ரஹ்மானின் சென்னை இசை நிகழ்ச்சிக்கு ‘மறக்குமா நெஞ்சம்’என்று பெயர் வைத்தது ஆஹா என்ன பொருத்தம் என்று கொந்தளித்து வருகிறார்கள் நிகழ்ச்சிக்குப் போய் நொந்து திரும்பிய அவரின் ரசிகர்கள். 50 ஆயிரம் ரூபாய் டிக்கெட் எடுத்தவர்கள்கூட உட்கார இடம் கிடைக்காமல், காரை பார்க் செய்ய ஐந்தாறு கிலோ மீட்டர்களுக்கு அலைந்தது, பவுன்சர்கள் மற்றும் போலீசாரிடம் லத்தி அடி வாங்கியது என்று சமூகவலைதலங்களில் பொங்கிவருகிறார்கள். ஆனால், ரஹ்மான் கூலாக ‘பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் பாதுகாப்பாக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் காலம் எப்போதுதான் வரும் சென்னை?’ என்று பொத்தாம்பொதுவாக ஒரு பழியைப்போட்டுவிட்டு அடுத்த கச்சேரிக்குத் தயாராகிவருகிறார். அடுத்த கச்சேரிக்கு டைட்டில் ‘மன்னிப்பாயாவா? லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் அதிரடியாக வெளியிட்டுள்ள ‘தலைவர் 171’ முதல் அறிவிப்பிலேயே ஏகப்பட்ட சர்ச்சைகள். தனக்கு கொஞ்சமும் அவகாசம் கொடுக்காமல் செய்யப்பட்ட இந்த திடீர் அறிவிப்பால் அதிகபட்சம் கதிகலங்கிப்போயிருப்பவர் லோகேஷ்தான். ‘லியோ’வின் இறுதிக்கட்டப் பணிகளின்போது விஜய்யுடன் இருந்த சிறு மனக்கசப்பு இந்த அறிவிப்பால் இன்னும் பெரிதாகி படத்தைவிட்டே லோகேஷ் வெளியேறிவிட்டதாக கோடம்பாக்கம் முழுக்க வதந்திகள். ரஜினி முதலில் விஜய்யின் ‘பீஸ்ட்’பட இயக்குநர் நெல்சனைத் தூக்கினார். அடுத்து ‘லியோ’ பட இயக்குநர் லோகேஷைத் தூக்கியிருக்கிறார். அப்போ அடுத்த ஆபத்து விஜய்யின் தற்போதைய இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கா? என்று ஒரு ட்ரெண்டும் ஓடுகிறது! ‘ஒரே டிக்கட்டுக்கு 17 படத்தைக் காட்டிட்டாருய்யா அட்லி’என்று சமூகவலைதளங்களில் சகட்டுமேனிக்கு விமர்சிக்கப்பட்டாலும், நாடு முழுக்க, குறிப்பாக பாலிவுட்டில் செம கலெக்ஷன் பார்த்து வருகிறது ‘ஜவான்’. படம் 10வது நாளை கிராஸ் பண்ணும்போது ஷாருக்கானின் இதற்கு முந்தைய ஆயிரம் கோடி ரிக்கார்ட் வசூல் படமான தவானை இந்த ஜவான் ஜஸ்ட் லைக் தட் ஓவர் டேக் பண்ணும் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். ‘அடுத்த 4 மாதங்களுக்கு என் மகனுக்கு மட்டுமே கால்ஷீட்’ என்று ரெஸ்டை அறிவித்த அட்லீயை உடனே மும்பை கிளம்பி வரச்சொல்லி ஷாருக் அழைக்க, மகனைப் பிரிய மனமில்லாமல் மும்பைக்கு பயணம் சென்றிருக்கிறார் அட்லீ. கிஃப்டா ஃப்ளைட் வாங்கித்தருவாரோ? ‘ஆடவாரி மாடலுகே அர்த்தலே வேருலே’2007-ல் செல்வராகவன் இயக்கத்தில் வெங்கடேஷ், த்ரிஷா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த தெலுங்குப் படம்தான் பின்னர் தமிழில் ‘யாரடி நீ மோகினி’யானது. இந்தப் பழங்கதை இப்போ எதுக்கு என்கிறீர்களா? அந்தத் தெலுங்குப் படத்தை 2013ம் ஆண்டு மறுபடியும் தொலைக்காட்சியில் பார்த்த செல்வராகவன், ‘படத்தின் பார்ட் 2’ எடுக்கணும் போல ஆசையா இருக்கு’ என்று ஒரு ட்வீட் போட்டு, அதை த்ரிஷாவுடன் டேக் பண்ணவும் செய்திருந்தார். அந்த ட்வீட்டுக்கு, ட்வீட்டே எக்ஸ் ஆக மாறியுள்ள நிலையில் பத்தாண்டுகளுக்குப் பின்னர் இரு தினங்களுக்கு முன்னர் பதிலளித்துள்ள த்ரிஷா ‘செல்வா காரு நேனு ரெடி’ என்று பதில் அளித்துள்ளார். வாட் எ ஸ்பீட்? சீக்ரெட் தொடர்ந்து வெற்றிப்படங்களை மட்டுமே கொடுத்துவரும் இயக்குநர் துடுக்குப் பேச்சாளரின் யூடியூப் சேனலைத் திறந்துவைக்கச் சென்றதற்கு கலக ஐ.டி.விங்களர்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு மண்ணை வாரித்தூற்ற ஆரம்பித்தார்கள். அதைக் கண்ட சின்னவர், ‘இவ்வளவு காலமும் நம்மைத்தானே ஆதரித்தார். அந்த ஒரே செயலுக்காக ஓவர் ஆக்ட் பண்ணி அவரை அந்தப் பக்கம் திருப்பி விட்றாதீங்க’ என்று சவுண்டுவிடவே ஒப்பாரிகள் நிறுத்தப்பட்டன!