- பாபுபடங்கள் : ம.செந்தில்நாதன்மாமன்னனுக்கு இது சோதனைக் களம் மட்டுமல்ல... போர்க்களமும்கூட. ‘மாமன்னன்’ படம் தனக்கு மணிமகுடமாய் அமையும் என்று எதிர்பார்த்த அமைச்சர் உதயநிதிக்கு, அதுவே முள்கிரீடமாக மாறியிருக்கிறது. ‘மாமன்னன்’ படத்துக்கு எதிராக சாதி அமைப்புகள் தொடங்கி திரைத்துறையினர் வரை பலரும் வாள் வீச... இந்தப் போரில் உதயநிதி வெற்றிபெறுவாரா என்பதுதான் தமிழகமே எதிர்பார்க்கும் அரசியல் க்ளைமாக்ஸ்! இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்து வெளிவந்துள்ள படம் ’மாமன்னன்’. இதன் இசை வெளியீட்டு விழா கடந்த ஜூன் 1-ம் தேதி நடைபெற்றது. உதயநிதி, வடிவேலு, ஏ.ஆர்.ரகுமான் போன்றோர் கலந்துகொண்ட இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கமல்ஹாசனும் பங்கேற்றார்..திரி கிள்ளிய மாரி! இந்த நிகழ்ச்சியின் இறுதியில் மேடையேறிய மாரி செல்வராஜ், “மாமன்னன் படம் உருவானதற்குக் காரணமே ‘தேவர் மகன்’படம்தான். ‘தேவர் மகன்’ பார்க்கும்போது எனக்குள் வலி, விளைவுகள், அதிர்வுகள், பாசிட்டிவ், நெகட்டிவ் என அனைத்துமே ஏற்பட்டன. அந்த நாளை என்னால் கடக்க முடியவில்லை. சினிமாவாகப் பார்த்த ஒரு படம், சமூகத்தை எப்படி புரட்டிப் போடுகிறது? என்னவெல்லாம் செய்கிறது? அது சரியா, தவறா? என்றெல்லாம் உழன்று கொண்டிருந்தேன். அன்றைய காலகட்டத்தில் நடந்தவை எல்லாம் அப்படித்தான் ரத்தமும், சதையுமாக இருந்தன. இதை எப்படி புரிந்துகொள்வது? அப்படி ஒரு வலி” என்று பேசியிருந்தார். கமல்ஹாசன் முன்பாக நேருக்கு நேராக குற்றம்சாட்டிய மாரிசெல்வராஜிக்கு அப்போதே திரையுலகில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. கமல் ரசிகர்கள் பலரும் ‘தேவர் மகன்’குறித்த மாரிசெல்வராஜின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர். படத்தின் காட்சிகளை ட்விட்டரில் பகிர்ந்து அது தொடர்பான விவாதங்களில் ஈடுபட்டனர்..பொங்கிய பேரரசு! இயக்குநர் பேரரசு கவிதை வடிவில் மாரி செல்வராஜிக்கு பதிலடி கொடுத்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘நமக்குள் பேதங்கள் தோன்றவில்லை. ஏ.வி.எம். மெய்யப்பச் செட்டியார், வாகினி நாகிரெட்டி, தேவர் பிலிம்ஸ், சின்னப்ப தேவர், சிவஸ்ரீ பிக்சர்ஸ் மணி அய்யர்... இப்படி தயாரிப்பாளர்களை சாதியைச் சொல்லி அழைத்தபோது திரைத்துறையில் எந்தப் பிரச்னையும் இல்லை. குறத்தி மகன், தேவர் மகன், சின்னக் கவுண்டர், அய்யர் தி கிரேட் இப்படி சாதிப் பெயரில் படங்கள் வந்த போதும் எந்தப் பிரச்னையும் இல்லை. இன்று தொட்டதற்கெல்லாம் சாதிப் பிரச்னை! யார் காரணம்? சாதி, மதம் மறந்து கலைஞனாக மட்டுமே தன்னை அர்ப்பணித்தவர்களுக்குள் சாதி வெறியை வித்திட்டவர்கள் யார்? இன்று உடன் பணிபுரிபவரின் சாதியை எவனும் ஆராய்வதில்லை. மீண்டும் அந்த ஆராய்ச்சியை ஆரம்பித்து வைத்துவிடாதீர்கள்” என்று கடுமையாக சாடியது அந்தப் பதிவு..