-பொ.அறிவழகன்இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானல், இயல்பாகவே மனதுக்கு போதை தரும் இடம்தான் என்றாலும், அங்கு விளையும் ஒருவகை காளானை சாப்பிடும் இளைஞர்கள் 24 மணிநேரமும் மயக்கத்தில் கிடக்க, அதை தற்போது ஆன்லைன் ஆஃபர்களில் விற்கத் தொடங்கியிருப்பது அதிர்ச்சி ரகம்.கொடைக்கானலின் இதமான தட்பவெப்ப நிலையை அனுபவிப்பதற்கு உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அதேநேரம், இயற்கையாக விளையும் போதை வஸ்துகளை பயன்படுத்தவும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வந்து கொண்டிருப்பது பேராபத்தாக பார்க்கப்படுகிறது..கொடைக்கானலில் புல்வெளிகளிலும் காடுகளிலும் இயற்கையாக ஒருவகையான காளான் விளைகிறது. இங்கு கண்டறியப்பட்ட 400 வகையான காளான்களில் போதை காளானும் ஒன்று. இந்தக் காளான், இளைஞர்களை சுண்டியிழுப்பதால் இதனை 'மேஜிக் மஷ்ரும்' என்றே அழைக்கின்றனர்.கொடைக்கானல் சமூக செயற்பாட்டாளர் மைக்கேலிடம் பேசினோம். “உலகத்திலேயே சில இடங்களில் மட்டும்தான் இந்த போதை காளான் விளைகிறது. அது கொடைக்கானலில் அதிகமாக விளைகிறது. கொடைக்கானலுக்கு 1987ல் இருந்து அதிகளவில் இஸ்ரேலியர்கள் சுற்றுலா வந்தனர். அவர்கள் கட்டுப்பாடு இல்லாமல் சாமானியர்போல சுற்றித் திரிந்தனர்.அவர்கள்தான் மனோரஞ்சிதம் நீர்தேக்கப் பகுதியில் பைன் மரக்காட்டில் இந்த போதை காளானை கண்டறிந்து பயன்படுத்தினர். இந்த போதைக்காக நவம்பர் முதல் மார்ச் மாதம் வரையில் பெரிய குரூப்பாக தங்குவார்கள். இவர்களைத் தொடர்ந்து கேரளாவைச் சேர்ந்தவர்களும் கர்நாடகாவைச் சேர்ந்தவர்களும் வரத் தொடங்கினர்.குறிப்பாக, போதை காளானைத் தேடி இளைஞர்கள் அலையத் தொடங்கிட்டார்கள். இந்தக் காளான், போதைப் பட்டியலில் இல்லை என்பதால், காவல்துறையும் அதட்டி மிரட்டி அனுப்பும் சூழ்நிலைதான் இருந்தது. தற்போது, போதை வழக்காகவே பதிவு செய்து கைது செய்கிறார்கள். உள்ளூர் மக்கள் விற்பதையும் கட்டுப்படுத்தி வருகிறார்கள். போதை காளான் விற்பவர்களும் அதனை வாங்க வருபவர்களும் அவர்களுக்குள் எப்படியோ சிண்டிகேட் வைத்துள்ளனர்.இதுபோதாதென்று, ஆன்லைன் வியாபாரத்திலும் போதை காளான் கோலோச்சத் தொடங்கியுள்ளது. அப்படி ஆர்டர் செய்து வாங்கும் காளானை அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரை தண்ணீரில் சுண்டக் காய்ச்சினால் 100 மில்லி லிட்டராக மஞ்சள் கலரில் திரவம் கிடைக்கும். அதைக் குடிப்பவர்களுக்கு ராஜபோதை கிடைப்பதாக தகவல். இப்போது இதுதான் ட்ரெண்டிங். இளைஞர்களின் எதிர்காலத்தை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது” என்றார் வேதனையுடன்.ஆன்லைனில் போதை காளான் கிடைப்பது குறித்து கொடைக்கானல் டி.எஸ்.பி மதுமதியிடம் பேசியபோது, ``கொடைக்கானலில் போதை காளான் என்னவென்ற தெரியாத மலைக்கிராம மக்கள்தான் அந்த காளானை எடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி புரிய வைக்கிறோம். அண்மைக்காலமாக போதை காளானை வாங்குபவர்களையும் கைது செய்யத் தொடங்கியுள்ளோம். விரைவில் இதன் புழக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்துவோம்” என்கிறார் உறுதியான குரலில்.போதை காளானின் ஆட்டம் முடிவுக்கு வரட்டும்.