`பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மனித குலத்துக்கே ஓர் அவமானச் சின்னம்' என சட்டமன்றத்திலேயே சீறினார், முதல்வர் ஸ்டாலின். இதனை சீர்செய்ய வேண்டிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையமோ ஆழ்ந்த நித்திரையில் இருப்பதுதான் அதிர்ச்சியூட்டும் களநிலவரம். தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மாணவர்களிடையே சாதிய வன்முறைகள் தலைதூக்கத் தொடங்கியுள்ளன. திருநெல்வேலி நாங்குநேரி பள்ளி மாணவர்கள் நடத்திய சாதி வன்முறை, தூத்துக்குடி கழுகுமலைப் பள்ளி சாதி வன்முறை, ராணிப்பேட்டை சோளிங்கர் கல்லூரியில் நடந்த சாதி மோதல், கரூர் மாவட்ட பள்ளியில் அரங்கேறிய சாதிக் கொடுமை என நாளுக்குநாள் நடக்கும் சம்பவங்களால் கல்வித்துறையே களங்கப்பட்டு நிற்கிறது. `களஆய்வு நடத்தி குறைகளைக் களைய வேண்டிய தமிழக அரசின் குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் என்ன செய்து கொண்டிருக்கிறது?' என குமுதம் ரிப்போர்ட்டர் நடத்திய நேரடி ஆய்வில் கிடைத்த அதிர்ச்சிக் காட்சிகள் இதோ! ‘அமைதியாக கடந்து செல்லவும். இது, குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருக்கும் பகுதி’ என்கிற அறிவிப்பு பலகை மட்டும்தான் வைக்கப்படவில்லை. அப்படியொரு மயான அமைதியில் இருக்கிறது, சென்னை கீழ்ப்பாக்கம்-பூந்தமல்லியில் அமைந்துள்ள தமிழ்நாடு குழந்தை பாதுகாப்பு ஆணைய அலுவலகம்..கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார்கள், குழந்தை திருமணம் உள்ளிட்ட பிரச்னைகளைக் கண்காணித்து அரசுக்கு அறிக்கை கொடுக்க வேண்டிய அமைப்புதான், இது. தூங்கி வழியும் அலுவலகங்கள்கூட திங்கள்கிழமை என்றால் சற்று பரபரப்புடன் இயங்கும். ஆனால், குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய படிக்கட்டுகளில் ஏறி, முதல் தளத்துக்குச் சென்றபோது எந்த பரபரப்பும் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது. குறிப்பாக, ஆணைய தலைவரின் அறை, உறுப்பினர்கள் அறைகள் எல்லாம் பூட்டப்பட்டிருந்தன. அலுவலகம் திறந்திருக்க, உள்ளே நுழைந்து விசாரித்தோம். அங்கிருந்த சிலர், “இப்போதைக்கு இங்க யாரும் இல்ல. எல்லா போஸ்டிங்கும் காலியாத்தான் இருக்கு. சூப்பிரண்டண்ட் மெடிக்கல் லீவுல இருக்கார். ஜாயிண்ட் டைரக்டர், ஏ.ஓ என எல்லாம் போஸ்டிங்கும் காலிதான். யாருமே இல்லாததால அந்த அறைகளை பூட்டி வெச்சிருக்கோம்” என்றவரிடம், “எவ்வளவு நாள்களாக இந்த பதவிகள் எல்லாம் காலியாக உள்ளன?” என்று கேட்டபோது, “போன வருஷம் செப்டம்பர் மாதத்திலிருந்து இப்போவரைக்கும் கிட்டத்தட்ட ஒரு வருஷமா நிரப்பப்படலை” என்றார். “நாங்குநேரியில மிகப்பெரிய சாதி வன்முறை நடந்திருக்கு. சமீபத்துல கரூர்ல ஒரு சாதிய வன்முறை நடந்திருக்கு. கல்லூரிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்துகிட்டிருக்கு. இதையெல்லாம், நேர்ல போயி ரிப்போர்ட் கொடுக்கவேண்டிய பொறுப்பு இந்த ஆணையத்துக்குதானே இருக்கு?”என்றோம். “ஆமாம். தலைவர், உறுப்பினர்கள் யாருமே இல்லாததால போக முடியல. அவங்க இருந்திருந்தாங்கன்னா மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள்கிட்ட பேசிட்டு நேர்ல போயி விசாரிச்சிருப்பாங்க” என்று தங்களது இயலாமையை வெளிப்படுத்தினர்..``ஏன் இப்படியொரு அவலநிலை?" என சமூக ஆர்வலர்களிடம் கேட்டபோது, “ஆணையங்கள் என்றாலே அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருபவைதான். மகளிர் ஆணையம், குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஆகியவற்றில் அரசியல் கட்சிகளில் எம்.எல்.ஏ., எம்.பி. சீட் யாருக்கு கொடுக்கப்படவில்லையோ, அவர்களுக்குத்தான் இந்தப் பதவிகள் கொடுக்கப்படுகிறது. அ.தி.மு.க.வில் மகளிரணி பொறுப்பில் இருந்த, சரஸ்வதி ரங்கசாமியை இதற்குத் தலைவராக நியமனம் செய்தனர். ஜெயலலிதா இருக்கும்போதும் இவருக்கு இதே பதவி கொடுக்கப்பட்டது. அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஓய்வுபெற்ற நிர்மலா ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நிர்மலாவை நியமித்தனர். அவர் பதவியில் இருக்கும்போது ஓரளவுக்கு செயல்பட்டார். அதன்பிறகும் மறுபடியும் சரஸ்வதி ரங்கசாமியை நியமித்தனர். ஒரு மரபு என்னவென்றால், அரசியல்ரீதியான நியமனங்களில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதும் அவர்களே எழுதிக் கொடுத்துவிட்டுப் போய்விடுவார்கள். ஆனா, சரஸ்வதி ரங்கசாமி தலைமையிலான டீம், `இடத்தை காலி பண்ண மாட்டோம்' எனக் கூறிவிட்டு கோர்ட்டுக்குப் போனது. இதனால் தி.