’லியோ’ படத்தில் தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக கவுதம் வாசுதேவ மேனன், மிஷ்கின், எஸ்.ஜே. சூர்யா, அமரர் மனோபாலா, அர்ஜுன், மன்சூர் அலிகான்,ஒரு சிறு வேடத்தில் தலைகாட்டும் வகையில் லோகேஷ் கனகராஜ் உள்பட பத்துக்கும் மேற்பட்ட இயக்குநர்கள் நடித்திருக்கிறார்கள். ஜூன் மாதம் இறுதியிலேயே விஜய் தொடர்பான காட்சிகள் முடிக்கப்பட்டு அவர் கிளம்பிவிட்டார். இனி மற்ற நடிகர்களுக்கான குட்டி குட்டி காட்சிகள் பத்து நாட்கள் வரை ஷூட் செய்யப்பட்டு ஜூலை மத்தியில் பூசணிக்காய் உடைக்கிறார்கள். நவம்பர் 12ல் தீபாவளிக்கு மூன்று தினங்கள் முன்னதாக நவம்பர் 9ம் தேதி ‘லியோ’திரைக்கு வரவிருக்கிறது. # தியேட்டர் ரீலிஸ் சரி... ஓட்டர்ஸ் ரிலீஸ் எப்போ?.தாத்தா வயதிலும் தாதா வேடங்களில் மிரட்டிவரும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலையா தனது 109 வது படத்தை விரைவில் தொடங்கவிருக்கிறார். ஸோ வாட் என்கிறீர்களா? நம்மை லைட்டாக தொந்தரவு செய்யும் சமாசாரம் இப்படத்தில் நடக்கவிருக்கிறது. ஏற்கெனவே இணைந்து 3 தரமான ஹிட் கொடுத்த ஜோடி என்கிற அடிப்படையில், இப்படத்துக்கு நாயகியாக நம்ம நயன்தாராவை அப்ரோச் செய்திருக்கிறார்கள். முதலில் சற்று தயங்கிய நயன், சம்பளமாக பத்து விரலையும் காட்டியதும் ’சட்டுபுட்டுன்னு பாதி அட்வான்ஸோட வாங்க’என்று ஓ.கே.சொல்லிவிட்டாராம். # பாலய்யா ஏமய்யா இதி? தன் தம்பி ஆதித்யா இயக்கியுள்ள ‘டெவில்’படத்தின் மூலம் இசையமைப்பாளராக மாறியுள்ள மிஷ்கின், பாடல்கள் தயாரானதும் முதல் நபராக இளையராஜாவுக்குப் போட்டுக்காட்டி அபிப்ராயம் வாங்க ஆசைப்பட்டாராம். ஆனால் ராஜாவோ, மிஷ்கினை சந்திக்க எட்டுக்கட்டையில் நின்று முட்டுக்கட்டை போட்டாராம். பேட்டிகளில் ’எனது ஞானத்தாய் இளையராஜா’என்று புகழ்ந்து தள்ளும் மிஷ்கினை ராஜா ஒதுக்கி வைக்க என்ன காரணம் என்பது பலருக்கும் தெரியாது. ‘பிசாசு’ பாடல்கள் ரிலீஸாகி செம ஹிட்டடித்த நிலையில், ‘அத்தனை பாடல்களிலும் என் பங்களிப்பு கணிசமாக உள்ளது’ என்று தனது நெருங்கிய வட்டாரத்தில் மிஷ்கின் டமாரம் அடித்தது ராஜாவின் காதுக்குப் போனது. அப்புறம் சொல்லவும் வேண்டுமா? # பின்பாட்டு பாடச் சொன்னா முன்பாட்டு பாடியிருக்காரு! ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் தனுஷின் ‘மில்லர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட ரிலீஸுக்கு முன்னர் தனுஷுக்கு பெரும் பஞ்சாயத்து ஒன்று காத்திருக்கிறது. பஞ்சாயத்தைக் கூட்டவிருப்பவர் சாட்சாத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமியேதான். அவருக்கு ஒரு படம் பண்ணித் தருவதாக, போயஸ் கார்டனில் வீடு கட்டிக்கொண்டிருந்தபோது பெருந்தொகை ஒன்றை அட்வான்ஸ் வாங்கிய தனுஷ், காலங்கள் பல கடந்தும் கால்ஷீட் தராமல் இழுத்தடித்து வருவதை ஒட்டித்தான் இந்தப் பஞ்சாயத்து. மில்லருக்கு அடுத்து வருவது சன் பிக்ஸர்ஸ் படம் என்பதால், அதற்கு முன்பே தனுஷை தன் வழிக்குக் கொண்டுவரும் முடிவில் உறுதியாக இருக்கிறாராம் முரளி. # கண்டா வரச் சொல்லுங்க!.சீக்ரெட்ஐ.டி விங்கில் அறப் பணியாற்றிக்கொண்டிருக்கும் அனைத்து ஆபிஸர்களும் அடுத்த பத்து நாட்களுக்கு மன்னருக்கு எதிராக வரும் விமர்சனங்களுக்கு சுடச்சுட பதிலடி கொடுத்தால் போதும். பத்து நாட்கள் நோ அரசியல் ஆக்ட்டிவிட்டீஸ் என்று தண்டோரா போடப்பட்டுள்ளதாம். ஸோ அந்தப் படத்துக்கு எதிராக கமென்ட் போட்டால் கடி நிச்சயம்!