Reporter
லைட்மேன் : ரசிகர்களைக் கண்டிக்காத விஜய், ரஜினி அப்செட் !
சுமார் ஒரு வாரம் முன்புவரை, வழக்கமான இமயமலை பயணம் செல்லும் எண்ணம் ரஜினிக்கு இருக்கவில்லையாம். கமல் விக்ரமுக்கு அடித்ததுபோல் தியேட்டர் விசிட் எல்லாம் அடித்து ஜெயிலரை புரமோட் பண்ணவே விரும்பியிருந்தார். ஆனால் ஆடியோ நிகழ்வில் பேசப்பட்ட காக்கா, கழுகு கதை பூதாகரப்படுத்தப்பட்டு இவரது பெயர் ஓவராக டேமேஜ் செய்யப்படுவதால், நமது நிம்மதியைக் காலி பண்ணிவிடுவார்கள் என்று பயந்தே பயணத்துக்கு ஆயத்தமானாராம்.