வாராவாரம் நேரில் சந்திப்பு, வாட்ஸ் ஆப்பில் குட்மார்னிங், குட்நைட் என இயக்குநர் அட்லி எடுத்த அட்டெம்ப்ட்டுகள் அத்தனையும் அட்டர்ஃபிளாப் ஆன நிலையில், ‘தளபதி 68’ இயக்குநராக திடீர் என்ட்ரி கொடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு. தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ். இசை யுவன். கடந்த வாரம் ரிலீஸான வெங்கட் பிரபுவின் ‘கஸ்டடி’தெலுங்கு, தமிழ் இரண்டிலுமே தோல்வியைத் தழுவி இருந்தாலும் அஜித்துக்கு ஒரு ’மங்காத்தா’ கொடுத்ததுபோல் தனக்கும் ஒரு மாஸ் ஹிட் கொடுப்பார் என்று அழுத்தமாக நம்புகிறாராம் விஜய். # அடுத்த மாநாட்டுக்கு ரெடி!குறைந்த திரையரங்குகளில் மட்டுமே ரிலீஸான ‘குட்நைட்’திரைப்படம் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டு, ஹிட்டாகியிருக்கிறது. காட்சிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் நாயகன் மணிகண்டனை பலரும் அடுத்த விஜய்சேதுபதி என்று பாராட்ட, விநாயக் சந்திரசேகரன் மோஸ்ட் வாண்டட் டைரக்டராகிவிட்டார். படம் ரிலீஸான மறுநாளே லைகா உட்பட ஐந்து நிறுவனங்களிலிருந்து படம் பண்ண அழைப்பு வந்திருக்கிறது. அத்தனை நிறுவனங்களுக்கும் பொறுப்பாக ஆஜரான வி.ச. ‘ “சத்தியமா அடுத்த படத்துக்கான கதையை நான் இன்னும் ரெடி பண்ணலை. கதையை ரெடி பண்ணிட்டு அட்வான்ஸ் வாங்கிக்கிறேன்” என்று ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார். # குட்மேன்..தமிழில், தான் நடிக்க விரும்பிய சில படங்களுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டதால், மலையாளத்தில் மம்முட்டியுடன் ‘காதல் த கோர்’ படத்தில் நடித்து முடித்த ஜோதிகா, அடுத்து ஸ்ட்ரெயிட்டாக இந்திப்படத்தில் கமிட் ஆகிவிட்டார். விகாஷ் பால் இயக்கத்தில் அஜய் தேவ்கன், மாதவன் நடிக்கும் இந்த இந்திப்படத்தின் இரு நாயகிகளில் ஒருவராக ஜோதிகா நடிக்கிறார். சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்ட இந்தி நடிகைகள் பலரும் வெப் சீரியல்கள் பக்கம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்திப் படங்களில் ஒரு ரவுண்டு வரலாம் என்று முடிவெடுத்தே மும்பைக்கு குடியேறினாராம் ஜோ. #ஜோர் தான்!சுமார் ஒன்றரைக் கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த ஐஸ்வர்யா ராஜேஷ், அடுத்து டபுள் மடங்கு சம்பளத்துக்கு ஜம்ப் ஆவதற்காக சில மாதங்கள் கதை கேட்காமலே காலம் கடத்தினார். அப்படி காலம் கடத்திய காலத்தில் அடுத்தடுத்து ரிலீஸான ‘த கிரேட் இண்டியன் கிச்சன்’, ‘டிரைவர் ஜமுனா’, ‘சொப்பன சுந்தரி’ஆகிய படங்கள் அடுத்தடுத்து படுத்துக்கொள்ளவே, அவரது கடைசி எதிர்பார்ப்பான ‘ஃபர்ஹானா’வும் சோபிக்கவில்லை. இஸ்லாமியர் தரப்பில் இருந்தும் முணுமுணுப்பு... இதனால் அப்செட் ஆனவர், யாரும் இல்லாத தனது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பை ஏற்பாடு செய்துவிட்டு, குடும்பத்தோடு துபாய்க்குக் கிளம்பிவிட்டார். # ஆர்.கே.சுரேஷை விசாரிச்சதா சொல்லுங்க மேடம்..சீக்ரெட்அன்னையர் தினத்தன்று சிறந்த அம்மாவுக்காக, சொந்த கணவரிடமிருந்து ஃபுல் மார்க் வாங்கிய புண்ணியவதி, தனது திருமண நிகழ்வை ஓ.டி.டி தளத்துக்கு விற்றதுபோலவே ரெட்டைக் குழந்தைகளின் ஃபர்ஸ்ட் லுக், அப்பாவுக்குக் கொடுத்த ஃபர்ஸ்ட் கிக், அம்மாவுக்குக் கொடுத்த ஃபர்ஸ்ட் கிஸ் என்று சகலத்தையும் அவர்களது முதல் பிறந்தநாளன்று பிரித்து அதே ஓ.டி.டி-க்கு விற்க முடிவு செய்துள்ளார்களாம். #இந்த பூக்கள் விற்பனைக்குதான்!