விநாயகசதுர்த்தி விடுமுறையை முன்வைத்து செப்டெம்பர் 15ம் தேதி அன்று பி.வாசு, ராகவா லாரன்ஸ் கூட்டணியின் ‘சந்திரமுகி 2’ விஷால், எஸ்.ஜே. சூர்யா கோஷ்டியின் ‘மார்க் ஆன்டனி’ஆகிய இரு மெகா பட்ஜெட் படங்கள் மோதுவதாக இருந்தன. யாரும் எதிர்பாராத வகையில் கிராஃபிக்ஸ் பணிகள் தாமதமாவதால் இன்னும் கொஞ்சம் தாமதமாக வரவிருப்பதாக ‘சந்திரமுகி 2’ தயாரிப்பு நிறுவனம் அறிவிக்க, அதே நிறுவனம் போட்ட முட்டுக்கட்டையால் ‘மார்க் ஆன்டனி’ரிலீஸ் ஆவதும் சிக்கலாகியிருக்கிறது. ‘ எங்க பழைய பாக்கி 21 கோடியை எடுத்து வைச்சுட்டு ரிலீஸ் பண்ணுங்க’ என்று விஷாலை எதிர்த்து கோர்ட்டுக்குப் போயிருக்கிறது லைகா. 32 ஆண்டுகால நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக நல்ல சம்பளம் வாங்கி செட்டில் ஆக ஆரம்பித்திருந்தார் நடிகர் மாரிமுத்து. மதுரை, பசுமலைக்காரரான மாரிமுத்து, 1990ல் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தவர். பல ஆண்டுகள் உதவி இயக்குநர் வேலை பார்த்து ‘கண்னும் கண்ணும்,’, ‘புலிவால்’ என்ற இரண்டே படங்கள் இயக்கினார். இரு படங்களுமே வசூல்ரீதியாக வெற்றிபெறாத நிலையில் அவருக்கு நடிகர் அவதாரம் வெகுவாகக் கைகொடுக்க மளமளவென முன்னேறி வந்தார். எமனுக்குப் பொறுக்கவில்லை. ’விவசாயிகளை கமல்ஹாசனிடம் கூப்பிட்டுப் போய் அறிமுகப்படுத்தினது ஒரு குத்தமாய்யா? அதுக்காக கமலை விவசாயியா வச்சு ‘கடைசி விவசாயிக்கு முந்தின விவசாயி’ன்னு படம் இயக்கப்போறதா ஆளாளுக்கு செய்தி போடுறீங்க?’ என்று இயக்குநர் அ.வினோத் இனி புலம்பவேண்டியதில்லை. இரு தினங்களுக்கு முன் தங்களது ’எக்ஸ்’பக்கத்தில் 35 செகண்ட் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறது ராஜ்கமல் நிறுவனம். அதில் எந்திரத்துப்பாக்கியைக் கையில் எடுக்கும் கமல் நான்ஸ்டாப்பாக சுட்டுத்தள்ளிக்கொண்டேயிருக்கிறார். வினோத்தின் ‘துணிவு’படத்துக்கு ‘நோ கட்ஸ் நோ க்ளோரி’என்று டேக் லைன் வைத்தது போல கமல் படத்துக்கு ’கட்ஸ் & கன்ஸ்’என்று வைத்திருக்கிறார்கள். ஏற்கெனவே பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு தள்ளிபோய்க்கொண்டிருந்த சிவகார்த்திகேயனின் ‘அயலான்’வரும் தீபாவளிக்கு நிச்சயம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அதுவும் சந்தேகம்தான் என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம். இவ்வளவு கால தாமதத்துக்கு கிராஃபிக்ஸ், ஃபைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாகச் சொல்லப்பட்ட நிலையில், இம்முறை சற்று சர்ப்ரைஸிங்கான ஒரு காரணம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் அஜித், விஜய்க்கு அடுத்த இடம் யாருக்கு என்பதில் சி.கா., விஜய் சேதுபதி, சூர்யா, தனுஷ்களுக்கு மத்தியில் ஒரு போட்டி இருந்துவரும் நிலையில், இனி தனி ரிலீஸ் மட்டுமே நம்மை தனித்துக் காட்டும் என்ற முடிவில்தான் தீபாவளி ரேஸில் இருந்து ஒதுங்குகிறாராம் சிகா. சீக்ரெட் வெளிநாட்டில் முதல் கட்ட சிகிச்சை முடிந்து ஹைதராபாத் திரும்பியிருக்கும் அந்த நான்கெழுத்து நடிகை, தனது கவனத்தை அரசியல் பக்கம் திருப்பும் முடிவில் இருக்கிறாராம். ’சினிமா லைட்டுக்கு முன்னால ஒரு வருஷம் கழிச்சு இல்லை… எப்ப நின்னாலும் அலர்ஜி இருக்கவே செய்யும்’ என்று அயல்நாட்டு மருத்துவர்கள் அலெர்ட் கொடுத்திருப்பதால் இந்த அரசியல் முடிவு என்கிறார்கள்.