உதயநிதி நடிப்பில் அண்மையில் வெளியாகியுள்ள ‘மாமன்னன்’ படத்தில் காட்டப்பட்டுள்ள குறியீடுகளைக் கூட்டிக்கழித்துப் பார்த்தால் அவர் அருந்ததி இனத்தைச் சேர்ந்தவர் என்றே புரிந்துகொள்ளமுடிகிறது. அந்த அருந்ததி இன மக்களின் பிரதிநிதியான உதயநிதியின் தந்தை வடிவேலுவை ஆதிக்கசாதியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் எவ்வலவு இழிவாக நடத்துகிறார் என்று உரத்துப் பேசுகிறது படம். திரை நிலவரம் இப்படி இருக்க, நிஜ நிலவரம் ரிவர்ஸாக இருப்பதால் அருந்ததியர்களின் வாக்கு வங்கியானது இந்தநாடாளுமன்ற தேர்தலில் ஆளும் தி.மு.க.வுக்கு எதிர்திசையில் இருக்கப் போகிறது எனும் பரபரப்பு கிளம்பியுள்ளது..விவகாரத்தை விரிவாக பார்ப்போம்...தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகியமாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தில்தான் அருந்ததியர் இனமக்கள் மிகஅதிகமாக வசிக்கின்றனர்.இவர்களில் அதிகமானோர் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட அனைத்து வகைஉள்ளாட்சி அமைப்புகளிலும் துப்புரவு பணியாளர்களாக பணிபுரிகின்றனர்.இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மேற்கு தமிழக மாவட்டங்களில் இந்த மக்களின் பிழைப்பானது வேலைநிறுத்தம், போராட்டம் என்றே கழிகிறது.அரசு நிர்ணயித்த முழுமையான கூலியை சுரண்டாமல் கொடு! நியாயப்படி பணிநிரந்தரம் செய்! என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் ஏதோ ஒரு மாவட்டங்களில் நடந்து கொண்டே இருக்கின்றன. இதனால் அருந்ததியர் சமுதாயமக்கள் அரசு மீது மிக மோசமான வருத்தத்தில் இருப்பதாகவும், இது நிச்சயம் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு எதிராக ஒலிக்கும் ‘மாமன்னர்களின் ஓட்டு தி.மு.க.வுக்கு இல்லை’ என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.இது குறித்து ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் அதியமானிடம் நாம் பேசியபோது “ஆதிக்கசாதி மன உணர்வுள்ள அதிகாரிகள்தான் மெயின்பிரச்னையே. ஆதிக்கசாதி குடும்பங்களில் பிறந்து, வளர்ந்து, படித்து அரசு பதவிக்கு வரும் அதிகாரிகள் துவக்கத்தில் இருந்தே ஒடுக்கப்பட்ட மக்களை கீழ் நிலையில் வைத்தே பார்த்து பழகுறாங்க. அதிகாரம் தங்களோட கைகளுக்கு வந்த பின் தாங்களும் ஒடுக்கத் துவங்குறாங்க. அதேபோல் போல் கணிசமான ஆதிக்கசாதி அரசியல்வாதிகளும் அருந்ததியர் உள்ளிட்ட பட்டியலின மக்களை வெறும் வாக்கு எந்திரமாதான் பார்க்குறாங்களே தவிர அவங்களோட உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும் மரியாதை கொடுக்கும் பழக்கமே இல்லைங்க..மேற்கு மண்டல ஒன்பது மாவட்டங்களில் கொங்கு வேளாள கவுண்டர்களுக்கு நிகராக அல்லது அதற்கு அடுத்த அளவு எண்ணிக்கையில அருந்ததியர் இருக்கிறாங்க. ஆனால் இந்த எண்ணிக்கையை மிகமிக குறைச்சுக் காட்டிடத்தான் அரசியல்வாதிங்க துடிக்கிறாங்க. சமீபத்துல ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடந்துச்சு இல்லைங்களா, அங்கே அருந்ததியர் வாக்கு எண்ணிக்கை வெறும் மூவாயிரம்னு ஒரு பிம்பத்தை காட்டினாங்க. எங்களுக்கு கடுமையாக சந்தேகம் வந்துச்சு. உடனே களமிறங்கி ஆதாரங்களோடு அலசினால் சுமார் முப்பத்தைந்தாயிரம் பேர் அங்கே இருக்குறது புரிஞ்சுது. மேற்கு மண்டலத்தில் மட்டும் அருந்ததியர்கள் பலலட்சம் எண்ணிக்கையில் இருக்கிறாங்க. இது மூலமா என்ன தெரியுதுன்னா எண்ணிக்கை அடிப்படையிலும் அருந்ததியர்களை மிக குறைச்சு காட்ட துடிக்கிறாங்க. எந்த வகையிலும் இந்த இனம் வளர்ந்துடக் கூடாதுங்கிறதுதான் ஆதிக்க நபர்களின் வெறியே..அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த சிரமங்கள் இப்பவும் இருந்தாலுமே கூட முதல்வர் ஸ்டாலினை நான் சந்தித்து இந்த மக்களின் மரியாதையையும், உரிமைகளையும் மீட்டு தர சொல்லி அடிக்கடி கேட்கிறேன். ஆனால் இடையில் நிற்கும் ஆதிக்கவெறி அதிகாரிகள்தான் அதை தடுக்குறாங்க! என்னபண்ண?” என்கிறார்.ஈரோடு மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்கள்நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நீலகிரி மாவட்ட செயலாளர் சகாதேவன்நம்மிடம் “துப்புரவு பணியாளர்களின் துயரங்களை ஒரு நொடி நினைத்தாலும் நமக்கு இதயம் வலிக்குமுங்க. மனித கழிவுகளை மனுஷனேஅகற்றும் நிலை இன்னும் தொடர்வதுதான் யதார்த்தம்! ஆனால் இவ்வளவு பெரிய தியாகம் பண்ணக்கூடிய மனிதர்களுக்கு குறைந்தபட்ச கூலியைகூட தருவதற்கு அதிகாரிகளுக்கு மனசு வர்றதில்லை, இந்தபணியாளர்களை பணிநிரந்தரம் பண்ணுவதுமில்லை. அரசாங்கம் 725 ரூபாயை குறைந்தபட்ச ஊதியமாக தற்காலிக துப்புரவு பணியாளர்களுக்கு அறிவிச்சிருக்குது. ஆனால் அதை வழங்குறதில்லை..துப்புரவு பணி செய்யும் அப்பாவோ, அம்மாவோ இறந்துட்டா மிகஉரிமையா அவர்களின் குழந்தைகளை ‘வாரிசு அடிப்படையில் வந்து வேலை பாரு’ன்னு சாக்கடைக்கு கூப்பிடும் அரசாங்க அதிகாரிகள், அந்தபிள்ளைகள் வேற நல்லபணிக்கு போகணும்னு ஒரு நாளும் உதவுறதில்லை. அடிமைகளை போல் இம்மக்கள் நடத்தப்படுறதைதான் அறவே எதிர்க்கிறோம். இதைஅரசியலா பார்க்க கூடாது, மனிதநேயத்தோடும், சகமனுஷனுக்கான உரிமையுமாக அணுகணும்”என்கிறார்.. கோவை, ஈரோடு மாவட்டங்களில் துப்புரவு பணியாளர்களின் போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்கும் வால்பாறை தனித்தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான அமுல் கந்தசாமி “தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற நேரத்தில் கொரோனா அலை உச்சம் தொட்டது. அப்ப உயிரை பணயம் வைத்து மாநிலத்தை காப்பாற்றியதுல டாக்டர்களுக்கு இணையா நின்னவங்க இந்த துப்புரவு பணியாளர்கள்தான். ஆனால் தி.மு.க. அரசாங்கம் அவங்களை குப்பையைவிட கேவலமா நடத்துகிறது. இந்த இரண்டு ஆண்டுகளாக கொங்கு மண்டலத்தில் அந்த மக்களின் வாழ்க்கை போராட்டத்துலேயேதான் போகுது. இதனால் வெறுப்பின் உச்சத்தில் இருக்கும் அருந்ததியர் உள்ளிட்ட பட்டியலின மக்களின் வாக்கு வங்கி நிச்சயமா இந்த தேர்தலில் தி.மு.க.வை புறக்கணிக்கும்” என்கிறார்..பட்டியலின மற்றும் சிறுபான்மையின மக்களுக்கான அரசு திட்டங்களை பெற்றுத்தரும் சேவை மையம் நடத்தும் ஊட்டி நகர தி.மு.க. செயலாளரான ஜார்ஜிடம் இது பற்றி கேட்டபோது “பட்டியலினமக்களுக்கு மிக முழுமையாக தோள்கொடுக்கும் நண்பராக இருக்கிறார் ஸ்டாலின். இதை பொத்தாம் பொதுவாக சொல்லலை. இனி மலக்குழி சாவுகளே தமிழகத்தில் நடக்கக்கூடாது, மனிதர்களை அதில் இறங்க அனுமதிக்காமல், மெஷினை கொண்டு தீர்வு காணுங்கள்னு மிக கடுமையான உத்தரவை பிறப்பிச்சிருக்கார். துப்புரவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தின் அளவு அதிகரிக்கப்பட்டிருப்பதும் கழகஆட்சியில்தான். துப்புரவு பணியாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசுக்கு எதிராக திசை திருப்ப முயலும் அ.தி.மு.க. கேவலமான அரசியல் செய்கிறது. இதில் மிக மோசமாக தோற்பார்கள்” என்கிறார்.சொல்லிக்கிட்டே இருந்தா போதாது. கதையல்ல நிஜம்னு களத்துல இறங்கி செஞ்சி காட்டுங்க பாஸ்._எஸ்.ஷக்தி