‘லியோ’ரிலீஸுக்குப் பிறகுதான் தொடங்கப்படும் என்று சொல்லப்பட்ட ‘விஜய் 68’ மூன்று வாரங்கள் முன்னதாக, அக்டோபர் முதல் வாரத்திலேயே தொடங்கவிருக்கிறதாம். நாயகிகளாக பிரியங்கா மோகனும், சிநேகாவும் கன்ஃபர்ம் பண்ணப்பட்டுள்ள நிலையில், படத்தின் கதையைச் சொல்லி இன்னும் இரண்டு சர்ப்ரைஸ் ஸ்டார்களை உள்ளே கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. அதில் முதலாமவர் பிரபுதேவா மாஸ்டர். அடுத்த ஸ்டார், கைவசம் படம் இருக்கிறதோ இல்லையோ நிரந்தர டாப் ஸ்டாராக நிலைபெற்றுவிட்ட பிரசாந்த். # ‘அந்தகன்’க்காக வெச்ச கண்ணு மாறாம வெயிட்டிங் சார்!.இந்தியா முழுக்கவே எதிர்பார்த்ததைவிட அதிகளவில் முன்பதிவு குவிந்துள்ள நிலையில், படு உற்சாகமடைந்துள்ள ஷாருக், தன் மனைவி கவுரி, மகள் சுஹானாவுடன் செவ்வாயன்று அதிகாலை திருப்பதி சென்று வழிபட்டார். தொடக்கத்தில் பட புரமோஷனுக்கு ஆஜராக சுணக்கம் காட்டிய நயன்தாரா சமீபத்தில் ஷாருக்குடன் ராசியான நிலையில் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் ஆஜராகி ஷாருக்கானுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ஆயிரம் கோடி அள்ளிய ‘பதான்’வசூலை ‘ஜவான்’முறியடிக்க வேண்டும் என்பதற்குத்தான் இந்த திருப்பதி தரிசனமாம். # நயன், ஷாருக், ஜவான்… ஹை எல்லாமே மூன்றெழுத்து!.எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், சுனில் என்று ‘மார்க் ஆன்டனி’படத்தில் மூன்று முரட்டு வில்லன்கள் இருந்தாலும் மெயின் வில்லனே தந்தை மார்க்காக வரும் இன்னொரு விஷால்தானாம். வேறொரு உலகத்தில், பிரபல ரவுடியாக அட்ராசிட்டி புரிந்த மார்க்கை, இன்னொரு உலகத்தில் இருக்கும் மகன் ஆன்டனி காலத்தின் பின்னோக்கி டைம் டிராவல் செய்து பழி வாங்குவதுதான் இப்படத்தின் கதையாம். குழப்பமாக இருக்கிறதா? அதாவது டைம் டிராவல், சயிண்டிஃபிக், க்ரைம் த்ரில்லர், ரிவெஞ்ச் பாணி கதையாம். அச்சச்சோ, இன்னும் அதிகமாகக் குழம்பியிருப்பீர்கள். # மார்க் மை வேர்ட்ஸ்...பாவம் படத்தின் எடிட்டர்.. ‘கங்குவா’ படத்துக்குப் பிறகு சுதா கொங்கரா அல்லது நெல்சன் இயக்கத்தில்தான் சூர்யா நடிக்கவிருக்கிறார் என்று செய்திகள் பரவிவரும் நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படம்தான் அவரது அடுத்த படப்பட்டியலில் முதல் இடத்தில் நிற்கிறது என்கிறார்கள். ‘விடுதலை 2’வின் இறுதிக் கட்ட ஷெட்யூலில் பிசியாக இருக்கும் வெற்றிமாறன் அநேகமாக டிசம்பருக்குள் அப்படத்தின் மொத்தப்பணிகளையும் முடித்து விட்டுவிடுதலையாகி விடுவார் என்கிறார்கள். அதே டிசம்பரில் ‘கங்குவா’ படப்பணிகள் முடிந்து சூர்யாவும் வாடிவாசல் வந்துசேர, அடுத்த வருட மார்ச் அல்லது ஏப்ரலில் படப்பிடிப்பு துவங்கக்கூடும். # துள்ளிக்கிட்டு கிளம்பும் ஜல்லிக்கட்டு!.சீக்ரெட்தனியார் தொலைக்காட்சியில் வெளியான ‘ஜவான்’ ஆடியோ நிகழ்ச்சியில் நடிகர் விஜய் குறித்து இயக்குநர் அட்லீ புகழ்ந்து பேசியது அத்தனையும் நறுக்கப்பட்டு ஒளிபரப்பானது. ஏன் என்று பின்னணியை விசாரித்தால், “ராஜ்கமல் நிறுவனத்துக்கு படம் நடித்துத் தரச் சொல்லிக் கேட்டபோது ‘வாய்ப்பில்லை ராஜா’ என்று விஜய் மறுத்துவிட்டாராம். அதனால்தான் இந்த பட்டப்பகல் இருட்டடிப்பு…” என்கிறது கோடம்பாக்கம் பட்சி!