருந்து புறப்படும் கப்பல் சூயஸ் கால்வாயை கடந்துதான் ஐரோப்பாவுக்குள் நுழைய முடியும். இதற்கு நாற்பது முதல் அறுபது நாட்கள் வரை ஆகும்..மசாலா பாதை அமைக்கப்பட்டால் மும்பை முதல் துபாய் வழியாக சவூதி அரேபியாவை கடந்து 10 அல்லது 15 நாட்களில் ஐரோப்பாவுக்குள் சென்றடைய முடியும். இதனால் இந்தியாவுக்கு 40 சதவிகித செலவு மிச்சம். சொல்லப்போனால், மசாலா பாதை என்பது சீனாவுக்கு இந்தியா வைத்திருக்கும் செக்” என்றவர், அதைப் பற்றியும் விவரித்தார்.“பட்டுப்பாதை என்பது சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் கனவுத் திட்டம். 2013ம் ஆண்டு இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சீனாவின் பட்டுகளை ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டுபோய் வணிகம் செய்வதற்காக போடப்பட்டதே பட்டுப்பாதை. இந்தத் திட்டத்தில் 150 நாடுகளை இணைக்க ஒரு டிரில்லியன் டாலரை ஒதுக்கியது, சீனா. ஆனால், பத்து ஆண்டுகள் ஆகியும் பட்டுப்பாதையை போட முடியவில்லை. தவிர, பாகிஸ்தான், இலங்கை, ஆப்பிரிக்க நாடுகளை தனது கடன் வலையில் சிக்கவைத்து, அந்நாடுகள் திவாலாகவும் காரணமாகிவிட்டது.இதனால் சீனாவின் நோக்கத்தை உலக நாடுகளும் புரிந்துகொண்டு பட்டுப்பாதையைவிட்டு விலகிவருகின்றன. அந்தத் திட்டத்தில் சேர்ந்த ஒரே ஒரு ஐரோப்பிய நாடு இத்தாலி. அவர்களும், ஜி20 மாநாட்டில் கலந்துகொண்ட சீன பிரதமர் லீ கியோங்கிடம், ‘பட்டுப்பாதை திட்டத்திலிருந்து விலகிக் கொள்கிறோம்’ என்று கூறிவிட்டனர்.இதனால் வழக்கமாக அமைதி காக்கும் சீனா, ஜி20 மாநாட்டை பற்றி சீறித் தள்ளியுள்ளது. `ஜி 20 மாநாட்டை இந்தியா தனது சுயலாபத்துக்குப் பயன்படுத்திவிட்டது. தன்னை புரமோட் செய்வதற்காக இருபது நாடுகளை ஏமாற்றிவிட்டது. புதிய மசாலா பாதை திட்டத்தால் உலக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்' என சீனாவின் `குளோபல் டைம்ஸ்' எழுதியுள்ளது. இது இந்தியாவின் மீது காட்டப்படும் வன்மம். உலகின் தெற்கு என்றால் அது இந்தியாதான் என்பதை சர்வதேச சமூகத்துக்கு உரக்கத் தெரிவித்திருக்கிறார், பிரதமர் மோடி” என்கிறார், உற்சாகத்துடன்.பா.ஜ.க.வுக்கு பட்டுக் கம்பளம் விரிக்குமா, மசாலா பாதை? பார்ப்போம்! - அ.துரைசாமி