தியேட்டருக்கு மிரட்டல்! இந்த நிலையில் ’மாமன்னன்’ ஜூன் 29 அன்று வெளியாவதற்கு முந்தைய நாள் தமிழகம் எங்கும் பிரச்னை வெடித்தது. தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் சுற்றுப்பகுதிகளில் ’மாமன்னன்’ திரைப்படத்தை தடை செய்யக்கோரி தேனி மாவட்ட அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் சார்பாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. படத்தின் கதையோட்டம் தமிழகத்தில் சாதி பிரச்னைகளைத் தூண்டும் விதத்தில் அமைந்துள்ளதாகக் கூறி படத்தை தடை செய்யக்கோரி தேனி மாவட்ட அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியினர் போடி நாயக்கனூர் முக்கிய பகுதிகளில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். தேனியில் உள்ள வெற்றி திரையரங்கிற்கு ஜூன் 28-ம் தேதி நேரில் வந்து தேவர் அமைப்பினர், மாமன்னன் திரைப்படத்தை வெளியிடக்கூடாது என மிரட்டல் விடுத்தனர். இதைத் தொடர்ந்து கம்பத்தில் மாமன்னன் திரைப்படத்தை வெளியிடும் தியேட்டரை முற்றுகையிட இருசக்கர வாகனத்தில் சென்ற 30 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்..கொதிக்கும் சாதி அமைப்புகள் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவனிடம் பேசினோம். “நாட்டாமை, சின்னக்கவுண்டர், சேரன் பாண்டியன் என பல திரைப்படங்கள் தேவர் மகனைப் போன்று சாதிய அமைப்புகளின் பெயரில் திரைப்படங்களாக திரைக்கு வந்தன. இந்தப் படங்களில் சாதியை மையமாக வைத்தே கதை அமைந்திருந்தது. அப்போது எல்லாம் எந்த பிரச்னையையும் யாரும் எழுப்பவில்லை. ஆனால், ‘தேவர் மகன்’ படத்தை பொறுத்தவரை சாதிக்கு செருப்படி கொடுக்கும் வகையில்தான் படத்தின் கதை இருந்தது. தவிர, ‘தேவர் மகன்’ படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. ‘மாமன்னன்’ திரைப்படத்திற்காக மலிவான விளம்பரத்திற்காக இயக்குநர் மாரிசெல்வராஜ் முக்குலத்தோர் சமுதாயத்தை வம்புக்கு இழுக்கிறார். தற்போது சாதிகளை மறந்து சகோதர பாசத்துடன் பழகி வரும் நேரத்தில், பட்டியல் சமூகத்தைப் பின்புலமாகக் கொண்டு மாரி செல்வராஜ் படத்தை இயக்குவதை வாடிக்கையாகக் வைத்துள்ளார். மாரி செல்வராஜுன் நோக்கம் பணம் பண்ணுவதுதான் என்பது நன்றாகவே தெரிகிறது. அதற்காக அவர் உதயநிதியை பயன்படுத்திக்கொண்டார்” என்றார் கோபமாக..காவல் நிலையத்தில் புகார் நெல்லை மாநகர் மாவட்டம் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் இமானுவேல் இதுதொடர்பாக நெல்லை மாவட்டம், சுத்தமல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், ‘அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் சாதிக் கலவரத்தை தூண்டும்விதமாக தொடர்ந்து திரைப்படம் எடுக்கும் மாரி செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரால் தென் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ‘மாமன்னன்’ திரைப்படத்தை வெளியிட்டால் தென் மாவட்டங்களில் சாதிக் கலவரம் உருவாக வாய்ப்புகள் உள்ளது. சாதிக் கலவரத்தை தூண்டுவதற்கு மூளையாக