மு.க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இந்த ஆணையம் முறையாக செயல்படவில்லை. தமிழ்நாடு அரசும் நீதிமன்றத்தில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை முழு மூச்சாக செய்யவில்லை” என்கின்றனர். ``இதெல்லாம் எப்போது சரிசெய்யப்படும்?" என சமூக பாதுகாப்புத்துறை இயக்குனர் அமர் குஷாவாவிடம் கேட்டோம். “நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நடந்து வருகிறது. தமிழ்நாடு அரசும் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது” என்றவரிடம், ”ஆணையம் பத்து மாதங்களாக செயல்படவில்லை. தலைவர், உறுப்பினர்கள் தவிர்த்து மற்ற காலிப்பணியிடங்களை நிரப்பியிருக்கலாமே? எட்டு மாவட்டங்களில் குழந்தைகள் நலக் குழுமம் இல்லை. ஆறு மாவட்டங்களில் சிறார் நீதிக்குழுமம் இல்லை. கேரளத்தில் ஆண்டுதோறும் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு ஏழு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் 5 லட்ச ரூபாய்தான் ஒதுக்கப்படுகிறது இது சரியா?" எனக் கேள்விகளை அடுக்கியபோது, “விரைவில் இதுகுறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார், உறுதியான குரலில். குழந்தைகளுக்கு எதிரான குற்ற சதவிகிதம் ஆண்டுதோறும் அதிகரிப்பதாக அலாரம் அடிக்கிறது, தேசிய குற்ற ஆவணக் காப்பகம். தரவுகளைக் கவனித்தும் தாமதிப்பது பேராபத்தின் அறிகுறி. ``ஏன் இப்படியொரு அவலநிலை?" என சமூக ஆர்வலர்களிடம் கேட்டபோது, “ஆணையங்கள் என்றாலே அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருபவைதான். மகளிர் ஆணையம், குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஆகியவற்றில் அரசியல் கட்சிகளில் எம்.எல்.ஏ., எம்.பி. சீட் யாருக்கு கொடுக்கப்படவில்லையோ, அவர்களுக்குத்தான் இந்தப் பதவிகள் கொடுக்கப்படுகிறது. அ.தி.மு.க.வில் மகளிரணி பொறுப்பில் இருந்த, சரஸ்வதி ரங்கசாமியை இதற்குத் தலைவராக நியமனம் செய்தனர். ஜெயலலிதா இருக்கும்போதும் இவருக்கு இதே பதவி கொடுக்கப்பட்டது. அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஓய்வுபெற்ற நிர்மலா ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நிர்மலாவை நியமித்தனர். அவர் பதவியில் இருக்கும்போது ஓரளவுக்கு செயல்பட்டார். அதன்பிறகும் மறுபடியும் சரஸ்வதி ரங்கசாமியை நியமித்தனர். ஒரு மரபு என்னவென்றால், அரசியல்ரீதியான நியமனங்களில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதும் அவர்களே எழுதிக் கொடுத்துவிட்டுப் போய்விடுவார்கள். ஆனா, சரஸ்வதி ரங்கசாமி தலைமையிலான டீம், `இடத்தை காலி பண்ண மாட்டோம்' எனக் கூறிவிட்டு கோர்ட்டுக்குப் போனது. இதனால் தி.மு.க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இந்த ஆணையம் முறையாக செயல்படவில்லை. தமிழ்நாடு அரசும் நீதிமன்றத்தில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை முழு மூச்சாக செய்யவில்லை” என்கின்றனர். ``இதெல்லாம் எப்போது சரிசெய்யப்படும்?" என சமூக பாதுகாப்புத்துறை இயக்குனர் அமர் குஷாவாவிடம் கேட்டோம். “நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நடந்து வருகிறது. தமிழ்நாடு அரசும் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது” என்றவரிடம், ”ஆணையம் பத்து மாதங்களாக செயல்படவில்லை. தலைவர், உறுப்பினர்கள் தவிர்த்து மற்ற காலிப்பணியிடங்களை நிரப்பியிருக்கலாமே? எட்டு மாவட்டங்களில் குழந்தைகள் நலக் குழுமம் இல்லை. ஆறு மாவட்டங்களில் சிறார் நீதிக்குழுமம் இல்லை. கேரளத்தில் ஆண்டுதோறும் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு ஏழு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் 5 லட்ச ரூபாய்தான் ஒதுக்கப்படுகிறது இது சரியா?" எனக் கேள்விகளை அடுக்கியபோது, “விரைவில் இதுகுறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார், உறுதியான குரலில். குழந்தைகளுக்கு எதிரான குற்ற சதவிகிதம் ஆண்டுதோறும் அதிகரிப்பதாக அலாரம் அடிக்கிறது, தேசிய குற்ற ஆவணக் காப்பகம். தரவுகளைக் கவனித்தும் தாமதிப்பது பேராபத்தின் அறிகுறி. - மனோசெளந்தர்படங்கள்: கஸ்தூரி