செயல்படும் மாரி செல்வராஜ் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தில் வழக்கு சாதி ரீதியான உணர்வுகளைத் தூண்டும் விதமாக Ôமாமன்னன்Õ படம் உள்ளதாகக் கூறி, அந்தப் படத்துக்கு எதிராக நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜூன் 28-ம் தேதி மனு தாக்கல் செய்திருக்கிறார். அதில், ‘இரு சமூகங்கள் இடையே மோதல் போக்கு ஏற்படும் வகையில் Ôமாமன்னன்Õ பட காட்சிகளை இயக்குநர் மாரி செல்வராஜ் அமைத்துள்ளார். இவர் ஏற்கெனவே கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து ‘கர்ணன்’ படம் மூலம் தென் மாவட்டங்களில் இரு சமூகத்தினருக்கு இடையே பதற்றமான சூழலை உருவாக்கி வைத்துள்ளார். எனவே, ‘மாமன்னன்’ திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கோரியுள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு வைத்த கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்த நீதிமன்றம், விரைவில் விசாரணைக்கு பட்டியலிட உள்ளது..ஓட்டுக்கு வேட்டு! இது ஒருபுறம் இருக்க, வாக்கு வங்கிக்கு வேட்டுவைத்துவிட்டதாகன் பதறுகிறார் தென் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவர்... “தேவர் கட்சியாக பார்க்கப்பட்ட அ.தி.மு.க., இப்போது கவுண்டர் கட்சியாக உருமாறியிருக்கிறது. இதனை தங்களுக்கு சாதகமாக ஆக்கி தேவர் சமூக வாக்குகளை ஒட்டுமொத்தமாக அறுவடை செய்ய திட்டமிட்டுத்தான் தி.மு.க. அமைச்சரவையில் தேவர் சமூகத்தவர்களுக்கு அதிக அங்கீகாரம் கொடுத்து காய்நகர்த்தியது. இப்போது, அதற்கும் ஆப்பு வைத்துவிட்டார்கள். பட்டியல் சமூக மக்களுக்கு ஆதரவான கதைக்களம் பொதிந்த இந்தப் படத்தில் நடிப்பதன் மூலம் அந்த சமூக வாக்குகளை வளைத்து விடலாம் என உதயநிதி நினைத்திருக்கலாம். ஆனால், தென்மண்டலம் மற்றும் டெல்டா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பெரும்பான்மை சமூகமாக இருக்கும் எங்கள் முக்குலத்தோர் வாக்குகளைப் பற்றி யோசித்திருக்க வேண்டாமா?” என்றார்..காவல்துறைக்கு முதல்வர் அட்வைஸ் ‘மாமன்னன்’ படத்திற்கு தென்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை உளவுத்துறை ஸ்டாலின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமல் இல்லை. படத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது மென்மையான போக்கை கடைப்பிடிக்குமாறு முதல்வர் ஸ்டாலினும் அறிவுறுத்தியுள்ளார். இதற்கிடையே படம் வெளியாவதற்கு முதல் நாள் இயக்குநர் மாரி செல்வராஜும் உதயநிதியும் கமல்ஹாசனை சந்தித்து இசை வெளியீட்டு விழாவுக்கு வந்து சிறப்பித்தமைக்கு நன்றி தெரிவித்து திரும்பினர். தொடர்ந்து மூவர் சந்திப்பு படத்தை தங்களது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வைரலாக்கினர். இதன் மூலமாவது கமல் ரசிகர்களின் கொதிப்பு அடங்கலாம் என்பது ‘மாமன்னன்’ படக்குழுவினரின் எதிர்பார்ப்பு. நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதே மாமன்னர்களின் முதல் கடமை!